மஹாசக்திக்கு விண்ணப்பம் | ||
மோகத்தைக் கொன்றுவிடு-அல்லா லென்தன் மூச்சை நிறுத்திவிடு; தேகத்தைச் சாய்த்துவிடு-அல்லா லதில் சிந்தனை மாய்த்துவிடு; யோகத் திருத்திவிடு-அல்லா லென்தன் ஊனைச் சிதைத்துவிடு; ஏகத் திருந்துலகம்-இங்குள்ளன யாவையும் செய்பவளே! | ||
பந்தத்தை நீக்கிவிடு-அல்லா லுயிர்ப் பாரத்தைப் போக்கிவிடு; சிந்தை தெளிவாக்கு-அல்லா லிரைச் செத்த வுடலாக்கு; இந்தப் பதர்களையே-நெல்லாமென எண்ணி இருப்பேனோ? எந்தப் பொருளிலுமே-உள்ளே நின்று இயங்கி யிருப்பவளே. | ||
உள்ளம் குளிராதோ?-பொய்யாணவ ஊனம் ஒழியாதோ? கள்ளம் உருகாதோ?-அம்மா!பக்திக் கண்ணீர் பெருகாதோ? வெள் ளைக் கருணையிலே இந்நாய் சிறு வேட்கை தவிராதோ? விள்ளற் கரியவளே அனைத்திலும் மேவி யிருப்பவளே! |
மகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம் . ஸ்ரீ பட்டினத்தார் குடில் வண்ணார் பேட்டை தாளமுத்து நகர் தூத்துக்குடி - 628002 9944091910 , 8220981910 சிவமேஜெயம் அறக்கட்டளை பதிவு எண் 10/2016 , பட்டினத்தாருக்கு ஆலயம் எழுப்பவும், உழவாரப்பணி , கோசாலை , அன்னதானம் முதலிய நற்பணிகளுக்காக ஆரம்பித்திருக்கிறோம் . நல்லது சிவமேஜெயம். GPAY நம்பர் 9944091910 NAME : K MUTHUKRISHNAN BANK : AXIS BANK A/C NO : 920020052430287 BRANCH : TUTICORIN, IFSC CODE :UTIB0000105
வெள்ளி, மே 27, 2011
பாரதியார் பாடல்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக