ஞாயிறு, டிசம்பர் 22, 2013

திருவெம்பாவை தினம் ஒரு பாடல் .


மணிவாசகப் பெருமான் அருளிய 

   திருவாசகத்திலிருந்து 


பாடல் -9
முன்னைப்பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே 
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றஉம் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் 
அன்னவரே எம்கணவர் ஆவார் அவர்உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம் 
இன்னவகையேல் எமக்கெங்கோன் நல்குதியேல்
என்னகுறையும் இலம்பேலோர் எம்பாவாய்.

பழமைக்கும் பழமையான பொருள்களுக்கெல்லாம் பழமையானவனே பின்னேதோன்றிய புதுமைகளுக்கெல்லாம் புதுமையானவனே, உன்னை இறைவனாக வணங்கப்பெற்ற நாங்கள் சிறந்த அடியார்கள் ஆனோம். உம்முடைய அடியார்களின் திருவடிகளையே வணங்குவோம். அவர்களுக்கே உரிமை உடையவர்களாக ஆவோம். அவர்களே எங்களுக்குக் கணவன்மார்களாக  வாய்க்கவும்வேண்டும். அவர்கள் சொற்படி நடந்து அவர்களுக்கு அடிமைகளாக ஆகி அவர்களுக்குக் குற்றேவல் செய்வோம்.இப்படிப்பட்ட வரத்தினை எம்பெருமானாகிய நீவிர் வழங்குவீரேல் நாங்கள் எந்தக்குறையும் இல்லாதவர்களாக வாழ்வோம்.என்று மார்கழிமாத வழிபாட்டின் பயனை எடுத்தியம்புவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

                                                         
                                                                                  இறை பணியில் 

                                                                                         பெ.கோமதி 

                                                    சிவமேஜெயம் !!

        சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக