புதன், டிசம்பர் 11, 2013

திருவெம்பாவை தினம் ஒரு பாடல் .

மணிவாசக பெருமான் அருளிய திருவாசகத் 

தேனிலிருந்து ............








                                                                  திருச்சிற்றம்பலம்

            திருவெம்பாவை 2 ம் பாடல்

 பாசம் பரஞ்சோதிக்கு எனபாய் இராப்பகல்நாம்
பேசும்போது எப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசீ இவையும் சிலவோ விளையாடி 
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்ததற்கு 
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பர்யாம் ஆரேலோர் எம்பாவாய்

திருந்திய அழகான அணிகலன்களை அணிந்த பெண்ணே பரஞ்சோதியான இறைவைன்மீது அன்பும் பற்று வைத்திருக்கிறேன் என்று சொல்வாயே.பகல் இரவு என்று எல்லாப்பொழுதுகளிலும் அவ்வாறுதானே சொல்லிக் கொண்டிருப்பாய். ஆனால் இப்போது உன்பற்றை மலர் தூவிய படுக்கையின்மீது  வைத்து விட்டாயோ?
இக்கேள்வி வாயிலில் காத்திருக்கும் பெண் கேட்பது.இதற்கு பதிலாக உள்ளே இருப்பவள் ,
தீரந்திய அணிகலன்களை அணிந்த பெண்களே சீசீ நீங்கள் கேலியாக பேசிவிளையாடும் சொற்களுள் இவையும் சிலவோ?இவ்வாறு விளையாடுவதற்கு இதுவா நேரம்,?
என்று கேட்கிறாள்.அதற்கு வாயிலில் இருக்கும் பெண்கள் 
 தேவர்களும் கண்டு வணங்குவதற்குக் காட்டாத தம்மலர்போன்ற பாதங்களை நம்போன்ற அடியார்களுக்குக் காட்டி அருள்செய்ய வான்பழித்து மண்புகுந்து வந்து பெருமானிடத்து நாம் எவ்வளவு அன்பு காட்டவேண்டும் என்பதை உணர்ந்து பார்பாயாக.
 என்றுகூறுவதாக இப்பாடல் உரையாடல் நடையில் அமைந்துள்ளது.


                                                             இறை பணியில் 

                                                                                          பெ.கோமதி 

                                                      சிவமேஜெயம் !!

                  சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!
                                                     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக