திங்கள், டிசம்பர் 09, 2013

திருவெம்பாவை தினம் ஒரு பாடல் .

மணிவாசகப்பெருமான் அருளிய

                            திருவாசகத்திலிருந்து

                                           திருவெம்பாவை


திருவாதிரை உற்சவம் இன்று தொடக்கம்.இன்றிலிருந்து பத்தாம் நாள் அம்பலவாணப்பெருமானுக்கு மகா அபிஷேகம் பின் ஆருத்ரா தரிசனம். எனவே இன்றிலிருந்து தரிசனம் வரை நம்காதுகளில் கேட்பது திருவெம்பாவை மட்டுமேஅன்பர்களே.

முதல் பாடல்

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை யாம்பாடக் கேட்டேயும்     வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எம் தோழி பரிசேலோர் எம்பாவாய்.


தோற்றம் முடிவு என்ற எதுவும் இல்லாப் பெருமானின் பெருமைகளைப் பாடிக்கொண்டு வருகிறோம் நாங்கள்.இதைக் கேட்டும் உறங்கிக் கொண்டு இருக்கிறாயே உன்காதுகள் செவிட்டுத் தன்மை உடையனவா?உலக உயிர்கள் அனைத்திற்கும் தேவனான அந்த மகாதேவனின் திருவடிகளைப் போற்றி வீதிகளில் பாடிய சப்பதம் கேட்டு ஒருவள் அவனது பேரருளை நினைந்து விம்முகிறாள்,தன்னை மறந்தாள், உறங்கிக்கொண்டிருந்த படுக்கையிலிருந்து கீழே விழுகிறாள், விழுந்தவள் ஏதும் இல்லாதவள்போள் மயங்கிக் கிடக்கிறாள். இதுவன்றோ அன்பு. என்னே இவளின் பேரன்பு .இவளின் நிலையை உணர்ந்து உன்னுடன் ஒப்பிட்டுபார்த்து தெளிவு பெறு என்று அதிகாலையில் எழுந்து இறைவன் திருவருளைப்பெறச் சென்ற பெண்ணொருத்தி உறங்கிக்கொண்டிருந்த பெண்ணைப்பார்த்து பாடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.


                                இறை பணியில் 

                                                                            பெ.கோமதி 

                                                சிவமேஜெயம் !!

     சிவத்தை போற்றுவோம் !!  சித்தர்களை போற்றுவோம் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக