பட்டினத்தார் கூறும் அருளுரைகள் ....
நன்னாரிற் பூட்டியசூத்திரப் பாவைநன் னார்தப்பினாலற்
றன்னாலு மாடிச்சலித்திடு மோவந்தத் தன்மையைப்போல்
உன்னாலி யானுந்திரிவ தல்லான்மற் றுனைப்பிரிந்தால்
என்னா லிங்காவதுண்டோ யிறைவாகச்சி யேகம்பனே .
பொம்மலாட்டம் எனப்படும் கலையில் நூலில் பொம்மையை கட்டி அதை ஆட்டுவிப்பர் . ஆட்டுவிப்பவன் இல்லாமல் அந்த பொம்மை தானே ஆடாது அதே போல என்னை ஆட்டுவிக்கும் சூத்ரதாரி நீ சொல்ல நான் ஆடுவேன் நீ உன் பிடியை விட்டுவிட்டால் என்னால் தனியே என்ன செய்ய இயலும் என் அப்பனே கச்சியின் கண் எழுந்தருள் செய்யும் ஏகம்ப நாதனே .
நம்மை முழுமையாக ஈசன் பதத்தில் சேர்த்து விட வேண்டும் அவன் அருகில் இருத்தலே இப்பிறவிக்கு நலம் பயக்கும்அவன் துணை இல்லாமல் நம்மால் ஒன்றும் ஆகாது என்ற தத்துவத்தை இவ்வாறு விளக்குகிறார் .
நல்லா ரிணக்கமும் நின்பூசை நேசமு ஞானமுமே
யல்லாது வேறு நிலையுளதோ அகமும் பொருளும்
இல்லாளுஞ் சுற்றமு மைந்தரும் வாழ்வும் எழிலுடம்பும்
எல்லாம் வெளிமயக்கே யிறைவாகச்சி யேகம்பனே.
நல்ல ஒழுக்கத்தை விட்டு வழுவாது இருக்கும் நல்லவர்களுடைய நட்பில் இருப்பதும் உன்னை உள்ளன்போடு பூசை செய்வதும் , சிவ ஞானமும் அல்லாது இச் சிறியேனுக்கு வேறு நிலை உள்ளதோ எம்பெருமானே , இல்லை ! வாழும் வீடும் , சேர்த்து வைத்த பொன் முதலிய பெரும் செல்வங்களும் , நில புலன்களும் , மனையாளும் , புத்திர செல்வங்களும் , உறவினர்களும் , இறுமாப்புடன் தான் அழகு என்று இருக்கும் இந்த தேகமும் எல்லாம் நிலை இல்லை புற மயக்கமே இறைவா கச்சி ஏகம்ப நாதனே .
சிவ பதம் மட்டுமே நிலை என்று உறுதி படக் கூறுகிறார் .
சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன்
சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக