| நஞ்சுண்ண வேண்டாவே ......அகப்பேய் நெஞ்சு மலையாதே .....அகப்பேய் | 1 |
| பராபர மானதடி .....அகப்பேய் தராதலம் ஏழ்புவியும் .....அகப்பேய் | 2 |
| நாத வேதமடி .....அகப்பேய் பாதஞ் சத்தியடி .....அகப்பேய் | 3 |
| விந்து நாதமடி .....அகப்பேய் ஐந்து பெரும்பூதம் .....அகப்பேய் | 4 |
| நாலு பாதமடி .....அகப்பேய் மூல மானதல்லால் .....அகப்பேய் | 5 |
| வாக்காதி ஐந்தடியோ .....அகப்பேய் ஒக்கம் அதானதடி .....அகப்பேய் | 6 |
| சத்தாதி ஐந்தடியோ .....அகப்பேய் மித்தையும் ஆகமடி .....அகப்பேய் | 7 |
| வசனாதி ஐந்தடியோ .....அகப்பேய் தெசநாடி பத்தேடி .....அகப்பேய் | 8 |
| காரணம் ஆனதெல்லாம் .....அகப்பேய் மாரணங் கண்டாயே .....அகப்பேய் | 9 |
| ஆறு தத்துவமும் .....அகப்பேய் மாறாத மண்டலமும் .....அகப்பேய் | 10 |
| பிருதிவி பொன்னிறமே .....அகப்பேய் உருவது நீரடியோ .....அகப்பேய் | 11 |
| தேயு செம்மையடி .....அகப்பேய் வாயு நீலமடி .....அகப்பேய் | 12 |
| வான மஞ்சடியோ .....அகப்பேய் ஊனமது ஆகாதே .....அகப்பேய் | 13 |
| அகாரம் இத்தனையும் .....அகப்பேய் உகாரங் கூடியடி .....அகப்பேய் | 14 |
| மகார மாயையடி .....அகப்பேய் சிகார மூலமடி .....அகப்பேய் | 15 |
| வன்னம் புவனமடி .....அகப்பேய் இன்னமும் சொல்வேனே .....அகப்பேய் | 16 |
| அத்தி வரைவாடி .....அகப்பேய் மித்தையாங் கண்டாயே .....அகப்பேய் | 17 |
| தத்துவம் ஆனதடி .....அகப்பேய் புத்தியுஞ் சொன்னேனே .....அகப்பேய் | 18 |
| இந்த விதங்களெல்லாம் .....அகப்பேய் அந்த விதம்வேறே .....அகப்பேய் | 19 |
| பாவந் தீரவென்றால் .....அகப்பேய் சாவதும் இல்லையடி .....அகப்பேய் | 20 |
| எத்தனை சொன்னாலும் .....அகப்பேய் சித்து மசித்தும்விட்டே .....அகப்பேய் | 21 |
| சமய மாறுமடி .....அகப்பேய் அமைய நின்றவிடம் .....அகப்பேய் | 22 |
| ஆறாறும் ஆகுமடி .....அகப்பேய் வேறே உண்டானால் .....அகப்பேய் | 23 |
| உன்னை அறிந்தக்கால் .....அகப்பேய் உன்னை அறியும்வகை .....அகப்பேய் | 24 |
| சரியை ஆகாதே .....அகப்பேய் கிரியை செய்தாலும் .....அகப்பேய் | 25 |
| யோகம் ஆகாதே .....அகப்பேய் தேக ஞானமடி .....அகப்பேய் | 26 |
| ஐந்துதலை நாகமடி .....அகப்பேய் இந்த விடந்தீர்க்கும் .....அகப்பேய் | 27 |
| இறைவன் என்றதெல்லாம் .....அகப்பேய் அறைய நீகேளாய் .....அகப்பேய் | 28 |
| கண்டு கொண்டேனே .....அகப்பேய் உண்டு கொண்டேனே .....அகப்பேய் | 29 |
| உள்ளது சொன்னாலும் .....அகப்பேய் கள்ளமுந் தீராதே .....அகப்பேய் | 30 |
| அறிந்து நின்றாலும் .....அகப்பேய் புரிந்த வல்வினையும் .....அகப்பேய் | 31 |
| ஈசன் பாசமடி .....அகப்பேய் பாசம் பயின்றதடி .....அகப்பேய் | 32 |
| சாத்திரமும் சூத்திரமும் .....அகப்பேய் பார்த்திடல் ஆகாதே .....அகப்பேய் | 33 |
| ஆறு கண்டாயோ .....அகப்பேய் தேறித் தெளிவதற்கே .....அகப்பேய் | 34 |
| எத்தனை காலமுந்தான் .....அகப்பேய் முத்தனு மாவாயோ .....அகப்பேய் | 35 |
| நாச மாவதற்கே .....அகப்பேய் பாசம் போனாலும் .....அகப்பேய் | 36 |
| நாணம் ஏதுக்கடி .....அகப்பேய் காண வேணுமென்றால் .....அகப்பேய் | 37 |
| சும்மா இருந்துவிடாய் .....அகப்பேய் சும்மா இருந்தவிடம் .....அகப்பேய் | 38 |
| உன்றனைக் காணாதே .....அகப்பேய் என்றனைக் காணாதே .....அகப்பேய் | 39 |
| வானம் ஓடிவரில் .....அகப்பேய் தேனை உண்ணாமல் .....அகப்பேய் | 40 |
| சைவ மானதடி .....அகப்பேய் சைவம் இல்லையாகில் .....அகப்பேய் | 41 |
| ஆசை அற்றவிடம் .....அகப்பேய் ஈசன் பாசமடி .....அகப்பேய் | 42 |
| ஆணவ மூலமடி .....அகப்பேய் கோணும் உகாரமடி .....அகப்பேய் | 43 |
| ஒன்றும் இல்லையடி .....அகப்பேய் நன்றிலை தீதிலையே .....அகப்பேய் | 44 |
| சும்மா இருந்தவிடம் .....அகப்பேய் எம்மாயம் ஈதறியேன் .....அகப்பேய் | 45 |
| கலைகள் ஏதுக்கடி .....அகப்பேய் நிலைகள் ஏதுக்கடி .....அகப்பேய் | 46 |
| இந்து அமிழ்தமடி .....அகப்பேய் இந்து வெள்ளையடி .....அகப்பேய் | 47 |
| ஆணல பெண்ணலவே .....அகப்பேய் தாணுவும் இப்படியே .....அகப்பேய் | 48 |
| என்ன படித்தாலும் .....அகப்பேய் சொன்னது கேட்டாயே .....அகப்பேய் | 49 |
| காடும் மலையுமடி .....அகப்பேய் வீடும் வெளியாமோ .....அகப்பேய் | 50 |
| பரத்தில் சென்றாலும் .....அகப்பேய் பரத்துக்கு அடுத்தஇடம் .....அகப்பேய் | 51 |
| பஞ்ச முகமேது .....அகப்பேய் குஞ்சித பாதமடி .....அகப்பேய் | 52 |
| பங்கம் இல்லையடி .....அகப்பேய் கங்கையில் வந்ததெல்லாம் .....அகப்பேய் | 53 |
| தானற நின்றவிடம் .....அகப்பேய் ஊனற நின்றவர்க்கே .....அகப்பேய் | 54 |
| சைவம் ஆருக்கடி .....அகப்பேய் சைவம் ஆனவிடம் .....அகப்பேய்! | 55 |
| பிறவி தீரவென்றால் .....அகப்பேய்! துறவி யானவர்கள் .....அகப்பேய்! | 56 |
| ஆரலைந் தாலும் .....அகப்பேய்! ஊர லைந்தாலும் .....அகப்பேய்! | 57 |
| தேனாறு பாயுமடி .....அகப்பேய்! ஊனாறு மில்லையடி .....அகப்பேய்! | 58 |
| வெள்ளை கறுப்பாமோ .....அகப்பேய்! உள்ளது உண்டோ டி .....அகப்பேய்! | 59 |
| அறிவுள் மன்னுமடி .....அகப்பேய்! அறிவு பாசமடி .....அகப்பேய்! | 60 |
| வாசியிலே றியதடி .....அகப்பேய்! வாசியில் ஏறினாலும் .....அகப்பேய்! | 61 |
| தூராதி தூரமடி .....அகப்பேய்! பாராமற் பாரடியோ .....அகப்பேய்! | 62 |
| உண்டாக்கிக் கொண்டதல்ல .....அகப்பேய்! கண்டார்கள் சொல்வாரோ .....அகப்பேய்! | 63 |
| நாலு மறைகாணா .....அகப்பேய்! நாலு மறை முடிவில் .....அகப்பேய்! | 64 |
| மூலம் இல்லையடி .....அகப்பேய்! மூலம் உண்டானால் .....அகப்பேய்! | 65 |
| இந்திர சாலமடி .....அகப்பேய்! மந்திரம் அப்படியே .....அகப்பேய்! | 66 |
| பாழாக வேணுமென்றால் .....அகப்பேய்! கேளாமற் சொன்னேனே .....அகப்பேய்! | 67 |
| சாதி பேதமில்லை .....அகப்பேய்! ஓதி உணர்ந்தாலும் .....அகப்பேய்! | 68 |
| சூழ வானமடி .....அகப்பேய்! வேழம் உண்டகனி .....அகப்பேய்! | 69 |
| தானும் இல்லையடி .....அகப்பேய்! தானும் இல்லையடி .....அகப்பேய்! | 70 |
| மந்திரம் இல்லையடி .....அகப்பேய்! தந்திரம் இல்லையடி .....அகப்பேய்! | 71 |
| பூசை பசாசமடி .....அகப்பேய்! ஈசன் மாயையடி .....அகப்பேய்! | 72 |
| சொல்ல லாகாதே .....அகப்பேய்! இல்லை இல்லையடி .....அகப்பேய்! | 73 |
| தத்துவத் தெய்வமடி .....அகப்பேய்! மற்றுள்ள தெய்வமெல்லாம் .....அகப்பேய்! | 74 |
| வார்த்தை அல்லவடி .....அகப்பேய்! ஏற்ற தல்லவடி .....அகப்பேய்! | 75 |
| சாத்திரம் இல்லையடி .....அகப்பேய்! பார்த்திடல் ஆகாதே .....அகப்பேய்! | 76 |
| என்ன படித்தால்என் .....அகப்பேய்! சொன்ன விதங்களெல்லாம் .....அகப்பேய்! | 77 |
| தன்னை அறியவேணும் .....அகப்பேய்! பின்னை அறிவதெல்லாம் .....அகப்பேய்! | 78 |
| பிச்சை எடுத்தாலும் .....அகப்பேய்! இச்சை அற்றவிடம் .....அகப்பேய்! | 79 |
| கோலம் ஆகாதே .....அகப்பேய்! சாலம் ஆகாதே .....அகப்பேய்! | 80 |
| ஒப்பனை அல்லவடி .....அகப்பேய்! அப்புடன் உப்பெனவே .....அகப்பேய்! | 81 |
| மோட்சம் வேண்டார்கள் .....அகப்பேய்! தீட்சை வேண்டார்கள் .....அகப்பேய்! | 82 |
| பாலன் பிசாசமடி .....அகப்பேய்! கால மூன்றுமல்ல .....அகப்பேய்! | 83 |
| கண்டதும் இல்லையடி .....அகப்பேய்! உண்டது வேண்டடியோ .....அகப்பேய்! | 84 |
| அஞ்சயும் உண்ணாதே .....அகப்பேய்! நெஞ்சையும் விட்டுவிடு .....அகப்பேய்! | 85 |
| நாதாந்த உண்மையிலே .....அகப்பேய்! மீதான சூதானம் .....அகப்பேய்! | 86 |
| ஒன்றோடு ஒன்றுகூடில் .....அகப்பேய்! நின்ற பரசிவமும் .....அகப்பேய்! | 87 |
| தோன்றும் வினைகளெல்லாம் .....அகப்பேய்! தோன்றாமல் தோன்றிவிடும் .....அகப்பேய்! | 88 |
| பொய்யென்று சொல்லாதே .....அகப்பேய்! மெய்யென்று சொன்னக்கால் .....அகப்பேய்! | 89 |
| வேதம் ஓதாதே .....அகப்பேய்! பாதம் நம்பாதே .....அகப்பேய்! | 90 |
மகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம் . ஸ்ரீ பட்டினத்தார் குடில் வண்ணார் பேட்டை தாளமுத்து நகர் தூத்துக்குடி - 628002 9944091910 , 8220981910 சிவமேஜெயம் அறக்கட்டளை பதிவு எண் 10/2016 , பட்டினத்தாருக்கு ஆலயம் எழுப்பவும், உழவாரப்பணி , கோசாலை , அன்னதானம் முதலிய நற்பணிகளுக்காக ஆரம்பித்திருக்கிறோம் . நல்லது சிவமேஜெயம். GPAY நம்பர் 9944091910 NAME : K MUTHUKRISHNAN BANK : AXIS BANK A/C NO : 920020052430287 BRANCH : TUTICORIN, IFSC CODE :UTIB0000105
வியாழன், மே 26, 2011
அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக