திங்கள், ஜூலை 28, 2014

அடியேன் எழுதிய பாடல்கள் .........

                                          சிவமயம் 
                                      சிவமேஜெயம் 

குருவே சரணம்          பட்டினத்தாரே சரணம்        குருவே துணை 
அருந்தமிழ் கேட்கசுந்தரர் பொருட்கவர்ந்து சோதனைசெய்
தருந்தமிழில் வசைகேட்டக மகிழ்ந்தளித்து சூரவதஞ்செய்
தறுதலைபிள் ளைக்கருட்புரிந் தோடநீக்கிய பூண்டிநகரத்தானித்
தருதலைபிள் ளைக்கென்செய் வானோதிருமுருக நாதன் .     


பெருயானை யுரிபோர்த்தபெம் மானைபுரமூன் றெரித்தானை
திருவானைக் காவலனையறு மூவர்க்கருளிய வனைமுக்தித்
தருவானைக் காலனையுதைத் தானைமெய்யன் பரழைக்கவுடன்
வருவானை சம்புகேஸ்வரனை தஞ்சமடைந் திருநெஞ்சே .


துதித்தவர் துயர்போக்குந்தூ மதியோனன் பால்தன்னை
மிதித்த்வர்க் கருள்புரிந்தக ருணைமாசாகர மனுதினமே
லுதித்தகதிரி னுமொளியோன் பரிதவிக்குமடி யேனுக்குநற்
கதியளித் திடுவானோ திருக்குற்றால நாதனுக்கே வெளிச்சம் .


                                      - திருவடி முத்து கிருஷ்ணன் 

                                           சிவமேஜெயம் !!

சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!