11. இடபாரூட மூர்த்தி
திரிபுர அசுரர்களின் தொல்லை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டேயிருந்தது. இனி பொருக்க முடியாத தேவர்கள் கைலாயம் சென்று நந்தி தேவரின் அனுமதியிடன் சிவபெருமானை தரிசித்தனர். சிவனும் போரிற்கு வேண்டிய ஆயுதங்களை தயார் நிலையில் வைக்கும் படி ஆணை இட்டார். ஆயுதங்கள் தயாரானதும் சிவபெருமானும், உமாதேவியும் தருமதேவதையாகிய வெண்ணிற இடப வாகனத்தில் கைலாய மலையை விட்டு இறங்கி வருகின்றனர். இதனைக் கண்ட அனைவரும் சிவதுதி சொல்லத் துவங்கினர். பின்னர் தேவர்களால் செய்யப்பட்ட தேரினைக்கண்ட சிவபெருமான் இடபவாகனத்தை விட்டு இறங்கி மேருமலையை வில்லாகக் கொண்டு தேர் ஏறியவுடன் தேரின் அச்சு முறிந்தது. இதனைக் கண்ணுற்ற விஷ்ணு சிவன் பால் கொண்ட அன்பினால் இடப உருவமாகி சிவனைத் தாங்கினான். இதனால் விஷ்ணுவிற்கு தலைகனம் ஏற்பட்டது. தன்னைத் தவிர வேறொருவருக்கும் சிவனைத் தாங்கும் சக்தி இல்லை என்ற எண்ணம் வலுப்பெற்றது.
இதனை அறிந்த சிவபெருமான் விஷ்ணுவிற்கு பாடம் புகட்ட எண்ணி, தன்கனத்தை அதிகப்படுத்தினார். இதனைத் தாங்காத இடப வாகணமாகிய விஷ்ணு, இரு செவி, இரு கண்கள், மூக்கு போன்றவை பிதுங்கியும், இரத்தம் வடிந்தும் செயலிழந்து தரையில் வீழ்ந்தார். இதனால் தேவர்கள் பயத்துடன் சிவதுதிகளை சொல்லி அவரை சாந்தப்படுத்தினர். விஷ்ணுவும் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டார். விஷ்ணு தலைகனம் அழிந்தது. மனம் மகிழ்ந்த சிவபெருமான் பூமியில் இறங்கினார். பின்னர் விஷ்ணுவின் வலிமைகளை மறுபடியும் அழித்தார். விஷ்ணுவிடம் என்ன வரம் வேண்டுமென்றுக் கேட்க, விஷ்ணுவும் சிவபெருமான் வாமபாகத்திலிருந்து அவரைத் தாங்கும் சக்தியை தனக்கு கொடுக்க வேண்டும் என வேண்டினார். அதனை நிறைவேற்றிய சிவபெருமான் விஷ்ணுவின் விருப்பப்படி அரியாகிய இடத்தை வாகனமாகக் கொண்டு அதன்மேல் ஏறியமர்ந்தார். எனவே சிவபெருமானுக்கு இடபாரூட மூர்த்தி என்று திருநாமம் உண்டாகிற்று.
இடபாரூட மூர்த்தியை சரிசிக்க நாம் செல்ல வேண்டிய தலம் மயிலாடுதுறையருகேயுள்ள திருவாவடுதுறையாகும். இறைவனது திருநாமம் கோமூத்திஸ்வரர், மாசிலாமணிஸ்வரர் என்பதாகும். இங்குள்ள கோமூத்தி தீர்த்தத்தால் இடபாரூடரை அபிசேகம் செய்ய உடல் நோய் தீரும், குழந்தை பாக்கியம் உண்டாகும், திருமந்திர பொருள் விளங்கும். அருகம்புல் அர்ச்சனையும், தாம்பூல நைவேத்தியமும் பிரதோஷ காலங்களில் கொடுக்க நினைத்தது நடைபெறும். உயர்பதவி கிட்டும். இங்குள்ள சிவனை வில்வ நீரால் அபிசேகம் செய்ய அடுத்த பிறவியிலும் சிவனின் அருள் பரிபூரணமாய் கிடைக்கும் என்பது ஐதீகம்.
12.இடபாந்திக மூர்த்தி
சதுர்யுகங்கள் இரண்டாயிரம் நான்முகனுக்கு ஒரு நாளாகும். அது நூறு கொண்டது நான்முகனது ஆயுட்காலமாகும், நான்முகனின் ஆயுட்காலமே விஷ்ணுவிற்கு ஒரு நாள் ஆகும். ஆக விஷ்ணுவிற்கு நூறு வயது கழிந்தால் உலகிலுள்ள அனைத்து உயிர்களும் அழியும் என்பது கணக்கு, அழியும் ஊழிகாலத்தில் உமையுடன் சேர்ந்து திருநடனம் புரிவார் சிவபெருமான். இக்கணக்கினால் தர்மதேவதை வேதனை கொண்டது. தானும் அழிய வேண்டி வருமே என்ன செய்வது சிவபெருமானிடம் சரணடைவதுத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்று சிவனை சரணடைந்தது. இடபமாக மாறி தர்மதேவதை சிவனின் முன்பு நின்றது. ஐயனே நான் இறவாமலிருக்க வேண்டும். எப்பொழுதும் தங்கள் வாகனமாக நானிருக்கவும் ஆசி கூறுங்கள் என்றது.கேட்ட வரம் கொடுக்கும் அருட்கடலான சிவபெருமானும் இடபத்தில் தலை மேல் தனது கை வைத்து தர்மதேவதையே உன் விருப்பம் நிறைவேற்றப்படும்.
ஆகவே தருமத்தினை உலகிற்கு உணர்த்த கிருதயுகத்தில் நான்கு கால்களுடனும், திரேதாயுகத்தில் இரண்டு கால்களுடனும் கடைசியாக கலியுகத்தில் ஒரு காலுடனும் தோன்றி தர்மத்தினை நிலைநாட்டுவாய். மேலும் எப்பொழுதும் என்னை நீ பிரியாமல் இருப்பாய் எனது வாகனமாகும் பேற்றையும் நீயேப் பெறுவாய் என்று திருவாய் எழுந்தருளினார்.தனது அடியார்களுக்கு காட்சியளிக்கும் சிவபெருமானின் இடப வாத்திக தரிசன ரகசியம் இதுவேயாகும், இனி இடப வாத்திக மூர்த்தியை சரிசிக்க நாம் செல்ல வேண்டிய தலம் திருவாவடுதுறையாகும். இத்தலம் மயிலாடுதுறையருகே அமைந்துள்ளது. இங்குள்ள மாசிலாமணிஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள இடபாந்திக மூர்த்தியை வணங்குவோமானால் ஊழிக்காலத்தில் நம்முடைய ஆன்மா சிவபெருமானை தஞ்சமடையும் என்பது ஐதீகம். இவருக்கு திங்கள்,வியாழக்கிழமைகளில் வெண்தாமரை அர்ச்சனையும், பசுவின் பால் நைவேத்தியமும் கொடுக்க குரு தோஷ நிவர்த்தியுண்டாகும். மேலும் சிவபெருமானுக்கு வில்வ நீரால் அபிசேகம் செய்தால் மறுபிறவியிலும் சிவனருள் கிடைக்கும்.
13. புஜங்கலளித மூர்த்தி
காசிப முனிவரின் மனைவியரான கத்துருவிற்கும், வினந்தைக்கும் தங்களில் அடிகானவர் யார் என்றப் போட்டி ஏற்பட்டது. அப்படி அழகானவள் மற்றவளை சிறையில் அடைக்க வேண்டும் என்ற முடிவுடன் கணவரான காசிபரை நாடினார். கணவரோ கத்துருவே அழகி என்றுக்கூறினார், இதன் விளைவாக வினத்தை சிறையில் அடைக்கப்பட்டார். தன்னை விடுவிக்கும் படி கத்துருவை வேண்டினாள். கத்துருவோ தனக்கு அமிர்தம் கொடுத்தால் மட்டுமே விடுதலை கிடைக்கும் என்றார். உடன் வினந்தை தன் மகனான கருடனின் வனத்திற்கு இதைக் கொண்டு சென்றார். கருடனும் தேவலோகம் சென்று போரிட்டு அமிர்தத்துடன் செல்லும் போது திருமால் கருடனுடன் போரிட்டு வெல்ல முடியாமல் பறவை ராஜனே உன் பெருமைகளைப் போற்றினோம், உனக்கு வேண்டும் வரத்தைக் கேள் என்றார். கருடனே பதிலுக்கு திருமாலே உன் வலிமையை கண்டுகளித்தேன் நீ உனக்கு வேண்டிய இரண்டு வரங்களை கேள் என்றார். திருமாலும் இதுதான் சந்தர்ப்பமென தனக்கு வாகனமாக இருக்க வேண்டியும், அரவங்களுக்கு அமுதம் கொடுக்காதிருக்கவும் வரம் வாங்கினார்.
கருடனும் அதற்கிசைந்து கொடுத்து விட்டு அமுதத்துடன் சிறைக்கு வந்து தாயிடம் கொடுத்தார். பின்னர் சிவபூஜை செய்து சிவபெருமானிடம் பலவரங்களைப் பெற்றுப் பின்னர் அன்று முதல் திருமாலின் வாகனமானார். மேலும் கருடன் திருமாலிடம் பெற்ற வரத்தினால் மற்றொரு தாயான கத்துருவின் கட்செவிகளைக் கொன்று கொடுமைப் படுத்தினார். இதனால் கோபம் கொண்ட நாகங்கள் சிவபூஜை செய்து தங்களுக்கு இறவாபுகழும், கருடனிடமிருந்து பாதுகாப்பும் வேண்டும் வேண்டினர். உடன் சிவபெருமானும் வேண்டிய வரத்தைக் கொடுத்து விட்டு நாகங்களை தன்னுடலில் ஆபரணமாக அணிந்து கொண்டார். இதனையே நாம் என்ன கருடா சௌக்கியமா என நாகங்கள் கூறுவதாக கொள்வோம். அதற்கு என்ன பொருளெனில் சிறியோரை கூடுதலைவிட பெரியோரைச் சேருதலே சிறந்தது என்பதாகும். பாம்புகளுக்கு அபயமளித்ததால் சிவபெருமானுக்கு புஜங்கலளித மூர்த்தி என்னும் பெயர் ஏற்பட்டது. ( புஜங்கம் - நாகம், லளிதம்- அழகு, ஆபரணம்) புஜங்கலளித மூர்த்தியை நாம் தரிசிக்க கல்லனை அருகேயுள்ள திருப்பெரும்புலியூர் செல்ல வேண்டும். சிவபெருமான் நாகங்களின் மீது நடனமாடிய திருக்கோயில் என்பதால் சிறப்பு பெற்றது. ராகுவின் அதிதேவதையான பாம்புவின் தலமென்பதால் இத்தல மூர்த்தியை வழிபட ராகு கிரகத் தொல்லைகள் விலகும், அவரது பார்வை நம்மீது பட்டு நற்பலன்களைக் கொடுக்கும். இவருக்கு நீலமலர் அர்ச்சனையும், பால், பழம், தேன் கொண்டு நைவேத்தியமும் சோமவாரங்களில் கொடுக்க சர்ப்ப கால தோஷம் விலகும். பாம்பு பயம் நிவாரணம் பெறும். இங்குள்ள இறைவன் பெயர் வியாக்கிரபுரிஸ்வரர் இறைவி பெயர் சௌந்திரநாயகி என்பதாகும். இவர்களுக்கு மஞ்சள் நீரால் அபிசேகம் செய்தாலும் சர்ப்பகால, ராகு தோஷம் விலகும் என்பது கண்கூடாகும்.
14. புஜங்கத்ராச மூர்த்தி
தாருவனத்தில் வசித்து வந்த முனிவர்கள் தவமே சிறந்தது என்றும், அவரது துணைவியர்களோ கற்பே சிறப்புடையது என்றும் வாழ்ந்து வந்தனர். இவர்களை சோதிக்க எண்ணினார் சிவபெருமான். பிட்சாடண கோலத்தில் சிவபெருமானும், மோகிணி கோலத்தில் திருமாலும் அவ்வனம் சென்று முனிவர்களின் தவத்தையும், துணைவியரின் கற்பையும் சோதித்தனர். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் தவத்தை அழித்தது மோகிணி அவதார மெடுத்த திருமால் என்றும், கற்பை பரிசோதித்தது பிட்சாடண ரூபம் கொண்ட சிவபெருமான் என்றும் தங்களது தவ வலிமையால் அறிந்தனர். அதனால் கோபம் கொண்டு விஷ மரங்களை குச்சிகளாக்கி அதை நெய்யில் நனைத்து ஹோமம் வளர்த்து வந்தனர். அதிலிருந்து வந்த பல கொடியப் பொருள்களை சிவனின் மீது ஏவினர். சிவனே அவற்றையெல்லாம் உடை, சிலம்பு, ஆயுதம், சிரோ மாலை, சேனை என்று உருமாற்றி தன்னிடம் வைத்துக்கொண்டார். தாங்கள் ஏவிய பொருள்கள் அனைத்தும் அவருக்கு ஆபரணமாகவும், படையாகவும் மாறியதை அறிந்த முனிவர்கள் பெரும் கோபம் கொண்டனர். மேலும் அதிக விஷமுள்ள பாம்புகளை சிவனின் மீது ஏவினர். அந்த பாம்பு உலகை நாசமாக்கும் பொருட்டு தன்னுடைய நான்து பற்களில் கடும் விஷத்துடன் சிவபெருமானை அடைந்தது அவரும் அதற்கு சிறிது பயப்படும் படி நடித்து விட்டு தன்னுடலில் ஏற்கனவே ஆபரணமாக உள்ள பாம்புகளுடன் சேர்ந்து விடும்படி கூறி சேர்த்தார். அப்பாம்புகள் அவருடலில் கங்கணம்(கைவளை, காப்பு) காலணி அரைஞான் கயிறு ஆகியவையாக அணிந்து கொண்டு காட்சிக் கொடுத்தார். தாருவனத்து முனிவர் ஏவிய பாம்புகள் அவரை அச்சுருத்தியமையால் அவரை புஜங்கத்ராச மூர்த்தி என்றனர். (புஜங்கள் - பாம்பு, திராசம் - பயப்படுதல்)
புஜங்கத்ராச மூர்த்தி யை தரிசிக்க நாம் செல்ல வேண்டி தலம் பெரும்புலியூர் ஆகும். இந்த சிவபெருமான் கோயிலில் தான் சிவன் தன்னுடைய ஆடையாக பாம்புகளை அணிந்த படி காட்சிக் கொடுக்கின்றார். இந்த வடிவத்தையே நாம் புஜங்கத்ராச மூர்த்தி என்கின்றோம். இவரை வணங்கினால் ராகு தோஷம் நிவர்த்தியடையும். இவருக்கு சோமவாரம் அல்லது குருவாரத்தில் வில்வார்ச்சனையும், சம்பா அன்ன நைவேத்தியமும் கொடுக்க கடன் தொல்லை தீரும். இங்குள்ள சிவபெருமானை மஞ்சள் நீரால் அபிசேகம் செய்ய ராகு கால தோஷம், சர்ப்ப கால தோஷம் விலகும்.
15. சந்த்யாந்ருத்த மூர்த்தி
தேவர்கள் சிவபெருமானின் உதவியில்லாமல் பாற்கடலைக் கடைந்தனர். அதில் மந்திரமலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு கடைந்தனர். இதில் வாசுகியின் வாயையும் வாலையும் தேவர்களும், அசுரர்களும் இழுக்கும் பொருட்டு வாசுகி கொடிய ஆலகால விஷத்தைத் துப்பியது அவ்விஷம் அனைவரையும் எதிர்த்தது, எதிர்ப்பட்ட திருமாலும் அதன் முன் உடல் கருகினார். இதனைக் கண்ட தேவர்கள் கைலாயம் சென்று சிவபெருமானிடம் முறையிட்டனர்.
சிவபெருமானும் தேவர்களின் துயரைப் போக்க அவ்விஷத்தை உண்டார். அதனால் அவர்க்கு ஒன்றும் நேரவில்லை எனினும் ஒரு விளையாட்டை நிகழ்த்தினார். அவ்விஷம் அவரைத் தாக்கியது போல், மயங்குவது போல் உமா தேவியின் முன்பு மௌனமாய் உறங்குவது போல் இருந்தார். இதனைக் கண்ட தேவர்கள் அவரை அர்ச்சித்து அன்று முழுவதும் உறக்கம், உணவின்றி இருந்தனர். அந்தத் திதியை நாம் ஏகாதசி என்போம். மறுநாளாகிய துவாதசியில் தேவர்கள் பாராயணஞ் செய்தனர். அதற்கு மேற்ப்பட்ட திதியான திரயோதசியில் சிவயபெருமான் சூலம், உடுக்கை சகிதம் ஒரு சாமகாலம் திருநடனம் செய்தார். அந்த காலத்தை நாம் பிரதோஷம் என்போம். அதாவது பதினைந்து தினங்களுக்கொருமுறை வரும் திரயோதசியை நாம் மாத பிரதோஷம் என்றும், வருடத்திற்கொருமுறை வரும் மகா சிவராத்திரியை வருடப் பிரதோஷம் என்றும், தினசரி மாலை முடிந்து இரவு ஆரம்பிக்கும் நேரத்தையும் நாம் பிரதோஷ காலமாகக கொள்ளலாம்.
சிவபெருமான் நிருத்தம்(நிருத்தம் - நடனம்) செய்வதைக் கண்ட தேவர்கள் மனம் மகிழ்ந்தனர். தனது கரங்களை சிரத்திற்கு மேல் தூக்கி சிவசிவ என்று ஆர்ப்பரித்தனர். ஆடினர், பாடினர், தேவர்கள் அவர் நடனத்திற்கு ஏற்றவாறு வாத்தியங்களும், விஷ்ணு மிருதங்கமும் வாசித்தனர். பிரதோஷ காலத்தில் சிவபெருமான் நடனம் ஆடியதால் அவரது பெயர் சந்த்யாந்ருத்த மூர்த்தி என்றானது. அவரை தரிசிக்க மதுரை செல்ல வேண்டும். சதாசிவமூர்த்தியின் உச்சியில் அமைந்துள்ள ஈசான முகத்திலிருந்து தோன்றிய வடிவமே நடராஜமூர்த்தி யாவார். அவரது வடிவமே சந்த்யாந்ருத்த மூர்த்தி போன்ற பல வடிவமாகப் பறந்து விரிந்தது. மதுரை வெள்ளியம்பலத்தில் உள்ள இவரை வணங்குவோமானால் நம் தொழில்களை காப்பதுடன் பலகலைகளில் சிறப்பு பெற உதவுவார். செந்தாமரையால் அர்ச்சனையும், தேங்காய் சாத நைவேத்தியமும் திங்கள், புதன் கிழமை மாலையில் செய்ய தடங்கள் அகழும், விரோதிகள் ஒழிவர். நன்மை பாராட்டுவர். மதுரை நடராஜ பெருமானுக்கு பன்னீரால் அபிசேகம் செய்தால் கல்வியறிவு மேன்மையடையும் என்பது ஐதீகம்.
16. சதா நிருத்த மூர்த்தி
சிவபெருமான் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் பஞ்சாட்சரத்தையே தன் மேனியாகக் கொண்டு இருப்பவர். அவரது மூன்று கரங்களும், இருபாதங்களும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து செயல்களை செய்கிறது. அது எப்படியெனில் டமருகம் தாங்கிய கரத்தினால் படைத்தலும், அமைந்த கரத்தினால் காத்தலும், மழு தாங்கிய கரத்தினால் அழித்தலும், முயலகன் முதுகில் ஊன்றிய திருப்பாதங்களால் மறைத்தலும், அனவரத நடனம் புரியும் அடிப் பாதத்தினால் அருளலும் புரிகின்றார்.
மேலும் உலக உயிர்கள் அனைத்தும் எங்கும் நிறைந்துள்ள இறைவனுடன் ஐக்கியமாவதைக் குறிக்கிறது. இந்த நடனத்தை இடது புறமாக நின்று தரிசிக்கும் உமாதேவியாரின் தோற்றம். சிவபெருமான் திருத்தக் கோலம் கொண்டு நடனம் புரியும் திருவடியில் நகரமும், திருவயிற்றின் மீது ம கரமும், திருத்தோளின் மீது சி கரமும், திருமுகத்தில் வா கரமும், திருமுடியின் மீது ய கரமும் கொண்டு கருணையால் இயற்றினார். சிவபெருமான் பல காரணங்களால் பல முறை நடனம் புரிந்துள்ளார். இருப்பினும் உமாதேவியார் தரிசிக்கும் நிலையில் தேவர்கள், சிவகணங்கள் நத்திதேவர் போன்றவர்களோடும், இசைவாத்தியங்களோடும், பஞ்சாட்சரமேனியோடு எப்பொழுதும் திருநடனம் புரிந்து கொண்டே இருப்பதால் இவரது பெயர் சதா நிருத்த மூர்த்தி யாகும்.
சிதம்பரத்திலுள்ள பொன்னம்பலத்தில் சிவபெருமான் எப்பொழுதும் ஆனந்த தாண்டவம் ஆடிக்கொண்டேயுள்ளார். எங்கெங்கெலாம் நடராஜர் இருப்பினும் அவர்களனைவரும் இரவில் இங்கு வருவதாக ஐதீகம். எனவே இத்தலத்தில் நடராஜ பெருமானுக்கு செய்ய வேண்டிய பரிகாரங்களை செய்யலாம். இறைவனைக் கூத்தபிரான் என்றும், இறைவியை சிவகாம சுந்தரி என்றும் அழைப்பர். கவியாற்றுவதற்கும், வாதப் போர்புரிவதற்கும், தடைபெற்ற தேர் திருவிழா மறுபடியும் நடைபெறவும், இவரை வணங்கினால் தடை நீங்கி நடைபெறும் என்பது கண் கூடு. இவருக்கு முல்லைப்பூ அர்ச்சனையும், வெண்பொங்கல் நைவேத்தியமும் திங்கள், வியாழக் கிழமைகளில் செய்ய விரோதியும் நண்பனாவான். மேலும் இங்குள்ள கூத்தப்பிரானுக்கு அன்ன அபிசேகம் செய்ய கைவிட் அரசுரிமையும் கிடைக்கும்.
17. சண்ட தாண்டவ மூர்த்தி
திருவாலங்காட்டில் மகிமையை உணர்ந்த சுனந்த முனிவர் அங்கு தாண்டவ நடத்தைக் காட்ட வேண்டிய தவமியற்றினார். அப்போது சிவபெருமானின் கைவிரலில் உள்ள பாம்பு அவரது திருவிரலில் விஷம் கக்கியது. இதனைக் கண்ட இடபம் நீ செய்த தீமைக்காக திருக்கைலையை விட்டு நீங்குமாறு கார்கோடகனிடம் கூறியது. கார்கோடகனும் பயந்து சிவனிடம் முறையிட்டது. உடன் சிவபெருமான் திருவாலங்காட்டில் தவமியற்றும் சுனந்தருடன் சேர்ந்து சண்டதாண்டவத்தை தரிசித்த உடன் கைலை வருவாயாக என்றார். திருவாலங்காடு சென்ற கார்கோடகன் சுனந்தருடன் சேர்ந்து தவமியற்றியது. அப்போது சும்பன், நிசும்பன் எனும் இரு அசுரர்கள் அனைவரையும் கொடுமைபடுத்தி வந்தார்கள். இதனைக் கண்ட தேவர்கள் பார்வதி தேவியிடம் முறையிட்டனர். பார்வதியும் சப்தமாதர்கள், சிவகணங்களுடன் சாமுண்டி என்ற சக்தியாக மாறி அவர்கள் இருவரையும் கொன்றனர். அவர்களிருவரின் சகோதரியான குரோதி என்பவளின் மகன் இரத்த பீசன்.
அவனது ஒவ்வொரு சொட்டு இரத்தமும் நிலத்தில் விழுந்தால் அதுவொரு இரத்தபீசனாக மாறீவிடும். இத்தகைய வரம் பெற்ற அவனை அழிக்க வேண்டி பார்வதி காளி தேவியை தோற்றுவித்தாள். காளி அவனது ஒரு சொட்டு இரத்தம் கூட நிலத்தில் சிந்த விடாமல் பருகினாள். போர் நல்லபடியாக முடிந்தது. பார்வதி சண்டியாகிய காளி தேவி சிவபெருமானிடம் நடனம் செய்து அவருடன் வசிக்கும் வரத்தையும் வழங்கிவிட்டு சென்றார். அசுரனின் மாமிசத்தையும், இரத்தத்தையும் குடித்ததால் காளிதேவி யாருக்கும் அடங்காமல் வனங்களில் அரசாட்சி புரிந்து வந்தார். அவ்வாறே திருவாலங்காடு வந்து சேர்ந்தார். அங்கு வந்த காளி அட்டகாசத்தை ஆரம்பித்தார். இச் செய்தி முனிவர் மூலம் நாரதரிடம் தெரிவிக்கப் பட்டது. நாரதர் மூலம் சிவபெருமானிடம் தெரிவிக்கப்பட்டது. சிவபெருமான் உடன் பைரவராக மாறி போர் புரிந்தார். காளி தேவி தோற்றுவிட்டார். தோற்றக் காளி நடனப் போர்புரிய பைரவரை அழைத்தார். பைரவரும் சம்மதித்து தேவர்களின் வாத்திய இசைக்கு ஏற்ப நடனம் ஆடினார். நவரசங்கள் ததும்ப இருவரும் சலைக்காமல் ஆடினர். இந்த சண்ட தாண்டவம் நடை பெறும் போது சிவனின் குண்டலம் கீழே விழ, அதைத்தன் காலால் எடுத்துக் காதில் பொருத்தினார் போட்டியாக ஆடிய காளி வெட்கத்துடன் தன் தோல்வியை ஒப்புக்கொண்டார்.
காளியின் செருக்கும் அழிந்தது. சுனந்தர், கார்கோடகன், உற்பட அனைத்து தேவர், முனிவர்களும் எல்லாக் காலமும் காணும்படி தாண்டவக் கோலத்தை அருளினார். இக்காரணத்தால் அவரை சண்ட தாண்டவ மூர்த்தி என்கிறோம். கும்பகோணம் பேருந்து நிலையம் அருகேயுள்ளது கீழ்க் கோட்டம். இறைவன் பெயர் நாகநாதர், இறைவி பெயர் பெரியநாயகி ஆவார். இங்குள்ள நடராஜ மண்டபத்தை நாம் பேரம்பலம் என்போம். இங்கமைந்த மூர்த்தியை வணங்கி சிவ தியானம் செய்தால் தாண்டவ ஒலியைக் கேட்கலாம். முல்லைப்பூ அர்ச்சனையும், வெண்சாத நைவேத்தியமும் சோமவாரங்களில் கொடுத்தோமானால் நடனம், பாட்டு, நட்டுவாங்கம், என அனைத்தும் கைவரும். மேலும் இங்குள்ள மூலவரை கும்பநீரால் அபிசேகம் செய்து வழிபட்டால் பிறவிப் பயன் பெறமுடியும்.
18. கங்காதர மூர்த்தி
திருக்கைலையிலுள்ள ஓரு தோட்டத்தில் சிவபெருமான் நடைபயின்றுக் கொண்டிருந்தார். பார்வதி தேவி ஓசைப்படாமல் சென்று அவரது இரு கண்களையும் விளையாட்டாய் பற்றினார். உடன் உலக உயிர்கள் அனைத்திற்கும் அளவிலாத துன்பம் ஏற்பட்டது. அதனால் உலகம் முழுவதும் பேரிருள் சூழ்ந்தது. இதனையறிந்த சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணைத் திறந்து அனைவரையும் காத்தார். ஒளி வந்ததால் அனைத்து உயிர்களும் துன்பம் நீங்கி இன்பமடைந்தனர். அனைவரும் சிவபெருமானைப் போற்றினர். இதனைக் கேள்விப் பட்ட பார்வதி தேவி அவசரமாக தன் கைகளை நொடிப்பொழுதில் எடுத்தார். இதனால் இவரது பத்து கைவிரலில் இருந்த வியர்வைத் துளிகள் பத்தும் கங்கையாக மாறி மூவுலம் முழுவதும் பரவி பெருத்த சேதத்தையும், அழிவையும் உண்டாக்கியது. இதனைக் கண்ட முவுலகத்தினரும் சிவபெருமானிடம் முறையிட்டனர்.
சிவபெருமானும் அவ்வெள்ளத்தை அடக்கி அதனை தனது சிரசில் ஓர் மயிர் முனையில் தரித்தார். இதனைக்கண்ட அனைவரும் சிவபெருமானைப் போற்றித் துதித்தனர். நான்முகன், இந்திரன், திருமால் ஆகிய மூவரும் சிவபெருமானிடம் சென்று நாதா பார்வதி தேவியின் கைவிரல் வியர்வையால் உண்டான கங்கை பெரும் புனிதமானது, அதை உங்கள் முடியில் தரித்ததால் அது மேலும் புனிதமடைகிறது. அத்தகைய புனிதப் பொருளை எங்களுக்கும் கொஞ்சம் கொடுத்தருள வேண்டும் என்றனர். அதன்படியே இந்திரன் தனது அமராவதி நகருக்கும், நான்முகன் தனது மனோவதி நகருக்கும், திருமால் தனது வைகுண்டத்திற்கும் கங்கையைக் கொண்டு சேர்த்தனர்.
கங்கையின் வெள்ளத்தையும், வேகத்தையும் குறைத்து தனது சடைமுடியில் தாங்கியிருப்பதால் சிவபெருமானுக்கு கங்காதர மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது. கங்காதர மூர்த்தியை தரிசிக்க இமயத்திற்கு தான் செல்ல வேண்டும். இமயமலையே கங்காதர மூர்த்தியின் இருப்பிடமாகும். அங்கு சென்று கங்காதர மூர்த்தியை மானசீகமாய் வணங்கி அங்கு கிடைக்கும் கங்கை நீரை வீட்டிற்கு எடுத்து வந்து தெளிக்க இடம் புனிதமாகும். கங்காதர மூர்த்தியை மல்லிப்பூ அர்ச்சனையும், பாலில் செய்த இனிப்பு பண்ட நைவேத்தியமும் சோமவாரத்தில் சந்தியா காலத்தில் செய்தோமானால் செல்வசெழிப்பும் இனியோரு பிறவி இல்லா நிலையும் ஏற்படும். இந்த கங்கை நீரை வீட்டில் கலசத்தில் வைத்து வழிபட லஷ்மி கடாட்சம் கிடைக்கும்.
19. கங்கா விசர்ஜன மூர்த்தி
சகரன் எனும் அரசன் அயோத்தி நகரை ஆண்டுவந்தான். அவன் அஸ்வமேத யாகம் செய்ய ஒரு குதிரையைக் கொணர்ந்தான். அக்குதிரை இருந்தால் தானே யாகம் நடைபெறும் அதைத் தடுக்க வேண்டி குதிரையை பாதாளத்தில் கபில முனிவர் அருகே கட்டி வைத்தான். அயோத்தி மன்னன் குதிரையைத்தேடி கொண்டுவரும் படி தமது அறுபதினாயிரம் மக்களையும் பணிந்தார். பாதாளத்தில் முனிவர் அருகே குதிரைக் கண்ட அவர்கள் முனிவரே கள்வன் என முடிவு கட்டினர். உடன் முனிவர் கண்விழிக்க, அனைவரும் சாம்பலானாகள். இச் செய்தி கேள்விப்பட்ட மன்னன் தன் மகன் அஞ்சுமானை அனுப்பினார். அஞ்சுமானும் கபிலரிடம் சென்று உண்மையைக் கூறி குதிரையை மீட்டு தன் தந்தையின் யாகம் நிøவேற உதவினான். அவனது வம்சாவளியிலே வந்தவனே பகிரதன் ஆவான். அவன் தனது முன்னோர்க்கு ஏற்பட்ட நிலையை எண்ணி நான்முகனை நோக்கி தவமிருந்தான். நான்முகன் தோன்றி கங்கையால் உன் முன்னோர்கள் மோட்சமடைவர் எவனே சிவனை நோக்கி தவமிக்க சொல்லி மறைந்தார். சிவனை நோக்கி தவமிருந்தான் பகிரதன்.
சிவபெருமான் கேட்ட வரம் கொடுத்தார். பின் கங்கையை நோக்கி தவமிருந்தான். கங்கையோ தன்னை அடக்க சிவபெருமானால் மட்டுமே முடியும் எனவே மறுபடியும் சிவனை நோக்கி தவமியற்றும் படி கூறினார். மறுபடியும் சிவன் கேட்ட வரம் கொடுத்தார், உடன் கங்கை வந்தார். சிவபெருமான் அவரை அடக்கும் பொருட்டு தனது தலை முடியில் அணிந்தார். இதனையறியா பகிரதன் பதறினார். பின் சிவபெருமான் தன் தலை முடியில் இருந்த கங்கையில் இருந்து சிலதுளிகள் பகிரதன் கைகளில் விட்டார். அந்த சில துளிகளும் வேகத்துடன் வந்து ஐந்து முனிவர்கள் இயற்றிய யாகத்தை அழித்தது, அதனால் அம்முனிவர்கள் கங்கையை தம் உள்ளங்கையில் வாங்கி உட்கொண்டனர். பகிரதன் கங்கையைக் காணாது திகைத்தான். பின் முனிவர்களை வணங்கி நடந்ததைச் சொல்லி கங்கையைத் திருப்பிதர வேண்டினான். அம்முனிவர்களும் இசைந்து தம் செவி வழியாக விட்டனர். அதனால் கங்கைக்கு ஜானவி என்ற பெயர் ஏற்பட்டது. பகிரதன் கங்கையை தம் முன்னோர்களின் சாம்பல் மீது தெளிக்க அவர்கள் சொர்க்கம் அடைந்தனர்.
பகிரதன் கொண்டு வந்ததால் கங்கைக்கு பகீரதி என்ற பெயர் ஏற்பட்டது. கங்கையை தனது சடையில் ஏற்று வழிபாட்டிற்கே சிறு துளி கொடுத்து வழி காட்டியதால் சிவபெருமானுக்கு கங்கா விசர்ஜன மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது. அவரை தரிசிக்க கேதார் நாத் செல்ல வேண்டும். ஆறு மாத காலம் கோயிலில் வழிபாடுகள் நடைபெறும். பனிமழையால் ஆறுமாதம் மூடப்பட்டிருக்கும். உமை சிவனிடம் இடபாகம் பெற்ற தலமே கோதார்நாத் ஆகும். இங்கு கோயில் கொண்டுள்ள கோதாரேஸ்வரரை வணங்கி அங்குள்ள புனித நீரை வீட்டில் நடைபெறும் சுபகாரியங்களுக்கு பயன்படுத்தினால் சுபமாகும். வெண்தாமரை அர்ச்சனையும், எள்ளோதரை நைவேத்தியமும் அமாவாசை, திங்கள் கிழமைகளில் செய்தோமானால் பிதுர் தோஷம் சரியாகும். அவர்கள் சொர்க்கம் செல்வர். மேலும் இங்கிருந்து கொண்டு செல்லும் நீரை வெள்ளிக்கலசத்தில் வைத்து பூஜிக்க குபேர சம்பத்து கிட்டும் என்பது ஐதீகம்.
20. திரிபுராந்தக மூர்த்தி
தாரகாசுரனின் மூன்று மகன்களும் நான்முகனை நோக்கி நெடுங்காலம் தவமியற்றி வந்தனர். நான்முகனும் காட்சிக் கொடுத்தார் உடன் அவர்கள் என்றும் அழியாத வரம் வேண்டும் என்றனர். உடன் நான்முகனோ அது முடியாத காரியம் அனைவரும் அனைவரும் ஒரு நாள் அழிந்தே தீருவோம். எனவே மோட்சமாவது கேளுங்கள் கிடைக்கும். இவ்வுலகில் என்றும் அழியாமல் இருப்பவர் சிவபெருமான் மட்டுமே என்றார். உடனே அம்மூவரும் அப்படியானால் பொன், வெள்ளி, இரும்பினால் ஆன சுவருடைய முப்புரம் வேண்டும். அவை நாங்கள் நினைத்த இடத்திற்கு மாற வேண்டும். அவற்றை எங்களையும் சிவபெருமான் தவிர வேறொருவர் அழிக்க முடியாத வரத்தை கேட்டனர். நான்முகனும் கொடுத்து விட்டு மறைந்தார். அம்மூவரும் தங்கள் சுயரூபத்தை சிவனிடம் காட்டாமல் மற்ற அனைவரிடத்திலும் காட்டினர். தேவர்கள் அவர்களது தொல்லை தாளாமல் திருமாலிடமும், இந்திரனிடமும் முறையிட, அவர்கள் அசுரர்களிடம் தோற்று திரும்பினர். பின்னர் சிவனை நோக்கி தவமிருந்தனர். சிவபெருமான் அவர்கள் தமது அடியார் எனவேக் கொல்ல முடியாது என்றார். மீண்டும் கடுமையான தவத்தை திருமால், இந்திரன், நரதர் மேற்க்கொண்டனர். உடன் சிவபெருமான் அப்படியானால் தேர் முதலான பேர் கருவிகளைத் தயார் செய்யும் படி தேவர்களிடம் கூறினார்.
தேவர்களும் அவ்வாறே தயார் செய்தனர். தேரில் மந்திர மலையை அச்சாகவும், சந்திர, சூரியர் சக்கரமாகவும், நதிகள் தேர்க் கொடியாகவும், அஷ்டபர்வதங்கள் தேரின் தூண்களாகவும், புண்ணிய நதிகள் சாமரம் வீசவும், தேவகணத்தினர் வாத்தியங்கள் இசைத்தப்படி உடன் வர தேர் தயாரானது. சிவபெருமான் பார்வதியுடன் இடபவாகணத்தில் இருந்து தேரில் கால் எடுத்து வைத்தவுடன் தேரின் அச்சு முறிந்தது. உடன் இடபமாக மாறி திருமால் தேரைத் தாங்கினார். ஆனாலும் தேர் மேலும் சாய அனைவரும் முதற்கடவுளை வேண்ட, தேர் பழைய படி சரியானது. பின் தேவகணங்கள் படைசூழ, இந்திரன், திருமால், முருகன், வினாயகன் என அனைவரும் தங்களது வாகனம் ஏறி முடிவில் அனைவரின் எண்ணப்படி மேருமலையை வில்லாகக் கொண்டு, வாசுகியை அம்பாகக் கொண்டு நாணேற்றினார். பின் திடிரென அவற்றை வைத்து விட்டு முப்புறங்களையும் பார்த்து ஒரு புன்னகைப் புரிந்தார். முப்புறங்களும் எரிந்து சாம்பலாயின.
உடன் அசுரர்கள் மூவரும் ( தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி) சிவபெருமானிடம் மன்னிப்புப் கேட்க. அவரும் அவர்களை மன்னித்து துவார பாலகராக வைத்துக் கொண்டார். தேவர்களின் துயர்துடைத்து முப்புரங்களையும் எரித்ததால் சிவபெருமானுக்கு திரிபு ராந்தக மூர்த்தி என்னும் பெயர் ஏற்பட்டது. இவரை தரிசிக்க நாம் செல்ல வேணடிய தலம் கடலூரில் உள்ள திருஅதிகையாகும். இங்குள்ள இறைவன் பெயர் திரிபுராந்தக மூர்த்தி, அதிகைநாதர் என்பதும், இறைவி பெயர் திரிபுரசுந்தரியாகும். இவர்க்கு கெடில நதியால் அபிசேகமும் வில்வார்ச்சனையும் செய்ய பகைவர் பகை ஒழிந்து நண்பராவார்கள். சூலை நோய் இருப்பின் இந்த சுவாமியை வழிபட நோய் குறைந்து உடல் நலம் சீராகும். மேலும் இங்குள்ள சிவபெருமானுக்கு திருமஞ்சனத்தூள் அபிசேகம் செய்ய எவ்வகை நோயும் குணமடையும் என்பது ஐதீகம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக