திருவெம்பாவை தினம் ஒரு பாடல் .
மணிவாசகப் பெருமான் அருளிய
திருவாசகத்திலிருந்து
பாடல் -13
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகுஇனத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவுவார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்து நம்
சங்கம் சிலம்ப சிலம்பு கலந்து ஆர்ப்பக்
கொங்கைகள் பொங்க குடையும் புனல் பொங்கப்
பங்கயப் புாம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.
பொய்கையில் கருங்குவளை புாத்திருக்கிறது இறைவனின் திருமேனியில் கரிய நிறமுடைய உமாதேவியார் இருக்கிறார்.பொய்கையில் செந்தாமரை மலர்கள் புாத்திருக்கின்றன.எம்பெருமானின் மேனியும் செம்மை நிறம் உடையதாக இருக்கின்றது.பொய்கையில் குருகு எனும் நீர்ப்பறவைகள் காணப்படுகின்றன.எம் இறைவனின் மேனியில் குருக்கத்தி மலர்மாலை காணப்படுகின்றது.பொய்கையில் நீராடும் ஒலி கேட்கின்றது,எம்பெருமானின் மீது பாம்புகள் புரள்கின்றன.மக்கள் தங்கள் உடல் அழுக்கைப்போக்க பொய்கையில் நீராடுகின்றனர். உயிர்கள் ஆணவம் முதலிய மும்மல அழுக்கைப் போக்கிக் கொள்ள எம் இறைவனை நாடுகின்றன.எனவே இப்பொய்கை எம்பிரானும் பிராட்டியும் போல் காட்சி அளிக்கின்றது. அப்படிப்பட்ட நீர்நிலையில் இறங்கி, சங்குவளையல்களும் காற்சிலம்பும் ஒலிக்கவும் முலைகள் விம்மிப் புாரிக்கவும் ,நீர் மேல் எழுமாறு தாமரை படர்ந்த அழகியநீரில் பாய்ந்து ஆடுவோமாக.
இறை பணியில்
பெ.கோமதி
சிவமேஜெயம் !!
சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!
பெ.கோமதி
சிவமேஜெயம் !!
சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக