செவ்வாய், டிசம்பர் 24, 2013

திருவெம்பாவை தினம் ஒரு பாடல் .


மணிவாசகப் பெருமான் அருளிய 

   திருவாசகத்திலிருந்து 



பாடல் -10
பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதைஒருபால் திருமேனி ஒன்று இல்லன் 
வேமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓதஉலவா ஒருதோழன் தொண்டருளன்
போதில் குலத்தரன்தன் கோயிற் பிணாப்பிள்ளைகாள் 
ஏதவனூர் ஏதவன் பேர் ஆர்உற்றார் ஆர்அயலார்
ஏதுஅவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.

கீழ் உலகங்கள் ஏழினுக்கும் கீழாய் சொல்அளவைக் கடந்து நிற்பது அவனது திருவடிமலர்கள்.மலர்களால் அழகுசெய்யப்பட்டஅவனது திருமுடியும்எல்லாவற்றையும் கடந்து நிற்பது .அவனது உடம்பில் பாதி பெண்என்பர். அவனுக்குத் திருமேனி ஒன்றல்ல பல. வேதங்களும் விண்ணுலகத்தவரும் மண்ணுலகத்தவரும் புகழ்ந்து பேசினாலும் அப்புகழ் மொழிகளுக்கு அப்பாற்பட்டு,உயிர்களுக்குத் துணையாக விளங்குபவன்.அடியார்களின் உள்ளத்தில் இருப்பவன். குற்றமற்ற உயிரினங்களின் பிறவித் தளையை அறுக்கவல்ல பெருமானது கோயிலில் பணிசெய்யும் பெண்பிள்ளைகளே அவனடைய ஊர் எது?அவன் பெயர் யாது? அவன் உறவினர்கள் யாவர் ?பகைவர் யாவர்?அவனை எவ்வாறு புகழ்ந்து பாடமுடியும்? கூறுவீராகஎன்று  கேட்பதாக இப்பாடல் அமைந்துள்ளது.



                                                                                      இறை பணியில் 

                                                                                         பெ.கோமதி 

                                                    சிவமேஜெயம் !!



        சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக