ஞாயிறு, டிசம்பர் 29, 2013


திருவெம்பாவை தினம் ஒரு பாடல் .


மணிவாசகப் பெருமான் அருளிய 

   திருவாசகத்திலிருந்து 
பாடல்-14

காதார் குழையாட பைம்புாண் கனலாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதித் திறம் பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம் பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்

காதில் அணிந்திருக்கும் குழைகள் ஆடவும் உடம்பில் அணிந்திருக்கும் பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்கள் ஆடவும் ,கூந்தலில் அணிந்துள்ளமாலைகள் ஆடவும் அம்மாலையைச் சுற்றி வண்டுக்கூட்டங்கள் ஆடவும் ,ஆக குளிர்ந்த நீரில் ஆடி தில்லைச்சிற்றம்பலத்தைப்  புகழ்ந்து பாடிவேதத்தின் உட்பொருளாக விளங்குபவனைப்பாடி , அப்பொருளாக நிற்கும் அவனது பெருமைகளைப் பாடி ,ஒளிமயமானவனின் ஆற்றலைப்பாடி,
அவன் அணிந்துள்ள கொன்றைமலர் மாலையைப் பாடி ,அவனது அநாதி முறைப் பழமையைப் பாடி முடிவாக நிற்கும் தன்மையையும் பாடிபிற உயிர்களிடத்தில் இருந்து நம்மை வேறுபடுத்தி மீட்டு எடுத்த வளையல்கள் அணிந்த அம்மையின் திருவடிச் சிறப்பினைப் பாடி நீராடுவோமாக.என்று பாடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

                                                                                   இறை பணியில் 

                                                                                         பெ.கோமதி 

                                                    சிவமேஜெயம் !!





        சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

சனி, டிசம்பர் 28, 2013

திருவெம்பாவை தினம் ஒரு பாடல் .


மணிவாசகப் பெருமான் அருளிய 

   திருவாசகத்திலிருந்து 

பாடல் -13

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகுஇனத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவுவார் வந்து சார்தலினால் 
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த 
பொங்கு மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்து நம் 
சங்கம் சிலம்ப சிலம்பு கலந்து ஆர்ப்பக் 
கொங்கைகள் பொங்க குடையும் புனல் பொங்கப் 
பங்கயப் புாம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.

பொய்கையில் கருங்குவளை புாத்திருக்கிறது இறைவனின் திருமேனியில் கரிய நிறமுடைய உமாதேவியார் இருக்கிறார்.பொய்கையில் செந்தாமரை மலர்கள் புாத்திருக்கின்றன.எம்பெருமானின் மேனியும் செம்மை நிறம் உடையதாக இருக்கின்றது.பொய்கையில் குருகு எனும் நீர்ப்பறவைகள் காணப்படுகின்றன.எம் இறைவனின் மேனியில் குருக்கத்தி மலர்மாலை காணப்படுகின்றது.பொய்கையில் நீராடும் ஒலி கேட்கின்றது,எம்பெருமானின் மீது பாம்புகள் புரள்கின்றன.மக்கள் தங்கள் உடல் அழுக்கைப்போக்க பொய்கையில் நீராடுகின்றனர்.  உயிர்கள் ஆணவம் முதலிய மும்மல அழுக்கைப் போக்கிக் கொள்ள எம் இறைவனை நாடுகின்றன.எனவே இப்பொய்கை எம்பிரானும் பிராட்டியும் போல் காட்சி அளிக்கின்றது. அப்படிப்பட்ட நீர்நிலையில் இறங்கி, சங்குவளையல்களும் காற்சிலம்பும் ஒலிக்கவும் முலைகள் விம்மிப் புாரிக்கவும் ,நீர் மேல் எழுமாறு தாமரை படர்ந்த அழகியநீரில் பாய்ந்து ஆடுவோமாக.

                                                                                   இறை பணியில் 

                                                                                         பெ.கோமதி 

                                                    சிவமேஜெயம் !!





        சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

வெள்ளி, டிசம்பர் 27, 2013



திருவெம்பாவை தினம் ஒரு பாடல் .


மணிவாசகப் பெருமான் அருளிய 

   திருவாசகத்திலிருந்து 



பாடல் -12
ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும்
தீத்தன் நல் தில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்துமட கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பு அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப
புாத்திகழும் பொய்கை குடைந்ஐடயான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்.

நம்மைக்கட்டி இருக்கும் பிறவித் தளையில் இருந்து விடுவிக்கும் தூயகுணம் உடையவன் தில்லையில் உள்ள ஞானசபையில் கையில் அனல் ஏந்தி ஆடுபவன் வான உலகம் நில உலகம் என்று எல்லா உலகங்களிலும் உள்ள உயிரினங்களைப் படைத்துக் காத்துப் பின் மறைத்து அருள்கின்ற அனைத்தையும் திருவிளையாட்டாய்ச் செய்து முடிப்பவன் ,அப்பெருமானது புகழை வார்த்தைகளால் பேசி வளையல்களும் மேகலையும் ஒலிக்க அழகிய கூந்தலில் வண்டுகள் ஒலிக்க புாக்கள் நிறைந்த தடாகத்தில் குளித்து நம்மை ஏற்றுக்கொண்ட பெருமானது பொன்பொன்ற திருவடிகளை வணங்கித் துதிப்போமாக.

                                                                                   இறை பணியில் 

                                                                                         பெ.கோமதி 

                                                    சிவமேஜெயம் !!





        சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!





வியாழன், டிசம்பர் 26, 2013



திருவெம்பாவை தினம் ஒரு பாடல் .


மணிவாசகப் பெருமான் அருளிய 

   திருவாசகத்திலிருந்து 
 பாடல்-11

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேர்என்னக்
கையால் குடைந்து  குடைந்துன் கழல் பாடி
ஐயா வழிஅடியோம் வாழ்ந்தோம்காண் ஆர்அழல்போல்
செய்யாவெண் நீறாடி செல்வா சிறுமருங்கல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
யைா நீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.

நெருப்பு பிழம்பு போன்ற சிவந்த மேனியை உடையவனே! மேனி முழுதும் வெண்ணீற்றைப் புாசி இருப்பவனே ! உயிர்களுக்கு மேலான வீட்டின்பத்தை அளிக்கும் வெல்வனே!நுண்ணிய இடையும் மைபுாசிய கண்ணும் உடைய உமாதேவியன் கணவனே! வண்டுகள் மொய்க்கும் இடம் அகன்ற குளங்களில் ”முகோ ”என ஒலி எழும்படி நீரைக் கைகளால் விலக்கி முழ்கிக் குளிக்கும் நாங்கள் உமது திருவடிப் பெருமையைப் புகழ்ந்த பாடி .வழிவழியாக அடிமைசெய்து வாழ்ந்து வருகிறோம்.நீயும் உன் அடியார்களை அப்பக்குவ நிலைக்கு ஏற்ப ஆட்கொண்டு அருள் செய்கிறாய்.அந்த உமது அருள் விளையாட்டின் பணனை நாங்கள் பெற்று உய்ந்தவர்கள் ஆனோம்.இந்நிலையில் இருந்து தாழ்ந்து போகாதவாறு ,எங்களைக் காப்பாற்றுவாயாக. என்று பாடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.


                                                                                      இறை பணியில் 

                                                                                         பெ.கோமதி 

                                                    சிவமேஜெயம் !!



        சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!


செவ்வாய், டிசம்பர் 24, 2013

திருவெம்பாவை தினம் ஒரு பாடல் .


மணிவாசகப் பெருமான் அருளிய 

   திருவாசகத்திலிருந்து 



பாடல் -10
பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதைஒருபால் திருமேனி ஒன்று இல்லன் 
வேமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓதஉலவா ஒருதோழன் தொண்டருளன்
போதில் குலத்தரன்தன் கோயிற் பிணாப்பிள்ளைகாள் 
ஏதவனூர் ஏதவன் பேர் ஆர்உற்றார் ஆர்அயலார்
ஏதுஅவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.

கீழ் உலகங்கள் ஏழினுக்கும் கீழாய் சொல்அளவைக் கடந்து நிற்பது அவனது திருவடிமலர்கள்.மலர்களால் அழகுசெய்யப்பட்டஅவனது திருமுடியும்எல்லாவற்றையும் கடந்து நிற்பது .அவனது உடம்பில் பாதி பெண்என்பர். அவனுக்குத் திருமேனி ஒன்றல்ல பல. வேதங்களும் விண்ணுலகத்தவரும் மண்ணுலகத்தவரும் புகழ்ந்து பேசினாலும் அப்புகழ் மொழிகளுக்கு அப்பாற்பட்டு,உயிர்களுக்குத் துணையாக விளங்குபவன்.அடியார்களின் உள்ளத்தில் இருப்பவன். குற்றமற்ற உயிரினங்களின் பிறவித் தளையை அறுக்கவல்ல பெருமானது கோயிலில் பணிசெய்யும் பெண்பிள்ளைகளே அவனடைய ஊர் எது?அவன் பெயர் யாது? அவன் உறவினர்கள் யாவர் ?பகைவர் யாவர்?அவனை எவ்வாறு புகழ்ந்து பாடமுடியும்? கூறுவீராகஎன்று  கேட்பதாக இப்பாடல் அமைந்துள்ளது.



                                                                                      இறை பணியில் 

                                                                                         பெ.கோமதி 

                                                    சிவமேஜெயம் !!



        சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

ஞாயிறு, டிசம்பர் 22, 2013

திருவெம்பாவை தினம் ஒரு பாடல் .


மணிவாசகப் பெருமான் அருளிய 

   திருவாசகத்திலிருந்து 


பாடல் -9
முன்னைப்பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே 
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றஉம் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் 
அன்னவரே எம்கணவர் ஆவார் அவர்உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம் 
இன்னவகையேல் எமக்கெங்கோன் நல்குதியேல்
என்னகுறையும் இலம்பேலோர் எம்பாவாய்.

பழமைக்கும் பழமையான பொருள்களுக்கெல்லாம் பழமையானவனே பின்னேதோன்றிய புதுமைகளுக்கெல்லாம் புதுமையானவனே, உன்னை இறைவனாக வணங்கப்பெற்ற நாங்கள் சிறந்த அடியார்கள் ஆனோம். உம்முடைய அடியார்களின் திருவடிகளையே வணங்குவோம். அவர்களுக்கே உரிமை உடையவர்களாக ஆவோம். அவர்களே எங்களுக்குக் கணவன்மார்களாக  வாய்க்கவும்வேண்டும். அவர்கள் சொற்படி நடந்து அவர்களுக்கு அடிமைகளாக ஆகி அவர்களுக்குக் குற்றேவல் செய்வோம்.இப்படிப்பட்ட வரத்தினை எம்பெருமானாகிய நீவிர் வழங்குவீரேல் நாங்கள் எந்தக்குறையும் இல்லாதவர்களாக வாழ்வோம்.என்று மார்கழிமாத வழிபாட்டின் பயனை எடுத்தியம்புவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

                                                         
                                                                                  இறை பணியில் 

                                                                                         பெ.கோமதி 

                                                    சிவமேஜெயம் !!

        சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!


சனி, டிசம்பர் 21, 2013

திருவெம்பாவை தினம் ஒரு பாடல் .


மணிவாசகப் பெருமான் அருளிய 

   திருவாசகத்திலிருந்து 

பாடல் -8

கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
குழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டில்லையோ
வாழி ஈதென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாரும் இவ்வாறே
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைப் பங்காளனையே பாடேலோர் எம்பாவாய்.

கோழி கூவியது அது கேட்டு மற்ற பறவைகளும் ஒலி செய்கின்றன.,இறைவன் பள்ளி எழுந்தருள வெண்சங்குகள் ஒலிக்கின்றன, உவமை கூறமுடியாத ஒளிப்பிழம்பு உவமை கூறமுயாத பேரருளாளன் ,உவமை கூறமுடியா விழுமிய பொருள் என்று அப்பெருமானது பெருமைகளை நாங்கள் புகழ்ந்த பாடிக்கொண்டு இருக்கிறோம்.இதை நீ கேட்க வில்லையா?வாய்திறந்து பதில் கூறாது உறங்குகின்றாயே,இது என்ன உறக்கமோ ?அருட்கடலாக விள்குபவனிடம்நீ செலுத்தும் அன்பு ,இப்படிப்பட்ட தன்னைம உடையதுதானா?ஊழிக்காலத்திலும் தலைவனாய் நின்று உலகங்களைப் படைக்கும் ஒருவனை உமையின் கணவனைப் புகழ்ந்து பாடுவோமாக .என்று பாடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.


                                                                                    இறை பணியில் 

                                                                                         பெ.கோமதி 

                                                    சிவமேஜெயம் !!

        சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

வெள்ளி, டிசம்பர் 20, 2013

திருவெம்பாவை தினம் ஒரு பாடல் .


மணிவாசக பெருமான் அருளிய 

   திருவாசகத்திலிருந்து 

பாடல் 7


அன்னே இவையும் சிலவோ  பலஅமரர் 
உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான் 
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகொப்பாய் 
என்னானை என்னரையன் இன்னமுதன் டின்று எல்லோமும் சொன்னோங்கேள்  வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ
வன்நெஞ்சப் பேதையர் போல் வாளாக் கிடத்தியால் 
என்னே துயிலின் பரிசேலோர்  எம்பாவாய்.

தாயே உனது விளையாட்டுகளில் இவையும் சிலபோலும் .தேவர்களால் எண்ணிஅறியமுடியாதவனும் ஒப்பற்றவனும் பெரியபுகழ் உடையவனும்,ஆகிய பெருமானது அடையாளங்களாக விளங்கும் இசைக்கருவிகளில் ஏதேனும் ஒன்று ஒலித்தாலும் சிவசிவ என்று சொல்வாயே”தென்னாடுடைய சிவனே”என்று கூறிமுடிப்பதற்குள்  நெருப்பில் இட்ட மெழுகுபோல உருகுவாயே,ஆனால் இப்பொழுது நாங்கள் தனித்தனியே எம் தலைவன், என் அரசன் ,இனிய அமுதன் என்றெல்லாம் அவனைப் புகழ்ந்து பேசியபிறகும் இன்னும் காதில் விழாதவள்போல் உறங்குகின்றாயே,அன்பு இல்லாத கல்நெஞ்சம் உடைய அறிவு இல்லாதவர்  போலப் படுக்கையில் கிடக்கிறாயே,உறக்கம் என்ன  அத்துணைச் சிறப்புடையதா? என்று பெண்கள் கேட்பதாக இப்பாடல் அமைந்துள்ளது.
                                                                                 இறை பணியில் 

                                                                                      பெ.கோமதி 

                                                    சிவமேஜெயம் !!

        சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!
                                                              

வியாழன், டிசம்பர் 19, 2013

திருவெம்பாவை தினம் ஒரு பாடல் .


மணிவாசக பெருமான் அருளிய 

   திருவாசகத்திலிருந்து 



பாடல்-6

மானே நீ நென்னலை நாளைவந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வானவார் கழல் பாடி வந்தோர்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உன்கே உறும் எமக்கும்
ஏனோர்கக்கும் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்

மான் போன்ற பார்வையினை உடைய பெண்ணெ!நாளை நானே வந்து உங்களை எழுப்புவேன் என்று கூநினாயே அந்தச் சொல் எந்தத்திசையை நோக்கிப் போனது. ஒருசிறிதும் வெக்கம் இல்லாமல் இன்னும் உறங்கிக் கொண்டு இருக்கிறாய். உனக்கு இன்னும் பொழுது விடியவில்லை போலும்.

வானுலகும் மண்ணுலகும் பிற உலகங்களும் அறிதற்குஅருமை உடையவன் தானாக வலியவந்து ,நம்மிடம் அருள்பாலித்து நம்மை அடிமை கொள்கிறான்.அவனதுபெருமையைப் பாடிவந்த எங்களுக்கு உன்வாய் திறந்து ஒனறும் கூறாது உறங்ககின்றாய்.ஊன் உருக அப்பெருமானது புகழைப்பாடாது இருப்பது உனக்கே பொருந்தும்போலும்

அப்படி இராது ,நமக்கும் பிறருக்கும் தலைவனாகிய அப்பெருமானின் பெருமைகளை, நீயும் எங்களோடு சேர்ந்து பாடுவாயாக.என்று கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

                                   
                                                                                  இறை பணியில் 

                                                                                      பெ.கோமதி 

                                                    சிவமேஜெயம் !!

        சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

திங்கள், டிசம்பர் 16, 2013


திருவாசகத்திலிருந்து .................





மணிவாசக பெருமான்


                 அருளிய திருவாசகத் தேனிலிருந்து

                                                                                 சில துளிகள்



செழுக் கமலத் திரள் அன, நின் சேவடி சேர்ந்து அமைந்த
பழுத்த மனத்து அடியர் உடன் போயினர்; யான், பாவியேன்;
புழுக்கண் உடைப் புன் குரம்பை, பொல்லா, கல்வி ஞானம் இலா,
அழுக்கு மனத்து அடியேன்; உடையாய்! உன் அடைக்கலமே

சிவந்த தாமரை மலர்கள் ஒன்றிணைந்தது போன்ற நின் திருவடியை நினைந்து அடைந்த கனிந்த மனத்தினை உடை அடியார்பெருமக்கள் உன்னுடன் வந்து சேர்ந்து விட்டனர்.ஆனால் நான் பாவியேன் புழுக்கள் நிரம்பிய இந்த உடலைத்தாங்கி கல்வி ஞானம் சிறிதும் இல்லாது மலமென்னும் அழுக்கு நிறைந்த தீய மனத்தினை உடையவனாக இருக்கின்றேன்.இவ்வாறு இருந்தாலும் என்னை ஆட்கொண்டவன் நீ .நானும் உனக்கு அடைக்கலமே.

வெறுப்பனவே செய்யும் என் சிறுமையை, நின் பெருமையினால்
பொறுப்பவனே! அராப் பூண்பவனே! பொங்கு கங்கை சடைச்
செறுப்பவனே! நின் திருவருளால், என் பிறவியை வேர்
அறுப்பவனே! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.

பிறறால் வெறுத்து ஒதுக்கப் படும் செயல்களைச் செய்யும் எனது செயல்களையும் தவறுகளையும் அளவற்ற நின் கருணையினால் பொறுத்துக்கொள்பவனே!பாம்பினை அணிந்தவனே!பொங்கியெழும் கங்கையைச் சடையினில் தாங்கியவனே!உன் திருவருளால் பாவியேனாகிய எனது பிறவியையும் வேரோடு களைபவனே!என்னை ஆட்கொண்டு அடிமை கொண்டவனே! அடியேன் உனக்கு அடைக்கலம்.

பெரும் பெருமான், என் பிறவியை வேர் அறுத்து, பெரும் பிச்சுத்
தரும் பெருமான், சதுரப் பெருமான், என் மனத்தின் உள்ளே
வரும் பெருமான், மலரோன், நெடுமால், அறியாமல் நின்ற
அரும் பெருமான்! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.

முப்பத்து முக்கோடிதேவர்களுக்கெல்லாம் பெரும்பெருமானாக விளங்குபவனே!என் பிறவிப்பிணியை வேரோடு களைந்து யாவரும் அடைதற்கரிய பெரும் பேறான பித்துநிலையை அருளியவனே!வலிமை உடையவனே!எப்பொழுதும் என் மனத்துள் வருபவனே!திருமாலும் நான்முகனும் காணற்கு அரியவனாய் நின்றவனே!என்னை ஆளுடையவனே!அடியேன் உன் அடைக்கலம்.

பொழிகின்ற துன்பப் புயல் வெள்ளத்தில், நின் கழல் புணை கொண்டு,
இழிகின்ற அன்பர்கள் ஏறினர், வான்; யான், இடர்க் கடல்வாய்ச்
சுழி சென்று, மாதர்த் திரை பொர, காமச் சுறவு எறிய,
அழிகின்றனன்; உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.

உலகவாழ்க்கை எனும் பெரும் துன்பப்புயல் வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் பொழுது நின் திருவடியைத் துணையாகக் கொண்டவர்கள் திருவருளாகிய தெப்பத்தில் ஏறிக்கொண்டனர்.ஆனால் நான் இடர் சூழ்ந்த மாயையெனும் துன்பச் சுழியில் மாட்டி பெண்இன்பமாகிய பெரும் அலையால் தாக்கப்பட்டு  காமம் எனும் பெரும்சுறாவால்  துன்பப் படுகின்றேன்.இருப்பினும் என்னை உடையவனே நான் உனக்கு அடைக்கலம். 

சுருள் புரி கூழையர் சூழலில் பட்டு, உன் திறம் மறந்து, இங்கு,
இருள் புரி யாக்கையிலே கிடந்து, எய்த்தனன்; மைத் தடம் கண்
வெருள் புரி மான் அன்ன நோக்கி தன் பங்க, விண்ணோர் பெருமான்,
அருள் புரியாய்; உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.

சுருண்ட கூந்தலை உடைய மகளிரது சூழ்ச்சி வலையில் அகப்பட்டு ,எம்பெருமானே நின் திறம் மறந்து இவ்வுலகில் ஆணவம் எனும் மாபெரும் இருளில் மாட்டிக்கிடக்கும் உடலினில் கிடந்து துன்புறுகின்றேன், மைபுாசிய அழகிய கண்களை உடைய உமையவளின் பாகமாக அமர்ந்தவனே !விண்ணில் உள்ளவர்களுக்குத் தலைவனே அருள்புரிந்து காக்க வேண்டும்.எம்மை ஆளுடையவனே அடியவன் உனக்கு அடைக்கலம்.

                                              இறை பணியில் 

                                                                  பெ.கோமதி 

                                        சிவமேஜெயம் !!

    சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

ஞாயிறு, டிசம்பர் 15, 2013

திருவெம்பாவை தினம் ஒரு பாடல் .


மணிவாசக பெருமான் அருளிய 

   திருவாசகத்திலிருந்து 

பாடல்-5
மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ளப் பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய் படிறீ கடைதிவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனே என்று
ஓலமிடினும் உணராய் உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்.

திருமாலும் நான்முகனும்  தேடியும் அறியமுடியாத அடியையும் முடியையும் உடைய மலைபோன்ற நெடிய மேனியை உடைய பெருமானை நாம் கண்டுவிடலாம் என்று பொய்பேசித் திரிந்தவளே ,நீபேசும் சொற்கள் தேனும் பாலும் கலந்தது போன்று இனிமையுடையதாகத்தான் இருந்தன. ஆனாலும் இன்னும் கதவைத்திறவாது உறங்கிக் கொண்டிருக்கிறாய்.உடனே வந்து கதவைத்திற..
இந்த உலகத்தவரும் விண்ணுலகத்தில் உள்ளவர்களும் ஏனைய பிற உலகங்களில் உள்ளவர்களும் கடும் தவம் மேற்கொண்டும் அவர்களாலும் அறிய இயலாதவன்.ஆனால் நமக்கு எளிவந்த பிரானாக நம்மை ஆட்கொண்டு சிறப்பிக்கிறான்.அவன் நமது குற்றங்களைப் பொறுத்து அதனைக் குணமாகமாற்றி அருள்செய்பவன்.இத்தகைய பெருமானின் பெருமைகளை  வியந்து சிவனே சிவனே என்று ஓலமிடுகின்ற ஓசை உன் காதில் வில்லையா.குரல் கேட்டும் உறங்கிக் கொண்டு இருக்கிறாய்.எழுந்து வா பெண்ணே என்று உறங்கிக் கொண்டு இருக்கும் பெண்ணை எழுப்புவதாக இப்பாடல் அமைந்துள்ளது. 




                                                                                  இறை பணியில் 

                                                                                      பெ.கோமதி 

                                                    சிவமேஜெயம் !!

        சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

வெள்ளி, டிசம்பர் 13, 2013

திருவெம்பாவை தினம் ஒரு பாடல் .


மணிவாசக பெருமான் அருளிய 

   திருவாசகத்திலிருந்து 

பாடல்-4
ஒள்நித்திலநகையாய் இன்னம் புலர்ந்தினறோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிககொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய் .

ஒளி பொருந்திய முத்துப் போன்ற பற்களை உடைய பெண்ணே இனனும் உனக்கு பொழுது புலரவில்லையா?

என்று வீதிவழியே வந்த பெண்கள் கேட்க.அதற்கு உள் இருக்கும் பெண்,

அழகிய கிளி போன்ற மொழியினை உடைய பெண்கள் எல்லோரும் வந்துவிட்டார்களா?

என்று பதில் கேள்வி எழுப்புகிறாள்.அதற்கு வீதியில்  காத்திருக்கும் பெண்கள்,

வந்திருக்கும் பெண்களை எண்ணிப்பார்த்துச் சொல்கிறோம் ,நீ அதுவரை உறங்கிக்கொண்டு காலத்தைப் போக்காதே .விண்ணுள்ளோர்களுக்கும் அருமருந்தானவன் ,வேதத்தின் பொருளானவன், கண்டு களிப்புறும் கண்களுக்கு இனிமையானவன்.இத்தகையவனை உள்ளம் கசிந்துஉருகி நாங்கள் போற்றிப் பாடிக்கொண்டிருக்கிறோம் .உனக்கு எண்ணிக்கையில் ஐயம் என்றால் வந்து எண்ணிப்பார்த்துவிட்டு மீண்டும் சென்று உறங்கு.என்று கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.



                                                                                  இறை பணியில் 

                                                                                      பெ.கோமதி 

                                                    சிவமேஜெயம் !!

        சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!


வியாழன், டிசம்பர் 12, 2013

 திருவெம்பாவை தினம் ஒரு பாடல் .


மணிவாசக பெருமான் அருளிய 

   திருவாசகத்திலிருந்து 



       






































                            பாடல் -3

முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்து எதிரெழுந்துஎன்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளுறித் 
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர் 
புத்தடியோம் புன்னைதீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எம்கேலோர் எம்பாவாய்.


முத்துப்போன்ற வெண்மையான பற்களை உடையபெண்ணே நீ நாங்கள் வந்து எழுப்புவதற்கு முன் எழுந்து எங்கள்முன்வந்து இறைவனைத் தந்தை என்றும் ஆனந்த மயமானவன் என்றும்,அமுதம்போன்றவன் என்றும்  அன்பொழுகப் பேசுவாயே இன்று உனக்கு  என்ன ஆயிற்று இன்னும் உன் வாயிற் கதவை திறவாமல் இருக்கிறாயே.வா வந்து உன் வாயில் கதவைத்திற.

 என்று வீதியில் நின்றுகொண்டிருக்கும் பெண்கள் கூற அதைக்கேட்ட  உள்ளிருக்கும் பெண்,

நீங்கள் அப்பரம்பொருளின் மீது மிகுந்த பற்று உடையவர்கள்.ஈசனது பழைய அடியார்கள்,மிகுந்த உரிமை உடையவர்கள் ஆனால் நானோ புதியவள் .எனது பிழையை மன்னித்து ப் பொருத்தருளக்கூடாதா?

என்று கூறுகிறாள்.இதற்கு வீதியில் இருக்கும் பெண்கள்.

நீஇறைவன்மீது எவ்வளவு பற்றும் அன்பும் உடையவள் என்பதை நாங்கள் அறிவோம் .சிந்தையில் தூய்மையும் அன்பும் இருந்தால் போதும்.சித்தம் அழகுடைய நாம் அனைவரும் சென்று அவனது புகழைப்பாடுவோம் நீயும் வருவாயாக, என்று கூறிப் பாடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.


                                                      இறை பணியில் 

                                                                                      பெ.கோமதி 

                                            சிவமேஜெயம் !!

        சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

புதன், டிசம்பர் 11, 2013

திருவெம்பாவை தினம் ஒரு பாடல் .

மணிவாசக பெருமான் அருளிய திருவாசகத் 

தேனிலிருந்து ............








                                                                  திருச்சிற்றம்பலம்

            திருவெம்பாவை 2 ம் பாடல்

 பாசம் பரஞ்சோதிக்கு எனபாய் இராப்பகல்நாம்
பேசும்போது எப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசீ இவையும் சிலவோ விளையாடி 
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்ததற்கு 
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பர்யாம் ஆரேலோர் எம்பாவாய்

திருந்திய அழகான அணிகலன்களை அணிந்த பெண்ணே பரஞ்சோதியான இறைவைன்மீது அன்பும் பற்று வைத்திருக்கிறேன் என்று சொல்வாயே.பகல் இரவு என்று எல்லாப்பொழுதுகளிலும் அவ்வாறுதானே சொல்லிக் கொண்டிருப்பாய். ஆனால் இப்போது உன்பற்றை மலர் தூவிய படுக்கையின்மீது  வைத்து விட்டாயோ?
இக்கேள்வி வாயிலில் காத்திருக்கும் பெண் கேட்பது.இதற்கு பதிலாக உள்ளே இருப்பவள் ,
தீரந்திய அணிகலன்களை அணிந்த பெண்களே சீசீ நீங்கள் கேலியாக பேசிவிளையாடும் சொற்களுள் இவையும் சிலவோ?இவ்வாறு விளையாடுவதற்கு இதுவா நேரம்,?
என்று கேட்கிறாள்.அதற்கு வாயிலில் இருக்கும் பெண்கள் 
 தேவர்களும் கண்டு வணங்குவதற்குக் காட்டாத தம்மலர்போன்ற பாதங்களை நம்போன்ற அடியார்களுக்குக் காட்டி அருள்செய்ய வான்பழித்து மண்புகுந்து வந்து பெருமானிடத்து நாம் எவ்வளவு அன்பு காட்டவேண்டும் என்பதை உணர்ந்து பார்பாயாக.
 என்றுகூறுவதாக இப்பாடல் உரையாடல் நடையில் அமைந்துள்ளது.


                                                             இறை பணியில் 

                                                                                          பெ.கோமதி 

                                                      சிவமேஜெயம் !!

                  சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!
                                                     

செவ்வாய், டிசம்பர் 10, 2013


                                           சித்தர் பாடல்களில் இருந்து...................


 திருமூலர் அருளிய 






                    திருமந்திரத்திலிருந்து .................
                                                     
                                
                                    சில மந்திரங்கள்


மனை உள் இருந்தவர் மாதவர் ஒப்பர்
நினைவு உள் இருந்தவர் நேசத்து உள் நிற்பர்
பனையுள் இருந்த பருந்து அது போல
நினையாதவர்க்கு இல்லை நின் இன்பம் தானே.

இல்லறம் எனும் நல்லறத்தில் இருப்பவர்கள் இறைவனை நினைந்து மிகப்பெரியதவம் வெய்தவர்களுக்கு ஒப்பாவர்.இறைவனை நினைவில் இருத்தியவர்வர்கள் என்றும் அவனது அன்பினுள் இருப்பர்.ஆனால் பெறற்கரிய பேரானந்தம் என்னும் இறையின்பம்  ,எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் கீழே இருக்கும் தனது இரையைத் தனது கூரியபார்வையால் அறியும் கருடனது  பார்வைபோலப் பார்த்து இறைவனைக் கூர்ந்து நினையாதவர்களுக்குக் கிட்டாது.

அரன் அடி சொல்லி அரற்றி அழுது
பரன் அடி நாடியே பாவிப்ப நாளும்
உரன் அடி செய்து அங்கு ஒதுங்க வல்லார்க்கு
நிரன் அடி செய்து நிறைந்து நின்றானே.

இறைவன் திருவடிப்பெருமைகளைக் கூறி ,அவனது அன்பிற்காக அரற்றி அழுது, எங்கும் பரவி நிற்கும் அவனது திருவடிகளை நாளும்  பரவி ,உறுதியான அவன் திருக்கழல்களைப் பற்றி, மற்ற பற்றுக்களில் இருந்து ஒதுங்கியோர்களின் மனதில் நிறைந்து  நின்று அருள்செய்பவன் பராபரன்.

சினம் செய்த நஞ்சு உண்ட தேவர் பிரானைப்
புனம் செய்த நெஞ்சு இடை போற்ற வல்லார்க்குக்
கனம் செய்த வாள் நுதல் பாகனும் அங்கே
இனம் செய்த மான்போல் இணங்கி நின்றானே.

சினத்தின் வடிவமான ஆலகால விடத்தை உண்டு தேவர்களைக்காத்த பெருமானைப் பக்குவப்படுத்தப்பட்ட நெஞ்சினில் வைத்துப் போற்றித் துதிப்போர்க்கு,  வாள்போன்ற நெற்றியை உடைய உமையம்மையின் பாகன், தன் இணைகண்ட மான்போல் அடியார்க்கு இணங்கிவந்து அருள்செய்வான் .

மண் அகத்தான் ஒக்கும் வான் அகத்தான் ஒக்கும்
விண் அகத்தான் ஒக்கும் வேதகத்தான் ஒக்கும்
பண் அகத்து இன் இசை பாடல் உற்றானுக்கே
கண் அகத்தே நின்று காதலித் தேனே.

நிலம் நீர் தீ காற்று ஆகாயம் என்ற ஐம்பூதங்களாய் இருப்பவனும் இறைவன்.வேதத்தின் பொருளாய் இருப்பவனும் இறைவனே.பண்ணில் இன்னிசையாகவும் பாடலாகவும் விளங்குபவனும் அவனே.இதற்கு ஒப்பான் என்று கூற இயலாதவன் இறைவன். இத்தகைய இறைவனைத் தன்கண்ணகத்தே வைத்து அன்பு செய்தேனே என்று பாடுகின்றார் திருமூலர் பெருமான்.


                                                            இறை பணியில் 

                                                                                          பெ.கோமதி 

                                                     சிவமேஜெயம் !!

    சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

திங்கள், டிசம்பர் 09, 2013

திருவெம்பாவை தினம் ஒரு பாடல் .

மணிவாசகப்பெருமான் அருளிய





                            திருவாசகத்திலிருந்து

                                           திருவெம்பாவை


திருவாதிரை உற்சவம் இன்று தொடக்கம்.இன்றிலிருந்து பத்தாம் நாள் அம்பலவாணப்பெருமானுக்கு மகா அபிஷேகம் பின் ஆருத்ரா தரிசனம். எனவே இன்றிலிருந்து தரிசனம் வரை நம்காதுகளில் கேட்பது திருவெம்பாவை மட்டுமேஅன்பர்களே.

முதல் பாடல்

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை யாம்பாடக் கேட்டேயும்     வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எம் தோழி பரிசேலோர் எம்பாவாய்.


தோற்றம் முடிவு என்ற எதுவும் இல்லாப் பெருமானின் பெருமைகளைப் பாடிக்கொண்டு வருகிறோம் நாங்கள்.இதைக் கேட்டும் உறங்கிக் கொண்டு இருக்கிறாயே உன்காதுகள் செவிட்டுத் தன்மை உடையனவா?உலக உயிர்கள் அனைத்திற்கும் தேவனான அந்த மகாதேவனின் திருவடிகளைப் போற்றி வீதிகளில் பாடிய சப்பதம் கேட்டு ஒருவள் அவனது பேரருளை நினைந்து விம்முகிறாள்,தன்னை மறந்தாள், உறங்கிக்கொண்டிருந்த படுக்கையிலிருந்து கீழே விழுகிறாள், விழுந்தவள் ஏதும் இல்லாதவள்போள் மயங்கிக் கிடக்கிறாள். இதுவன்றோ அன்பு. என்னே இவளின் பேரன்பு .இவளின் நிலையை உணர்ந்து உன்னுடன் ஒப்பிட்டுபார்த்து தெளிவு பெறு என்று அதிகாலையில் எழுந்து இறைவன் திருவருளைப்பெறச் சென்ற பெண்ணொருத்தி உறங்கிக்கொண்டிருந்த பெண்ணைப்பார்த்து பாடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.


                                இறை பணியில் 

                                                                            பெ.கோமதி 

                                                சிவமேஜெயம் !!

     சிவத்தை போற்றுவோம் !!  சித்தர்களை போற்றுவோம் !!
 இறைவன் : தான்தோன்றி நாதன்






     

 
உன்னை அன்பினால் யறிந்தார்க்கு உலகேழு மளிப்பவனே
வன்மை கொண்டு மேன்நெறிக்கு வழியற்று மாயவனத்தில்
தன்னை யறியாமல் சுற்றுமெனைத் தான்தோன்றிநாதாநின்
மென்கை கொண்டு அணைத்தருள வேண்டும் ஐயனே.

                                                                                          பெ.கோமதி


                                                சிவமேஜெயம் !!

சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!




படம் : நன்றி தினமலர் 



வியாழன், டிசம்பர் 05, 2013

சித்தர் பாடல்களிலிருந்து  ..........








     மணிவாசக பெருமான் அருளிய  

                          திருவாசகத் தேனிலிருந்து .........




                                              சில துளிகள்



விடை விடாது உகந்த விண்ணவர் கோவே! வினையனேனுடைய மெய்ப் பொருளே!
முடை விடாது, அடியேன் மூத்து, அற மண் ஆய், முழுப் புழுக் குரம்பையில் கிடந்து,
கடைபடாவண்ணம் காத்து, எனை ஆண்ட கடவுளே! கருணை மா கடலே!
இடைவிடாது, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

இடபவாகனத்தை விடாது அதன்மீது ஏறிவரும் வேந்தே தீயவினைகளையுடையவனான என்னுடைய மெய்ப்பொருளே துர்நாற்றம் நீங்காது மூப்புஎய்தி மண்ணோடு மண்ணாகும் இக்கொடிய உடம்பில் கிடந்து வீணாகமல் எனைக்காத்து ஆண்ட கடவுளே கருணையின் பெருங்கடலே இடையீடு இல்லாமல் உனை சிக்கெனப் பிடித்து விட்டேன் என்னைவிட்டு எங்கும் செல்ல முடியாது எம்பெருமானே.

அருள் உடைச் சுடரே! அளிந்தது ஓர் கனியே! பெரும் திறல் அரும் தவர்க்கு அரசே!
பொருள் உடைக் கலையே! புகழ்ச்சியைக் கடந்த போகமே! யோகத்தின் பொலிவே!
தெருள் இடத்து அடியார் சிந்தையுள் புகுந்த செல்வமே! சிவபெருமானே!
இருள் இடத்து, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

அருளே வடிவமான பேரொளியே பழுத்த பழமே அருந்தவம் ஆற்றும் பெரும்திறன் உடையவர்களுக்கு  அரசே ,ஞானத்தின் பொருளோனே.புகழ்மொழிகளைக் கடந்தவனே,யோகத்தின் பயனான பொலிவே.உன்னை அறிந்த தெளிந்த அறிவினை உடைய அடியார்களின் சிந்தையில் வீற்றிருக்கும் செல்வமே,சிவபெருமானே அறியாமை எனும் இருள்நிறைந்த இவ்வுலகத்தில் உன்னைச் சிக்கெனப் பற்றிக்கொண்டேன் இனி எங்கும் செல்ல இயலாது ஐயனே.

ஒப்பு உனக்கு இல்லா ஒருவனே! அடியேன் உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே!
மெய்ப் பதம் அறியா வீறு இலியேற்கு, விழுமியது அளித்தது ஓர் அன்பே!
செப்புதற்கு அரிய செழும் சுடர் மூர்த்தீ! செல்வமே! சிவபெருமானே!
எய்ப்பு இடத்து, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

நினக்கு நிகரானவன் டின்று ஒப்புமை கூற இயாத தனி முதல்வனே,அடியேன் என்உள்ளத்திலும் சுடர்விட்டு எரிகின்ற சோதியே,நின்னை அடையும் உண்மை நெறி  அறியாத எனக்கும் உயர்ந்தநெறியளித்த அன்பே உருவானவனே,சொல்லிற் அளந்து சொல்லற்கியலா பேரொளியான மூர்த்தியே சிவபெருமானே  வலியற்ற நான் உனைச்செிக்கெனப்  பிடித்துக் கொண்டேன்.இனி என்னைவிட்டு உன்னால் எங்குசெல்லமுடியும் எம்பெருமானே. 

அறவையேன் மனமே கோயிலாக் கொண்டு, ஆண்டு, அளவு இலா ஆனந்தம் அருளி,
பிறவி வேர் அறுத்து, என் குடி முழுது ஆண்ட பிஞ்ஞகா! பெரிய எம் பொருளே!
திறவிலே கண்ட காட்சியே! அடியேன் செல்வமே! சிவபெருமானே!
இறவிலே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

இவ்வுலகில் ஆதரவற்ற என்னுடைய மனதையும் கோயிலாகக் கொண்டு அமர்ந்து என்னை ஆட்கொண்டு எல்லையற்ற ஆனந்தத்தை அருளி தொடர்வினையான என்பிறவியை வேர்அறுத்து  என்குடும்பம் முழுவதையும் ஆண்ட பெருமானே பெறற்கரிய பெரும்பொருளே,எமக்குஎளிவந்து காட்சி நல்கியவனே என்செல்வமே சிவபெருமானே தக்க சமயத்தில் உனைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டேன் இனி என்னைவிட்டு எங்கும் செல்ல இயலாது என் செல்வமே.

புன்புலால் யாக்கைபுரை புரைகனிய பொன்நெடும் கோயிலாப்புகுந்தென் 
என்புஎலாம் உருக்கி, எளியை ஆய், ஆண்ட ஈசனே! மாசு இலா மணியே!
துன்பமே, பிறப்பே, இறப்பொடு, மயக்கு, ஆம் தொடக்கு எலாம், அறுத்த நல் சோதீ!
இன்பமே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

இழிந்த தசையால் ஆகிய உடம்பிலுள்ள மயிர்க்கால்களிலும் நெகிழ்ச்சியை உண்டாக்கி இவ்வுடம்பையே பொற்றகோயிலாக ஆக்கி என் உள்புகுந்து என் எலும்புகள் அனைத்து உருகும்படிசெய்து என்னை எளிமையாக ஆட்கொண்டவனே. குற்றமற்ற மணியே , என் துன்பம் பிறப்பு இறப்பு அறியாமை முதலிய தொடர்புகளை எல்லாம் அறுத்த தூய ஒளிப்பிழம்பே பேரின்பமே  உனைச்சிக்கெனப் பிடித்துவிட்டேன் இனி என்னைவி்ட்டு எங்கு எழுந்தருளிச்செல்வாய் எம்பெருமானே.


                    இறை பணியில் 
                                                                 பெ.கோமதி 

                                    சிவமேஜெயம் !!

       சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!