வெள்ளி, டிசம்பர் 13, 2013

திருவெம்பாவை தினம் ஒரு பாடல் .


மணிவாசக பெருமான் அருளிய 

   திருவாசகத்திலிருந்து 

பாடல்-4
ஒள்நித்திலநகையாய் இன்னம் புலர்ந்தினறோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிககொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய் .

ஒளி பொருந்திய முத்துப் போன்ற பற்களை உடைய பெண்ணே இனனும் உனக்கு பொழுது புலரவில்லையா?

என்று வீதிவழியே வந்த பெண்கள் கேட்க.அதற்கு உள் இருக்கும் பெண்,

அழகிய கிளி போன்ற மொழியினை உடைய பெண்கள் எல்லோரும் வந்துவிட்டார்களா?

என்று பதில் கேள்வி எழுப்புகிறாள்.அதற்கு வீதியில்  காத்திருக்கும் பெண்கள்,

வந்திருக்கும் பெண்களை எண்ணிப்பார்த்துச் சொல்கிறோம் ,நீ அதுவரை உறங்கிக்கொண்டு காலத்தைப் போக்காதே .விண்ணுள்ளோர்களுக்கும் அருமருந்தானவன் ,வேதத்தின் பொருளானவன், கண்டு களிப்புறும் கண்களுக்கு இனிமையானவன்.இத்தகையவனை உள்ளம் கசிந்துஉருகி நாங்கள் போற்றிப் பாடிக்கொண்டிருக்கிறோம் .உனக்கு எண்ணிக்கையில் ஐயம் என்றால் வந்து எண்ணிப்பார்த்துவிட்டு மீண்டும் சென்று உறங்கு.என்று கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.                                                                                  இறை பணியில் 

                                                                                      பெ.கோமதி 

                                                    சிவமேஜெயம் !!

        சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக