புதன், ஏப்ரல் 12, 2017

 திருவதிகை வீரட்டானம்  முப்புரம் எரித்த சிவனார் ..


                        தாரகாசுரன் என்ற அசுரனின் மகன்களான வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் மூவரும் தேவர்களை எல்லாம் அடிமைப்படுத்த வேண்டும் என்று அவர்கள் படை எடுத்தார்கள் போரில் தோற்று திரும்பினார்கள் எப்படியாவது தேவர்களை வெல்ல வேண்டும் என்று தவம் செய்ய தொடங்கினர் சிறந்த சிவா பக்தர்களான அவர்கள் பிரம்மனை நோக்கி தவம் இயற்றினார் கடுந்தவதினால் இந்திரலோகம் ஆட்டம் கண்டது தவாக்கினியை தாங்க முடியாத இந்திரன் தேவலோக அழகிகளை அனுப்பி அவர்கள் தவத்தை கலைக்க முயற்றி செய்தான் பலனில்லை . கடுந்தவம் பிரம்மனை அவர்கள் முன் தோன்ற செய்தது தவத்தை மெச்சி, தரிசனம் அளித்த நான்முகனிடம் எங்களுக்கு இறைவா வரம் வேண்டும் என்றார்கள் அது தன்னால் முடியாது என்று மறுத்து வேறு கேளுங்கள் என்றார் உடனே அவர்கள்   “”நினைத்த இடமெங்கும் செல்லும்படியாக ஆகாய மார்க்கத்தில் பறக்கத் தக்க மூன்று கோட்டைகள் வேண்டும். நாங்கள் மூவரும் ஒன்று சேர்ந்து இருக்கும்போது மட்டுமே ஒரே கணையால்தான் எங்கள் உயிர் பிரிய வேண்டும்” என்ற அரிய வரத்தைப் பெற்றார்கள். பொன் , வெள்ளி , இரும்பு ஆகியவற்றால் ஆன மூன்று கோட்டைகளை நிர்மாணித்து ஆட்சி செலுத்தினர் . நினைத்த நேரத்தில் அந்த இடங்களுக்கே சென்று அட்டூழியம் செய்தனர் .
                 
                   வரத்தால் ஆணவம் அவர்கள் கண்களை மறைக்க தேவர்களையும் , முனிவர்களையும் துன்புறுத்த தொடங்கினார்கள் . இந்திரன் தேவர்களை அழைத்துக்கொண்டு பிரம்மனிடம் போனான் , பிரம்மன் தன்னால் ஏதும் முடியாது என்று பரந்தாமனை நாடினர் பாற்கடல் வாசியோ பரமேஸ்வரர் ஒருவரால் மட்டுமே அவர்களை அழிக்க முடியும் அவரிடமே முறையிடலாம் என்று எல்லோரையும் அழைத்துக் கொண்டு கயிலாயம் வந்தார்  சிவபெருமானிடம் முறையிட எல்லாம் அறிந்த எம்பெருமான் புன்முறுவல் புரிந்து விஸ்வகர்மாவை அழைத்து தேர் ஒன்று பண்ணு  என்று ஆணையிட , செஞ்சடையோன் செல்வதற்கு ஏற்றார் போல தேவதச்சன் அழகிய தேரர் உண்டு பண்ண  , சக்கரங்களாக சூரியனும் , சந்திரனும் சாரதியாக நான்முகன் வேதங்கள் பரிகளாக , பிரணவம் பரியோட்டும் கோலாக , மேரு மலை வில்லாக , வாசுகி நாகம் நாணாக , மகாவிஷ்ணு , அக்கினி தேவனை அம்பின் கூராகவும் வாயுதேவனை அம்பின் அடியாகவும் கொண்டு தானே அம்பாக , ரதம் போருக்கு தயாராக இருக்க எம்பெருமான் அழகே வடிவான சுந்தரன் போர்க்கோலம் பூண்டு மான்மழு வேந்திய கரத்தில் வில்லை ஏந்தி ரதத்தில் ஏறி முப்புரங்களை அழிக்க அன்பே வடிவானவன் புறப்படுகிறான் . மூன்று கோட்டைளையும் கண்டான் அசுரர்களையும் கண்டான்  தன்னையே பூஜிக்கும் இவர்களை அழிப்பதா என்று சிந்தனை அனைத்துயிர்க்கும் அப்பனல்லவா , சிவ பக்தர்களான அழிக்கவில்லை , நாண் ஏற்றவில்லை அம்பு பூட்டவில்லை செம்பவள இதழில் சிறு முறுவல் அழிந்தன முப்புரமும் , கோட்டை மூன்றும் உருகி ஓடியது அவர்கள் மூவரும் பரமன் காலடியில் அவர்கள் ஆணவம் , கன்மம் , மாயை என்கிற மூன்று மலங்களும் ஈசன் சிரிப்பில் எரிந்தது அவர்களை தாயினும் நல்லன் நம்பெருமான் இருவரை தனக்கு வாயில்காப்பாளர்களாகவும் மற்றவரை வாத்தியங்கள் இசைப்பவராகவும் அருள் புரிந்து ஆட்கொண்டார் . 

                                          திருமுறைகளில் திரிபுராந்தக மூர்த்தி “அப்பு அணி செஞ்சடை ஆதிபுராதனன் முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள் முப்புரமாவது மும்மல காரியம் அப்புரம் எய்தமை யார் அறிவாரோ” என்று திருமூலர் தன்னுடைய  திருமந்திரத்தில் கூறுகிறார் . நாம் எத்துணை பாவம் செய்தாலும் சிவசிவ என்றிட அனைத்தும் தொலையும் அவன் நாமத்தையே உச்சரித்துக் கொண்டு இருந்தால் இருவினையும் நம்பால் அணுகாது இது சத்தியம் . திரி புரம் எரிசெய்த விரிசடை நாயகனை சரணடைந்து மும்மலத்தையும் வென்று அவன் பாதத்தில் ஆனந்தமாக இருப்போம் . நல்லது . சிவமேஜெயம் . 


                      சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன்       சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!