திருவெம்பாவை தினம் ஒரு பாடல் .
மணிவாசக பெருமான் அருளிய
திருவாசகத்திலிருந்து
பாடல் -3
முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்து எதிரெழுந்துஎன்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளுறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்னைதீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எம்கேலோர் எம்பாவாய்.
முத்துப்போன்ற வெண்மையான பற்களை உடையபெண்ணே நீ நாங்கள் வந்து எழுப்புவதற்கு முன் எழுந்து எங்கள்முன்வந்து இறைவனைத் தந்தை என்றும் ஆனந்த மயமானவன் என்றும்,அமுதம்போன்றவன் என்றும் அன்பொழுகப் பேசுவாயே இன்று உனக்கு என்ன ஆயிற்று இன்னும் உன் வாயிற் கதவை திறவாமல் இருக்கிறாயே.வா வந்து உன் வாயில் கதவைத்திற.
என்று வீதியில் நின்றுகொண்டிருக்கும் பெண்கள் கூற அதைக்கேட்ட உள்ளிருக்கும் பெண்,
நீங்கள் அப்பரம்பொருளின் மீது மிகுந்த பற்று உடையவர்கள்.ஈசனது பழைய அடியார்கள்,மிகுந்த உரிமை உடையவர்கள் ஆனால் நானோ புதியவள் .எனது பிழையை மன்னித்து ப் பொருத்தருளக்கூடாதா?
என்று கூறுகிறாள்.இதற்கு வீதியில் இருக்கும் பெண்கள்.
நீஇறைவன்மீது எவ்வளவு பற்றும் அன்பும் உடையவள் என்பதை நாங்கள் அறிவோம் .சிந்தையில் தூய்மையும் அன்பும் இருந்தால் போதும்.சித்தம் அழகுடைய நாம் அனைவரும் சென்று அவனது புகழைப்பாடுவோம் நீயும் வருவாயாக, என்று கூறிப் பாடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
இறை பணியில்
பெ.கோமதி
சிவமேஜெயம் !!
சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக