சனி, டிசம்பர் 21, 2013

திருவெம்பாவை தினம் ஒரு பாடல் .


மணிவாசகப் பெருமான் அருளிய 

   திருவாசகத்திலிருந்து 

பாடல் -8

கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
குழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டில்லையோ
வாழி ஈதென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாரும் இவ்வாறே
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைப் பங்காளனையே பாடேலோர் எம்பாவாய்.

கோழி கூவியது அது கேட்டு மற்ற பறவைகளும் ஒலி செய்கின்றன.,இறைவன் பள்ளி எழுந்தருள வெண்சங்குகள் ஒலிக்கின்றன, உவமை கூறமுடியாத ஒளிப்பிழம்பு உவமை கூறமுயாத பேரருளாளன் ,உவமை கூறமுடியா விழுமிய பொருள் என்று அப்பெருமானது பெருமைகளை நாங்கள் புகழ்ந்த பாடிக்கொண்டு இருக்கிறோம்.இதை நீ கேட்க வில்லையா?வாய்திறந்து பதில் கூறாது உறங்குகின்றாயே,இது என்ன உறக்கமோ ?அருட்கடலாக விள்குபவனிடம்நீ செலுத்தும் அன்பு ,இப்படிப்பட்ட தன்னைம உடையதுதானா?ஊழிக்காலத்திலும் தலைவனாய் நின்று உலகங்களைப் படைக்கும் ஒருவனை உமையின் கணவனைப் புகழ்ந்து பாடுவோமாக .என்று பாடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.


                                                                                    இறை பணியில் 

                                                                                         பெ.கோமதி 

                                                    சிவமேஜெயம் !!

        சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக