திங்கள், ஏப்ரல் 06, 2015

அட்ட வீரட்டானம் ..........

                     திருக்குறுக்கை 

      காமனை தகித்தது 


இருந்த மனத்தை இசைய இருத்திப்
பொருந்தி லிங்க வழியது போக்கித்
திருந்திய காமன்செ யலழித் தம்கண்
அரும்தவ யோகம் கொறுக்கை அமர்ந்ததே.

                        - திருமூலர் திருமந்திரம் 

 திருமால் மைந்தனாகிய மன்மதன் தேவர்கள் வேண்டுதற்கு இணங்கி நிட்டையில் அமர்ந்திருந்த சிவபெருமானின் தியானம் கலைதல் பொருட்டு அவர் மீது கரும்பு வில் வளைத்து மலர் அம்பு எய்திட்டான் . நிட்டை கலைந்த எம்பெருமான் நெற்றிக் கண் விழித்து காமனை நோக்க அணல் தாளாது சாம்பலானான் . காமத்தை அடக்குதல் என்பது இயலாத காரியமாகும் . ஈசன் அவனை எரித்தது அரிய பெரும் தவ யோகம் ஆகும் . நம் மனமது ஒரு செயலில் உறுதியாக இல்லாமல் இடையில் தோன்றும் காமத்திற்கு அடிமைப்பட்டு அந்த செயலை விட்டுவிடுகிறது . அவ்வாறு தோன்றும் காம எண்ணத்தை நமது அறிவுக் கருத்தால் அகற்றுதல் வேண்டும் . காமனும் நமக்கு கட்டுப்படுவான் திருக்குறுக்கை அமர்ந்த சிவபெருமானை நோக்கி மனதை செலுத்தி சிவ சிந்தனையில் இருந்தால் .   
                     சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 


   சிவத்தை போற்றுவோம் !!    சித்தர்களை போற்றுவோம் !!                             


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக