சித்தர் பாடல்களில் இருந்து ....
மஹான் ஸ்ரீ பட்டினத்து சுவாமிகள் பாடல் .
மகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம் தூத்துக்குடி -2 9944091910,9487854171 சிவமேஜெயம் அறக்கட்டளை பதிவு எண் 10/2016 , பட்டினத்தாருக்கு ஆலயம் எழுப்பவும், உழவாரப்பணி , கோசாலை , அன்னதானம் முதலிய நற்பணிகளுக்காக ஆரம்பித்திருக்கிறோம் . நல்லது சிவமேஜெயம். NAME : SIVAMEJEYAM FOUNDATION BANK : FEDERAL BANK A/C NO : 11910200075338 BRANCH : TUTICORIN, PAN NO : AAQTS5580B IFSC CODE : FDRL0001191
சித்தர் பாடல்களில் இருந்து ....
மஹான் ஸ்ரீ பட்டினத்து சுவாமிகள் பாடல் .
அம்பாள் வாலையரசி பூசை .....
வாலையைப் பூசிக்க சித்தரானார்
வாலைக் கொத்தாசையாய் சிவகர்த்தரானார்
வேலையைப் பார்த்தல்லோ கூலி வைத்தார்
இந்த விதம் தெரியுமோ வாலைப்பெண்ணே !
-கொங்கணச்சித்தர் வாலைக்கும்மி .
அண்டமத்தனையும் இயக்கும் சக்தி வாலையே , எல்லா உயிர்க்கும் புவனம் அனைத்திற்கும் இயக்கத்திற்கு காரணமாய் இருப்பவளும் அவளே அன்பிலே குழந்தை வடிவாய் ஆற்றலிலே மனோன்மணியாய் அனைத்துயிர்கட்கும் அருள்பவள் என் அன்னை வாலையே .
ஆதிசக்தியின் குழந்தை வடிவமே வாலை இவளை பூசிக்காமல் சித்தி என்பது சத்தியமாய் சாத்தியமில்லை . பத்து வயது சிறுமியாய் இவளை பூஜித்து பூசையை ஆரம்பித்து படிப்படியாக சித்தி பெற்று பின் அன்னை மனோன்மணி தெய்வமாக பூசை முடித்து அவள் அருளாலே அப்பன் அருள் பெற்று மெய்யான நிலையை அடைந்தார்கள் சித்தர் பெருமக்கள் .
சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன்
சிவத்தை போற்றுவோம் !!! சித்தர்களை போற்றுவோம் !!!
சித்தர் பாடல்களில் இருந்து ...
ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம்
1. ஓம் ஷண்முக பதயே நமோ நமஹ
2. ஓம் ஷண்மத பதயே நமோ நமஹ
3. ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நமஹ
4. ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நமஹ
5. ஓம் ஷட்கோண பதயே நமோ நமஹ
6. ஓம் ஷட்கோஷ பதயே நமோ நமஹ
7. ஓம் நவநிதி பதயே நமோ நமஹ
8. ஓம் சுபநிதி பதயே நமோ நமஹ
9. ஓம் நரபதி பதயே நமோ நமஹ
10. ஓம் ஸுரபதி பதயே நமோ நமஹ
11. ஓம் நடச்சிவ பதயே நமோ நமஹ
12. ஓம் ஷடக்ஷர பதயே நமோ நமஹ
13. ஓம் கவிராஜ பதயே நமோ நமஹ
14. ஓம் தபராஜ பதயே நமோ நமஹ
15. ஓம் இகபர பதயே நமோ நமஹ
16. ஓம் புகழ்முனி பதயே நமோ நமஹ
17. ஓம் ஜயஜய பதயே நமோ நமஹ
18. ஓம் நயநய பதயே நமோ நமஹ
19. ஓம் மஞ்சுள பதயே நமோ நமஹ
20. ஓம் குஞ்சரீ பதயே நமோ நமஹ
21. ஓம் வல்லீ பதயே நமோ நமஹ
22. ஓம் மல்ல பதயே நமோ நமஹ
23. ஓம் அஸ்த்ர பதயே நமோ நமஹ
24. ஓம் சஸ்த்ர பதயே நமோ நமஹ
25. ஓம் ஷஷ்டி பதயே நமோ நமஹ
26. ஓம் இஷ்டி பதயே நமோ நமஹ
27. ஓம் அபேத பதயே நமோ நமஹ
28. ஓம் ஸுபோத பதயே நமோ நமஹ
29. ஓம் வியூஹ பதயே நமோ நமஹ
30. ஓம் மயூர பதயே நமோ நமஹ
31. ஓம் பூத பதயே நமோ நமஹ
32. ஓம் வேத பதயே நமோ நமஹ
33. ஓம் புராண பதயே நமோ நமஹ
34. ஓம் ப்ராண பதயே நமோ நமஹ
35. ஓம் பக்த பதயே நமோ நமஹ
36. ஓம் முக்த பதயே நமோ நமஹ
37. ஓம் அகார பதயே நமோ நமஹ
38. ஓம் உகார பதயே நமோ நமஹ
39. ஓம் மகார பதயே நமோ நமஹ
40. ஓம் விகாச பதயே நமோ நமஹ
41. ஓம் ஆதி பதயே நமோ நமஹ
42. ஓம் பூதி பதயே நமோ நமஹ
43. ஓம் அமார பதயே நமோ நமஹ
44. ஓம் குமார பதயே நமோ நமஹ
பாம்பன் சுவாமிகள் அருளிய இந்த நாற்பத்தி நான்கு வரிகளை தினமும் காலையில் குளித்துவிட்டு பூஜை அறையில் முருகப்பெருமானின் திருவுருவ படத்திற்கு முன்பு ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு மனதார இந்த வரிகளை பார்த்து வாயார ஒரே ஒரு முறை உச்சரித்தாலே போதும். உங்கள் வாழ்க்கையில் வெற்றிதான் தவிரவும் துஷ்ட சக்திகள் உங்களைக் கண்டு அஞ்சும் வேல் வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்தது அன்னை பார்வதி தேவியின் அம்சம் அல்லவா வேல் அதைக் கொண்டு சூரர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டினார் முருகப்பெருமான் . நாமும் தினமும் குமாரஸ்தவம் படித்து எதிர்மறை எண்ணங்களையும் துர்சக்திகளையும் சம்ஹாரம் செய்வோம் முருகன் அருள் கொண்டு .
என்றும் இறைபணியில்
சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன்
சிவத்தை போற்றுவோம் !!! சித்தர்களை போற்றுவோம் !!!