திங்கள், மே 30, 2011

64 சிவ வடிவங்கள் (41-52)

41. சேத்திரபால மூர்த்தி






ஆரம்பம் முடிவு இல்லாதவனும், ஆதியும் அந்தமும் கொண்டவனாகிய சிவபெருமானே பலகோடி உயிரினங்களைப் படைக்கின்ற பிரம்மனாகவும், உருத்திரனாகக் கொன்றும், மகேஸ்வரராக மறைந்தும், திருமாலாகி காத்தும், சதாசிவமூர்த்தமாகி அருள் செய்தும், இவ்வாறு மேற்கண்ட ஐந்தொழில்களையும் செய்து வருகிறார். அவர் அசைந்தால் மட்டுமே அசையும் உலகமனைத்தும் அவரது கட்டளையாகவே அனைத்துக் கோடி உயிரினங்களும், கோடிகோடியான அண்டங்களும் இயங்குகின்றது. அவரே அனைத்து மாசமுத்திரங்களையும் உருவாக்குபவர், முடிவில் அதனலேயே அழிப்பவர். தீவாந்திரங்களையும், ஈரேழு உலகத்தையும், ஆக்கவொண்ணா அண்டங்களையும் அவரே படைத்தார்,  படைக்கின்றார். அதுவொரு காலம். இந்த அண்டத்தினை ஒரு ஊழிக்காலமானது அலைகளால் மூடியது. அதில் மூழ்கியவை எட்டு பர்வத மலைகளையும் மூழ்கடித்ததுடன் அனைத்து பர்வதங்களையும் அழிக்கும்படி பெரும் வெள்ளம் தோன்றியது. அவ்வழி வெள்ளத்தில் நவகிரகங்கள் சூரிய, சந்திர, தேவர்குழாம், மகாநாகங்கள், எட்டு திசை காவலர்கள், கற்பகத்தரு, வாழ்வன, பறப்பன, ஊர்வன, மிருகங்கள், தாவரங்கள் மனிதர்கள், இந்திரன் என அனைவரும் அழிந்தனர். உலகிலுள்ள அனைத்து உயிரினங்களும் அழிந்துப்போயின நீண்ட நாட்கள் இந்நிலையேக் காணப்பட்டது.
பின்னர் மான், மழு ஏந்தி பாம்பு, புலித்தோலாடை அணிந்து கொன்றை மலர் சூடி நீலகண்டமும், நெற்றிக் கண்ணை மறைத்து, பார்வதியுடன், ஆயர்க்கலைகளையும் அழைத்து கொண்டு ஒரு படகில் ஏறிய சிவபெருமான் <உலகை ஒளியால் நிரப்பி, இருளை இருட்டடீப்பு செய்தார். அழிவுக்கு காரணமான வருணன் அவர்களை வணங்கி தம்பதி சமேதரான இறைவனுக்கும், இறைவிக்கும் முத்து, பவளம் கொண்டு அர்ச்சித்து ஆசிவேண்டினார். சிவபெருமான் அருளாசி வழங்கினார். பின்னர் வெள்ளத்தை ஒரு நொடியில் துடைத்தெரிந்தார். பின்னர் மாண்டுவிட்ட அனைவரையும் எழுப்பி அவரவர் பணியில் அமர்த்தி அனைத்து உயிரினங்களையும் காத்தருளி ஈரேழு உலகத்திற்கும் நேர்ந்த துன்பத்தைக் கலைத்தார். அனைத்து உயிர்களுக்கும் ஊழிக்காலத்தில் ஏற்பட்ட துன்பத்தைப் போக்கி அங்கிருந்த உயிர்களை காத்ததால் அவருக்கு சேத்திரபால மூர்த்தி என்றப் பெயர் ஏற்பட்டது. இவர் சேத்திரபாலபுரத்தில் உ<ள்ளார். இவரை இடைவிடாது தரிசிக்க எதிரிகளிடமிருந்து விடுதலைக் கிடைக்கும். அரக்க குணமுடையவர்களிமிருந்து நம்மையும், நம் சொத்துக்களையும் காப்பவர் இவரே. இவரது படத்தை தொழில் நடைபெறும் இடம், வீடுகளில் வைத்து வழிபட தீயவர்கள் ஓடுவார்கள். இவர்க்கு நவமுக ருத்திராட்ச அர்ச்õனையும், இனிப்பு நைவேத்தியமும் சனிக்கிழமைகளில் கொடுக்க நம்முடைய தொழில் விருத்தியடையும்



42. வீரபத்திர மூர்த்தி






தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் எப்பொழுதுமே இடைவிடாத போர் நடந்துக்கொண்டிருக்கும். இதனிடையே தேவர்கள் இந்திரனின் துணையுடன் அசுரர்களை போரில் தோற்கடித்து அவர்களின் உடலுறுப்புக்களைத் துண்டித்தனர். அசுரர்கள் தேவர்களை வெற்றி கொள்ள முடியாமல் தவித்தனர். அசுரர்கள் தங்கள் குருவான சுக்கிரனை ஆலோசித்தனர். அவரும் அசுரர்களுக்கு ஆலோசனைக் கூறித் தேற்றினார். முடிவில் சுக்கிரன் அசுரர்களில் வீரமார்த்தண்டன் என்பவனை அழைத்து நான்முகனை நினைத்து தவமியற்றச் சொன்னார். அதன்படியே வீரமார்த்தண்டன் கடுமையான தவமிருந்தான். தவத்தின் கடுமைத்தாங்காத நான்முகன் காட்சிக் கொடுத்தார். தவத்தினால் எலும்பும், தோலுமான வீரமார்த்தண்டனை பழையபடி ஆக்கி என்ன வேண்டுமெனக் கேட்டார். வீரமார்த்தண்டன் மூன்று உலகங்களையும் எனை வெல்ல யாருமில்லாதபடி நான் அரசாள வேண்டுமென்ற வரத்தை வாங்கினான். அதன்படி தேவர்களை, தேவபெண்டிரை துன்புறுத்தினான். தேவர்களை செய்தக் கொடுமை உச்சக்கட்டம் அடையவே பொறுக்கமுடியாத தேவர்கள் சிவபெருமானிடம் தஞ்சமடைந்தனர். சிவபெருமான் அவர்களுக்கு ஆறுதல் கூறி வீரபத்திரரை அழைத்தார். வீரபத்திரரும் தேவர்களின் துயர்துடைக்கவும், சிவபெருமான் ஆணையாலும் வீரமார்த்தண்டனை எதிர்க்க முடிவெடுத்தார். முதலில் வீரமார்த்தண்டனின் படைபலங்களைக் கொன்றார். பின்னர் வீரமார்த்தண்டனை போரிற்கு அழைத்து போரிட்டார். மிகக் கடுமையான போராக அது அமைந்தது, வீரமார்த்தண்டனும் பலவிதமான மாயைகளைச் செய்து தப்பிக்கப் பார்த்தான். ஆனால் கடைசியில் ஒன்றும் ஆகவில்லை. வீரபத்திரர் வீரமார்த்தண்டனைக் கொன்றார். பின்னர் தேவர்களின் துயரினைத் துடைத்து இந்திரன், நான்முகன் என அனைவரையும் பதவியில் அமர்த்தி உலக உயிர்கள் அனைத்திற்கும் சுகவாழ்வளித்தார். வீரமார்த்தண்டனைக் கொன்று தேவர்களின் துயர்துடைக்க சிவபெருமான் கொண்ட கோலமே வீரபத்திர மூர்த்தி யாகும்.
காரைக்கால் அருகே அமைந்துள்ளது பெருந்துறையாகும். செவ்வாய்தோஷ நிவர்த்திக்கு வாழ்க்கை முறைக்கு வேண்டிய மனஉறுதியைத் தருபவர் இவரே, சித்திரை மாச செவ்வாய்கிழமைகளில் வீரபத்திர விரதம் மேற்கொள்ள வேண்டும். செந்நிறமலர் அர்ச்சனையும் புளிசாத நைவேத்தியமும் திங்கள் அல்லது வியாழக்கிழமைகளில் கொடுக்க எதிரி புத்தி அதிகரிப்பு, சகோதரபாசம், குடும்ப ஒற்றுமை நீடிக்கும்.



43. அகோர அத்திர மூர்த்தி






சத்ததந்து என்றும் மன்னன் சிவனருளால் பல வரங்களைப் பெற்று தனக்கு நிகர் எவருமில்லை என வாழ்த்து வந்தான், அவனது செருக்கால் தான் சிவபெருமானுக்கு செய்த அர்ச்சனையே அனைத்திற்கும் காரணமென நினைத்தான். தான் ஒரு வேள்வி செய்ய எண்ணி தேவர்களையும், முனிவர்களையும் மேரு மலையடிவராத்திற்கு அழைத்து வேள்வி செய்யத் துவங்கினான். பின்னர் நான்முகனை அழைத்து "நீ வேள்வி செய் என்றான். இதனைக்கண்ட விஷ்ணு சிவபெருமானைத் தொழுதுதான் நீ குறைவில்லா செல்வத்தையும் எல்லா வளத்தையும் பெற்றாய். எனவே அவரை கண்டிப்பாக அழைக்க வேண்டு மென்றார். நான்முகனும், அதையே ஆமோதித்தார். பின் மற்ற அனைவருக்கும் இந்த யாகம் முறையற்றது என்றனர். இதனைக் கேட்ட சத்ததந்து மிகவும் ஆத்திரத்துடன் பற்களைக் கடித்து கோபப்பார்வைப் பார்தத்தான். இதனால் என்ன விளைவு ஏற்படுமோ என அனைவரும் பயந்தனர். இருப்பினும் அந்த வேள்வியை அவன் முடித்தான். இச்செய்தி நாரதர் மூலம் சிவபெருமானை அடைந்தது. கோபம் கொள்ளச் செய்தது இச்செய்தி. எனவே உடனே மண்டலத்தை தேராக்கி, உலகை சக்கரமாக்கி, அக்னியை வில்லாக்கி,சந்திரனை நாணாக்கி, வருணனை பாணமாக்கி, குமரனை தேரோட்டுபவனாக்கு போர்க் கருவிகளுடன் தன்னருகில் இருந்த வீரபத்திரரை நோக்கி சத்ததந்துவை அழித்து வரும்படி ஏவினார். அதற்கு அடிப்பணிந்த வீரபத்திரர் மேருமலையை அடைந்தார்.
இச்செய்தி தெரிந்த தேவர்குலம் நாலாபுறமும் சிதறித் தெரித்து ஒடினர். ஆனாலும் அனைவரையும் பிடித்து தான் நினைத்தபடி துன்புறுத்தினார். பின்னர் தனது வர்ணாஸதிரத்தால் வேள்வியை அழித்தார். உடன் சத்ததந்து கோப்பட, அவனையும் அகோர அஸ்திரத்தினால் கொன்றார். இவரது கோபத்தைக் கண்ட தேவ முனிவ, ரிஷிக்களின் மனைவியர் தங்கள் கணவரை தரும்படி வேண்ட, இறந்த வர பிழைந்தனர். பின் அவர்களை அவரவர்க்குரிய பதவியில் அமர்த்தினார். பின் வீரபத்திரர் சிவபெருமானிடம் சரணடைந்தார். அகோர அஸ்திரத்தினால் சத்ததந்து வேள்வியை அழித்துக் கொன்ற மூர்த்தமே "அகோர அத்திர மூர்த்தி எனப் பெயர் பெற்றது. இவரை திருவெண்காட்டில் காணலாம். இங்கு மட்டுமே இவரது திருவுருவம் <உள்ளது. மாசிமாத கிருஷ்ணபட்ச ஞாயிறு இரவு 12 மணிக்கு இவர் தேன்றினார். ஒவ்வொரு ஆண்டும் இதே நேரத்தில் சிறப்பு பூஜை நடைபெறும். மேலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவும் அகோர பூஜை நடைபெறுகிறது. இதில் கலந்துக் கொள்ள அவரது பூரண அருள் நமக்குக் கிட்டும். மேலும் வில்வம் அல்லது செவ்வரளி அர்ச்சனையும், பால் நைவேத்தியமும் திங்கள், பிரதோஷம் அன்றுக் கொடுக்க பகைவர் ஒழிவர். நீண்டகால வழக்கு பைசலாகும். தம்பதியருடையே ஒற்றமை அதிகரிக்கும்


44. தட்சயக்ஞஷத முர்த்தி






தக்கன் சிவபெருமானை மதியாது சிவநிந்தனையே இல்லாமலிருந்தான். இதனையறிந்தோர் தக்கனிடம் சென்று சிவபெருமான் ஒருவரே கடவுள் அவரை பகைக்க வேண்டாமென்றும், அவரை வணங்கி வரவும் பணித்தனர். இதைக்கேட்ட தக்கனும் கையிலை சென்றான். ஆனால் அங்கேயிருந்த கணநாதர் தக்கனை திருப்பியனுப்பினார். இதனால் மனம் நொந்த தக்கன் தன் தலைநகர் திரும்பி அனைவரிடத்திலும் கையிலையில் நடந்ததைக் கூறி சிவபெருமானை வணங்க வேண்டாமெனத் தடுத்தான். அதற்கு தேவர்குழாமும் ஒப்புக் கொண்டது, பிரமனைத் தவிர. ஒருமுறை பிரமன் யாகமொன்று நடத்த இருந்தான். அதற்கு அழைக்க சிவபெருமானை அழைத்துவர கையிலை சென்றான். அவரையும் அழைத்தான். அவரோ தனக்கு பதிலாக நந்திதேவரை அனுப்புவதாகக் கூறினார். அதன்படி யாகத்திற்கு நந்திதேவர் தனது பூத கணங்களுடன் சென்றார். இதனைக்கண்ட தக்கன் சிவபெருமானுக்கு அவிர்பாகம் கொடுக்காமல், திருமாலு<க்கு கொடுக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினான். இதனால் கோபமுற்ற பிரமன் தக்கனின் தலை துண்டாகவும், அவனது கூட்டாளிக்கு சூரபத்மனால் ஆபத்து உண்டு எனவும் சாபம் விடுத்தார். இதனால் அவ்வேள்வி தடைபட்டது. இதற்கிடையே தக்கன் ஒரு யாகம் நடத்த இருந்தான். அதனால் சிவபெருமானுக்கு அவிர்பாகம் கொடுக்காமல் நடத்த நினைத்தான். உடனே தத்சி முனிவர் அதுமுறையற்றது, சிவபெருமான் இன்றியாகம் செய்தல் கூடாது என்றார்.
பார்வதிதேவியும் அவிர்பாகம் பெற உக்கிரமாகாளி, வீரபத்திரர் உடன் வந்திருந்தார். பார்வதி தேவி கேட்டும் அவர்க்குரிய அவிர்பாகம் மறுக்கப்பட்டது. இதனால் தேவர்கள் அனைவரும் ஊமை போல் காணப்பட்டனர். இதனால் பெருங்கோபம் கொண்ட வீரபத்திரர் தனது தண்டத்தால் திருமாலை அடிக்க அவர் வீழ்ந்தார். பின் பிரமன் வீழ்ந்தார். வீரபத்திரர் சந்திரனைத் தன் காலடியில் தேய்த்தார். வீரபத்திரிரன் பூதகணங்கள் தக்கன் இருப்பிடம் யாகசாலை, கோட்டை, மதில் என அனைத்தையும் அழித்தனர். வீரபத்திரர் அனைத்து தேவர்களையும் துவம்சம் செய்தார். தேவகணங்களை வதைத்தார். தேவர்களின் மனைவியர், இந்திராணி, தக்கனின் மனைவியர் என அனைவரையும் பார்வதி தேவியும், காளியும் துவம்சம் செய்தனர். அனைவரும் ஏதாவது ஒரு குறைபாட்டுடன் இருக்கும்படி வீரபத்திரர் செய்தார். போர் உச்சத்தை அடைந்ததும் சிவபெருமான் தோன்றி வீரபத்திரரை சாந்தப்படுத்தினார். பார்வதியின் உத்தரவிற்கேற்ப மாண்ட அனைவரும் உயிர்பெற்றனர். தக்கனும் பிழைக்க வைக்கும்படி பிரமன் வேண்ட, உடனே வீரபத்திரர் ஒரு ஆட்டுத்தலை அவனுடலில் பொருத்தி அவனை உயிர்பித்தார். அவன் பார்வதி-சிவபெருமான் தரிசனம் பெற்று சிவகணங்களில் ஒன்றானான். சிவபெருமான் தன்னை வணங்காத தக்கனின் வேள்வியை அழிக்க எடுத்த மூர்த்தமே "தட்சயக்ஞஷத மூர்த்தி யாகும். தரங்கம்பாடி - செம்பனார் கோயில் அருகே உள்ளத் தலம் திருப்பறியலூர் ஆகும். இறைவன் திருநாமம் வீரட்டேசர் என்பதும், இறைவி திருநாமம் இளம்கொம்பனையாள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். வில்வார்ச்சனையும், பால் நைவேத்தியமும் திங்கள், பிரதோஷம் அன்று கொடுக்க பகைவர் தொல்லைத் தீரும். கோர்ட் வழக்கு சாதகமாகும். தம்பதியர் ஒற்றுமை ஒங்கும்.



45. கிராத மூர்த்தி (வேட மூர்த்தி)






பாரதப் போரில் பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் மேற்க் கொண்டிருந்தனர். அங்கே அவர்களின் குகைளை கேட்கவும், ஆலோசனைக் கூறவும், மேற்கொண்டு செய்ய வேண்டியதைப் பற்றிப் பேசவும் வியாசமுனிவர் கானகம் சென்றார். அங்கே பலவாராக இன்னல்பட்டுக் கொண்டிருந்த பாண்டவர்களுக்கு தேவையான ஆலோசனைகளைச் சொல்லியபடி வந்தார். அப்போது கௌரவர்களைப் போரில் வெல்வதற்கு வேண்டிய சக்திவாய்ந்த அஸ்திரத்தைப் பெற சிவபெருமானை நோக்கி தவமியற்றச் சொன்னார். அவரது வாக்குப்படியே குறிப்பிட்ட நல்லநாளில் தவம் செய்வதற்கு ஏற்ற உடையுடன், பொருளுடன் அர்ச்சுனன் வெள்ளி மலையை அடைந்தான். அங்கே வசிக்கும் முனிவர், ரிஷிகள், தேவகணத்தினரின் ஆசியுடன் அங்கு சிவபெருமானை மனதில் நினைத்து, வெந்நீரணிந்து இருகைகூப்பி, ஒரு காலை மடித்து நின்றவாறு தவம் செய்யலானான். அர்ச்சுனனின் தவத்தை சோதிக்க இந்திரன் விரும்பினான். ஆகவே தேவலோக நாட்டியக் கன்னிகளை அனுப்பி தவத்தைக் கலைக்கும்படி செய்தான். அவர்கள் அர்ச்சுனன் முன்பு பலவித நாட்டியமாடியும் தவம் கலையவில்லை.
தேவகணங்கள் மூலம் அர்ச்சுனனின் தவத்தை அறிந்த பார்வதிதேவி சிவபெருமானிடம் கூறினார். அப்போது சிவபெருமான் வேடராகவும், பார்வதி தேவி வேடுவச்சியாகவும், முருகன் குழந்தையாகவும், வேதங்கள் நான்கும் வேட்டை நாய்களாகவும், தேவகணங்கள் வேட்டுவக் கூட்டமாகவும் மாறியது. அர்ச்சுனன் தவம் செய்யும் இடத்தை அடைந்தனர். அங்கே அர்ச்சுனனின் தவத்தை கலைக்க முகாசுரன் பன்றியாக மாறி வேகமாக வந்தான். இதனைக்கண்ட சிவபெருமானும் பன்றி மீது அம்புவிட, அர்ச்சுனனும் பன்றி மீது அம்புவிட இதனால் தேவகணங்களாக வேட்டுவக் கூட்டத்தினர் ஒருவர் கொன்ற மிருகத்தை மற்றொருவர் சொந்தம் கொள்வதாகாது என்றனர். இதனால் வாய்ச்சண்டை முற்றியது. அர்ச்சுனனின் வில்லின் நாணை சிவபெருமான் அறுத்தார். பதிலுக்கு வில்லால் சிவனை அடித்தான் அர்ச்சுனன். அவ்வடி உலகஉயிர்கள் அனைத்தின் மீதும் பட்டது. உடன் சிவபெருமான் தம்பதி சமேதராய் காட்சிக் கொடுத்தார். அதற்கு பின் அஸ்திரத்தையும் (பாசுபதம்) பெற்றான், அர்ச்சுனனின் தவத்திற்கு இடையூரான முகாசுரனைக் கொல்ல சிவபெருமான் ஏற்ற வடிவமே "கிராத மூர்த்தி யாகும்.
குடவாசல் அருகே அமைந்துள்ள தலம் திருக்கொள்ளம் புதூர் ஆகும். அவ்வூரில் இத்தலத்தை "நம்பர் கோயில் என்றழைக்கின்றனர். இறைவன் பெயர் "வில்வாரண்யேஸ்வரர் இறைவி பெயர் அழகு நாச்சியார். இங்குள்ள அகத்திய தீர்த்தத்தில் நீராடி வில்லார்ச்சனை செய்ய பகையை எதிர் கொள்ளும் ஆற்றல் வரும். மே<<லும் செவ்வரளி அர்ச்சனையும், வெண்பொங்கல் அல்லது மிளகு அடை நைவேத்தியமும் செவ்வாய் அன்றுக் கொடுக்க பகைமை மறந்து நண்பராகும் பேறும், சொத்துச் சண்டையும் முடிவிற்கு வரும்



46. குரு மூர்த்தி






திருவாதவூரில் அவதரித்தவர் மாணிக்கவாசகர். அவர் சிறுவயதிலேயே வேதாகமங்களை நன்கு அறிந்தவரானார். இவரது சிறப்பையறிந்த மதுரை மன்னன் அரிமர்தனப்பாண்டியன் இவரை தனது அமைச்சராக்கி தென்னவன் பிரமராயன் என்றப் பட்டத்தையும் கொடுத்து மேலும் சிறப்பித்தார் மாணிக்கவாசகருக்கு திருவருள் புரிய வேண்டியிருந்தார். இந்நிலையில் அமைச்சராகவும், இறை தவமே முழுமூச்சாகவும் வாழ்ந்த மாணிக்கவாசகரிடம் வேண்டிய அளவு பொருள் கொடுத்து கீழ்கடல் பகுதிகளில் சென்று குதிரைகள் வாங்கிவரும்படி அனுப்பினார் மன்னன். அவர் திருப்பெருந்துறையை அடைந்தவுடன் அவருள் தன்னுடைய இறைவனுடன் ஐக்கியமானதுப் போல் ஒரு உணர்வு எழ, அனைத்திடங்களிலும் தேடினார். இறுதியில் குருமூர்த்தியைக் கண்டு வணங்கி பாடி துதித்து, பரவசப்பட்டு, ஆனந்தப்பட்டு, ஆவிஉருக, ஆனந்தக் கூத்தாடினார். அவர்க்கு திருஐந்தெழுத்தை உபதேசித்தார். பின்னர் குருமூர்த்தி மாணிக்கவாசகரை அங்கேயிருக்கச் சொல்லி மறைந்தார். அவரது சொல்லுக்கு கட்டுப்பட்ட அவர் அங்கேயேயிருந்தார். தன்னுடன் வந்த காவலர்களிடம் ஆடித்திருத்திங்களில் குதிரைகள் வருமென அரசனிடம் சொல்லும்படி அனுப்பினார். பின்னர் கொண்டுவந்தப் பொருள் அனைத்தையும் ஆலய திருப்பணிக்கே அர்ப்பணித்தார், அவர் சொல்லியது போல் குதிரையும் வரவில்லை, மாணிக்கவாசகரும் வரவில்லை. மன்னன் இந்நிலையில் ஓலை அனுப்பினார். அதற்கு பதில் மாணிக்கவாசகர் சிவபெருமான் கூற்றுப்படி ஆவணியில் குதிரைகள் வரும் என பதிலோலை அனுப்பினார். பின்னர் சிவபெருமான் மாணிக்கவாசகரின் கனவில் தோன்றி நீ முன் செல்க குதிரைகள் பின்வரும் என்றார். அதன்படி மாணிக்கவாசகர் முன் சென்று மன்னனிடம் சேர்ந்தார். பக்குவம் பெற்ற மாணிக்கவாசகருக்கு குருவாகத் தோன்றி திருஐந்தெழுத்தை உபதேசம் செய்தவர் சிவபெருமான். எனவே அவரது பெயர் குரு மூர்த்தி என்றானது.
குடந்தை - காரைக்கால் நடுவே அமைந்துள்ளது பெருந்துரையாகும். இறைவனது திருநாமம் பிரணவேஸ்வரர் இறைவி திருநாமம் மலையரசி. இவரே குருவடிவம் கொண்டு மாணிக்கவாசகரை ஆட்கொண்டு உபதேசித்தவர். இங்கமைந்துள்ள மங்கள தீர்த்ததில் நீராடி, வன்னி இலை அர்ச்சனை செய்ய நமக்கும் உபதேசம் செய்வார் என்பது ஐதீகம். இவரை வெண்தாமரை அல்லது மகாவில்வ இலை அர்ச்சனையும், வாழை, மா, கரும்பு, திராட்சை கொண்டு நைவேத்தியமும் வியாழக்கிழமைகளில் செய்துவர தொழில் அபிவிருத்தியும், அனைத்துக் கலைகளில் தேர்ச்சியும் திருஐந்தெழுத்தின் மகிமையும் புரியும்.


48. கஜாந்திக மூர்த்தி






சூரபத்மனின் தொல்லைகளைப் பொறுக்க முடியாத  இந்திரன் தன் மனைவி இந்திராணியுடன் சீர்காழியில் மறைவாக வசித்து வந்தான். அங்கே சிவபெருமானைத் துதித்துக் கொண்டிருந்தான். இதற்கிடையே தேவர்கள் கொடுமைத் தாங்காததால் இந்திரனைத் தேடி சீர்காழி வந்தனர். இந்திரனையும் அழைத்துக் கொண்டு திருக்கைலை அடைந்தனர். இந்திராணி ஐயப்பனின் பாதுகாப்பில் இருந்தார். கைலையில் சனகாதி முனிவர்கள் யோகத்தினைப் பற்றி சிவபெருமானிடம் அளவளாவிக் கொண்டிருந்ததால் இவர்கள் பல ஆண்டுகள் காத்திருந்தனர். அச்சமயத்தில் சூரபத்மனின் தங்கையான அசுமுகையும் அவளது தோழியான துன்முகியும் சீர்காழி சென்றனர். இந்திராணியை சூரபத்மனை மணம் செய்து கொள்ளச் சொன்னார்கள். இதற்கு மறுத்த அவரை இழுத்துக்கொண்டு சென்றனர். இதைப்பார்த்த ஐயப்பன் அவர்களுடன் கடுமையான போர் நடத்தினார். அவர்கள் இந்திராணியை கொடுமைப்படுத்தியதற்காக அவர்களின் கையையும் வெட்டி அனுப்பினார். இச்செய்தி கேள்வியுற்ற சூரபத்மனின் மகனான பானுகோபன் அவர்களைப் பழிவாங்கப் புறப்பட்டான். பின்னர் சூரபத்மன் தனது சகோதரிகளின் கையை வளரச் செய்தான். அதன்பின் பானுகோபன் இந்திராணியையும், இந்திரனையும் தேடி அலைந்தான் அவர்களைக் காணவில்லை. உடனே இந்திரலோகம் அடைந்தான் அங்கும் காணாததால் இந்திரனின் புத்திரனாகிய ஜெயந்தனிடம் போரிட்டு அவர்களது ஐராவதத்துடன் கிளம்பினான்.
அப்போரில் ஜெயந்தன் மயங்கினான். இதனால் ஐராவதம் பானுகோபனுடன் சண்டையிட்டது. அதுவும் அடிவாங்கி பின்வாங்கியது. பின் அனைத்து தேவர் குழாமையும் அமர்த்தினான். இதனால் மனம் வருந்திய ஐராவதம் திருவெண்காடு சென்று முப்பொழுதும் நீராடி இறைவனைத் துதித்தது. இதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் அதற்கு காட்சிக்கொடுத்தார். அதன்பின் அதன் குறைகளை நீக்கி அதன் ஒடிந்த கொம்புகளை புதுப்பித்தார். பழையபடி இந்திரனின் வாகனமாக்கினார். அதற்குப்பிறகு முருகபெருமானால் சூரசம்ஹாரம் முடிந்தவுடன் இந்திரன் தன்னுலகம் திரும்பினான். ஐராவதமும் அவனுடன் சென்றது, தேவர்குழாம் மீட்கப்பட்டனர். ஐராவதமாகிய ஒரு யானையின் வேண்டுகோளுக்கு மனமிரங்கி காட்சிக் கொடுத்து வேண்டும் வரம் கொடுக்க சிவபெருமான் கஜாந்திக மூர்த்தி என வணங்கப்படுகிறார். இவரை சீர்காழியருகே அமைந்துள்ள திருவெண்காட்டில் வணங்கலாம். இங்குள்ள இறைவனின் திருநாமம் திருவெண்காட்டுநாதர் என்றும் இறைவி திருநாமம் பிரம்மவித்யா நாயகி என்றும் வணங்கப்படுகிறது. இங்கமைந்துள்ள அக்னி, சூர்ய, சந்திர தீர்த்ததில் அடுத்தடுத்து நீராடி இறைவனை வழிபட இந்திரலோக வாழ்வு தித்திக்கும். மே<லும் மகாவில்வார்ச்சனையும் சர்க்கரை பொங்கல் நைவேத்தியமும் திங்களன்று கொடுக்க, தடைவிலகி எடுத்தக் காரியம் ஜெயமாகும் என்பது ஐதீகம்.



49. சலந்தரவத மூர்த்தி






தேவலோகத்தரசனான இந்திரன் திருக்கைலைக்குச் சென்று சிவபெருமானை வணங்கிவர கிளம்பினார். வழியில் சிவபெருமான் உருமாறி நின்றிந்தார். இதை கண்ட இந்திரன் அவரிடம் பலவிதமானக் கேள்விகள் கேட்டார். எதற்கும் பதில் கொடுக்காமல் இருந்தபடியால்  இந்திரன் சிவபெருமானை தன்னுடைய வச்சிராயுதத்தால் அடித்தான். அது தவிடுபொடியானது, இதனால் கோபமடைந்த சிவபெருமான் ருத்ரவடிவம் கொண்டார். உண்மை அறிந்த இந்திரன் பயந்துப்போய் அவரிடம் மன்னிக்க வேண்டினார். எனவே கோபம் அடக்கினார். அப்பொழுது கோபத்தால் உண்டான வியர்வையை வழித்தெடுத்தார். அது கடலில் விழ, அதுவொரு குழந்தையானது. அதனை கடலரசன் எடுத்து வளர்த்தான், அக்குழந்தையின் பெயர் சலந்தரன் ஆகும். சலந்தரன் வளர்ந்தவுடன் அசுரர்களுடன் சேர்ந்து பலவகையான ஆற்றல்களைப் பெற்றான். பின் தேவலோக தச்சனான மயனின் மேற்பார்வையில் ஒரு அழகிய தேரை உருவாக்கினான். அதன்பின் விருத்தை என்பவளை மணந்து வாழ்ந்து வந்தான். ஒருமுறை தேவர்களுடன் போரிட முடிவு செய்து மேருமலைக் சென்றான். அங்கிருந்த தேவர்கள் பயந்து திருமாலிடம் கூறினர். திருமால் சலந்தரனுடன் இருபதினாயிரம் ஆண்டுகள் போரிட்டும் முடிவில் சலந்தரனே வென்றான் திருமாலின் பாராட்டையும் பெற்றான். இந்திரன் பயந்துக் கொண்டு திருக்கைலையிலேயேத் தங்கினான். இந்திரனின் இச்செயலைக் கேள்வியுற்ற சலந்தரன் திருக்கைலைச் சென்றான். இதற்கிடையே இந்திரனின் பயத்தைப் போக்கிய சிவபெருமான் சலந்தரனை அழிப்பதாக வாக்குறுதிக் கொடுத்தார். அதன்படி வயதான முனிவர் போல் தளர்ந்த உடல், கையில் கமண்டலம், தடியை ஊன்றிய படி சிவபெருமான் மாறினார். அவரது சேனைகள் அவர் பின்னால் நின்றன.
சலந்தரனை வழிமறித்த சிவபெருமான் அவனைப் பற்றி விசாரித்தார். சலந்தரன் தன்னைப் பற்றியும் தன்தகப்பனைப்பற்றியும் கூறி சிவபெருமானுடன் போரிட வந்துள்ளதாகக் கூறினான். சிவபெருமானும் சிரித்துக் கொண்டே சிவனை எதிர்த்தால் ஒரு நொடியில் மாள்வாய் என்றார். சலந்தரன் அவரிடம் தன் ஆற்றலைக் காட்டினான். உடனே வயதான தோற்ற சிவபெருமான். நான் சிவனுக்கு அடுத்தநிலை உள்ளவன் எனவே இந்த சக்கரத்தை உன்தலையில் வை பார்ப்போம் என்றபடியே தனது பாதத்தால் தரையை கீறி ஒரு சக்கரத்தை உண்டாக்கினார். உடனே சலந்தரன் அதை எடுத்து தலைமேல் வைக்க அது அவனை இருகூறாக்கியது. பின் சிவனிடம் தஞ்சமடைந்தது. பின் அசுரக்கூட்டத்தை சாம்பலாக்கினார். சலந்தரன் அழிந்ததால் அனைவரும் ஆனந்தப்பட்டனர். அவரவர் பதவியை மீண்டும் வகித்தனர். தேவர்கள் துயர்துடைக்க சலந்தரனை வதம் செய்த மூர்த்தியே சலந்தரவத மூர்த்தி யாவார். இவரை தரிசிக்க நாம் செல்லவேண்டியத் தலம் திருவாருர் அருகேயுள்ளள திருவிற்குடி யாகும். இறைவன் வீரட்டானேஸ்வரர் இறைவி பரிமளநாயகி. இங்குள்ள சங்கு, சக்கர, ஞானதீர்த்தங்களினால் சலந்தரவத மூர்த்தியை அபிசேகம் செய்ய அவர்களின் தீராத துயரத்தினையும் தீர்த்து மஞ்சள்நிற மலர் அர்ச்சனையும், புளிசாத நைவேத்தியமும் செவ்வாயன்றுக் கொடுக்க விஷப்பூச்சிகள் அரவம் இவற்றினால் ஏற்படும் தொல்லை அழியும்.


50. ஏகபாதத்ரி மூர்த்தி






தொடக்கமும், முடிவும் அற்றவன் சிவபெருமான். அவரே உலகின் ஆதியாகவும் அந்தமாகவும் இருப்பவர், அவரன்றி எப்பொருளும் பிறப்பதுமில்லை, இறப்பதும் இல்லை அனைத்து இயக்கமும் அவராலேயோ தொடர்ந்து நடைபெறுகின்றன. அவராலேயே முடிகின்றன, அவர் ஒரு பாதம் கொண்டவராக உலகை உருவாக்க சுத்தமாயையின் அடிப்புறமாக அசுத்தமாயையின் இடத்தில் புலப்படாத பல மகான்களை உருவாக்கினார். அவர்களின் ஆணவம் மட்டும் கொண்ட ஆன்மாவாகவும், ஆணவம், கன்மம் என இரண்டு கொண்ட ஆன்மாக்களும் மும்மலம் கொண்ட ஆன்மாக்களுக்கு வேண்டிய உடல், செயல், ஐம்புலன்கள், சுகதுக்க அனுபவங்கள் ஆகியவற்றிற்கு உதவுபவராக உள்ளன. மேலும் இவரே மும்மூர்த்திகளாகி படைத்தல், காத்தல், அழித்தல் தொழில்களைச் செய்கின்றார். இவரது அனைத்து திருவிளையாடல்களும், அனைத்தும் மூர்த்தங்களும் உலக ஆரம்பத்தில் இவரிடம் தோன்றி இவரிடமே முடிவில் ஐக்கியமாகி விடுகின்றது. இவரது இதயத்தில் உருத்திரனும், இடப்பாகத்தில் பிரமனும், வலப்பாகத்தில் திருமாலும், அவரது கண்களில் இருந்த சந்திர சூரியனும், அவரது துவாசத்திலிருந்து வாயுதேவனும், கழுத்திலிருந்து கணேசனும், (தொப்பையில்) வயிற்றிலும் இருந்து யமன், இந்திரன், வருணன், குபேரனும், பிறப்பர், மேலும் பிரத்யங்கத்திலிருந்து ஐம்பது கோடி தேவர்களும் தோன்றுவர். அவரது முடிவுகளில் இருந்து பலகோடி முனிவர்கள் தேவர்கள் தோன்றுவர். ஒவ்வொரு முறையும் உலகம் புதிதாய் புதுப்பிக்கும் போது மேற்க்கண்ட அனைவரும் தோன்றுவர். உயிரினங்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து, அவர்களின் ஆசைகளை நிறைவேற்றி, தீயவர்களை அழித்து இறுதியில் அவருள்ளே ஐக்கியமாவார்கள். மீண்டும் மீண்டும் தோற்றுவித்து தம்முள் அடக்குவதால் இவர்க்கு பிறப்பென்பதும் இல்லாமல் இறப்பென்பதும் இல்லாமல் அனைத்தின் பிறப்பிடமான சிவபெருமானை நாம் ஏகபாதத்ரி மூர்த்தி என்போம்.
மாயவரமருகேயுள்ள தலம் இடைமருது ஆகும். இங்குள்ள இறைவன் பெயர் மகாலிங்கேஸ்வரர், இறைவி பெருநலமுலையம்மை யாகும். இங்கமைந்துள்ள காருண்ய தீர்த்ததில் நீராடி அஸ்வமேத பிரகாரத்தில் வலம் வர ஏவல், துர்தேவகைள் மனநிலை பிறழ்வு போன்ற நோய்கள் மற்றும் கொடுமைகள் விலகும், இவர்க்கு வில்வார்ச்சனையும், வெண்பொங்கல் நைவேத்தியமும் வெள்ளிக்கிழகைளில் கொடுக்க மூன்று காலத்தையும் அறியும் அறிவு, முப்பிணி அகவல், நீள் ஆயுள் உண்டாகும்.


51. திரிபாதத்ரி மூர்த்தி






சிவபெருமானே மகேஸ்வரனாகி அனைத்து உயிர்களையும் தோற்றுவிப்பவர். பின் அனைவரையும் தம்முள்ளே ஒடுக்கிக் கொள்வர். அவ்வாறு ஒடுக்குவதை நாம் நித்தியம், நைமித்தியம் பிராகிருதம் ஆத்தியந்திகம் என நான்காகக் கொள்ளப்படும். இவற்றில் நித்தியம் என்றால் உயிரினங்கள் தங்கள் ஆயுளின் முடிவில் சிவனை அடைதலாகும், நைமித்தியம் என்றால் நான்முகனின் பகல் கூடிய உலக சஞ்சலத்தால் மறைதல் பிராகிருதம் என்றால் பிரமதேவனின் கால அளவாகும். அதுத்தவிர உலக உயிரெல்லாம் மடிந்து ஓடுங்குதலாகும். ஆத்தியந்திகம் என்றால் உயிரினங்கள் முக்திபெறுதலாகும். இதில் நித்தியம் வெளிப்படையானது. இதில் நைமித்தியம் பிரளயத்தின் இறுதியில் ஈரேழு உலகமும் சூரியக்கதிர்களை வாங்கி வெளியிடுவதால் அனைத்துமே பிரகாசமாகும். அதனால் கடல் அனைத்தும் வற்றிவிடும். இவ்வாறு நடந்த பின்பு நூறாண்டுகளில் அனைத்து திசைகளிலும் மழைப் பொழிந்து அனைத்துலகத்தையும் நீரால் நிரப்பும். இக்காலம் பிரமன் யோகநித்தரை செய்யும் காலமாகும்.
அடுத்து பிராகிருதப் பிரளயம் பற்றி பார்ப்போம். பரமானு இரண்டுடையது அணு, அணு மூன்றுடையது திரிசரேணு, திரிசரேணு மூன்றுடையது துடி, துடி மூன்றுடையது வேதை, வேதை முன்றுடையது லவம், லவம் மூன்றுடையது நிமிடம், நிமிடம் மூன்றுடையது கணம், கணம் ஐந்துடையது காட்டை, காட்டை பதினைந்துடையது லகு, லகு பதினைந்துடையது கடிகை, கடிகை இரண்டையது நாள், நாள் பதினைந்துடையது பட்சம், பட்சம் இரண்டுடையது மாதம், மாதம் இரண்டுடையது பருவம், பருவம் மூன்றுடையது அயனம், அயனம் இரண்டையது ஆண்டு, ஆண்டு நூறுடையது மனித ஆயுள், மனித ஆயுள் முப்பதுடையது தென்புறத்தவரின் ஒருசான், மரதம், பன்னிரெண்டுடையது தேவர்களுக்கு ஒரு நாள், அத்திகை ஆண்டு பன்னிரெண்டு ஆயிரம் கழிந்தால் அது தேவர்களுக்கு ஒரு ஊழி, நான்கு ஊழி கொண்டது பிரமனுக்கு ஒரு பகல். இவ்வாறு அனைத்து உயிரினங்களும் சிவபெருமானிடமே தஞ்சம். இதில் மும்மூர்த்திகளும் நேரத்தில் சிவபெருமான் எழுப்பிய கோலமே திரிபாதத்ரி மூர்த்தி யாகும், அதாவது மூன்று பதமான முர்த்திகளும் இவரிடம் அடக்கம். இவரை திருஇடைமருதூரில் தரிசிக்கலாம், அத்தலத்தில் அவருக்கும் சொக்கநாதருக்கும் அபிசேகம் செய்து மேகராக குறிஞ்சிப் பண் பாடினால் கோடையாயினும் மழை பொழியும். இவர்க்கு தும்பை அர்ச்சனையும், மிளகு அடை நைவேத்தியமும், புதனன்றுக் கொடுக்க அறிவு விருத்தியடையும் முக்காலம் அறியும் ஆற்றல் ஏற்படும்



52. ஏகபாத மூர்த்தி






கருத்திற்கு எட்டாத, வண்ண, குணமில்லாத, அறியமுடியாப் பொருளாய், எங்கும் நீக்கமற நிறைந்துள்ளவராய், அழியா சோதியாய் அமைந்துள்ளவர் சிவபெருமான். அவர் அனைத்து ஆன்மாக்களிலும் ஆணவம் மட்டும் நிலையாக இருப்பதை அறிந்தார். அதனை அகற்ற அருள் செய்தார். அதனால் ஞானத்தை கொடுத்து அதன் மூலமாக ஆணவம், கன்மம், மாயையை அகற்றி இறுதியில் தூய்மையான தன்னை வந்து அடையும்படி செய்தார். எனவே ஐந்தொழில்களான படைத்தல், காத்தல், மறைத்தல், அருளல் என ஐந்து வகையானத் தொழில்களைச் செய்து வந்தார்.ஊழிக்காலத்தில் உலகிலுள்ள அனைத்து உயிரிகளும் தன்னிடம் ஒடுங்க, தன் தேவியும் அவரிடம் ஒடுங்கி விடுவார். இவர் மட்டுமே அழியாமல் இருப்பவர் என ஆகமங்களும் வேதங்களும் கூறுகின்றன.
இவர் எத்தனை ஊழிக்காலங்கள் வந்தாலும் அனைத்தும் இவரிடமே ஆரம்பிக்கின்றன, இவரிடமே முடிகின்றன. இவர் தனியானவர் முதன்மையானவர். இவரிமிருந்தே அனைத்து விதமான சக்திகளும் பிறக்கின்றன. இவரிடமே தஞ்சமடைகின்றன. அனைத்து தேவர், மூர்த்திகளும் இவரை வணங்கியே அனைத்து வகையான செல்வங்களையும் பெற்றனர். இவர் உலகின் முதல்வர் முதன்மையானவராவர். இவர் அனைத்துக் காலங்களிலும், எல்லாவுலகமும் தன் திருவடியின் கீழ் இருப்பதால் இவரை நாம் ஏகபாத மூர்த்தி என்கிறோம். இவரைத் தரிசிக்க நாம் செல்ல வேண்டியத்தலம் தப்பளாம் புலியூர் ஆகும். இங்குள்ள ஏகபாத மூர்த்திக்கு செந்தாமரை அர்ச்சனையுடன், நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்கல் திங்கள்தோறும் கொடுத்து, நெய்தீபம் ஏற்றினால் திருமணம் விரைவில் கூடிவரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், தடையில்லா செயல் நடைபெறும். மும்மலம் அழியும்











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக