மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேர்என்னக்
கையால் குடைந்து குடைந்துன் கழல் பாடி
ஐயா வழிஅடியோம் வாழ்ந்தோம்காண் ஆர்அழல்போல்
செய்யாவெண் நீறாடி செல்வா சிறுமருங்கல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
யைா நீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.
நெருப்பு பிழம்பு போன்ற சிவந்த மேனியை உடையவனே! மேனி முழுதும் வெண்ணீற்றைப் புாசி இருப்பவனே ! உயிர்களுக்கு மேலான வீட்டின்பத்தை அளிக்கும் வெல்வனே!நுண்ணிய இடையும் மைபுாசிய கண்ணும் உடைய உமாதேவியன் கணவனே! வண்டுகள் மொய்க்கும் இடம் அகன்ற குளங்களில் ”முகோ ”என ஒலி எழும்படி நீரைக் கைகளால் விலக்கி முழ்கிக் குளிக்கும் நாங்கள் உமது திருவடிப் பெருமையைப் புகழ்ந்த பாடி .வழிவழியாக அடிமைசெய்து வாழ்ந்து வருகிறோம்.நீயும் உன் அடியார்களை அப்பக்குவ நிலைக்கு ஏற்ப ஆட்கொண்டு அருள் செய்கிறாய்.அந்த உமது அருள் விளையாட்டின் பணனை நாங்கள் பெற்று உய்ந்தவர்கள் ஆனோம்.இந்நிலையில் இருந்து தாழ்ந்து போகாதவாறு ,எங்களைக் காப்பாற்றுவாயாக. என்று பாடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
இறை பணியில்
பெ.கோமதி
சிவமேஜெயம் !!
சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக