வெள்ளி, ஏப்ரல் 10, 2015



அத்திரி மகரிஷி வரலாறு ..........
























உலகம் போற்றும் ரிஷிகளில் முதன்மையானவர் என்று அத்ரி மகரிஷியை சொல்லலாம் . படைக்கும் தொழில் புரிந்திடும் பிரம்மனின் மானச புத்திரர் இவர் . இவருடைய மனைவி அனுசுயா தேவி இவர்கள் இருவருமே  தவசக்தி நிறைந்தவர்கள் . ராமனும் சீதையும் வனவாசத்தில் முதன் முதலில் அத்ரி முனிவர் ஆசிரமத்தில் தங்கி அவர்களிடம் ஆசி பெற்றனர் .

ஒரு சமயம் நாட்டில் மழை பெய்யாது கொடும் வறட்சி நிலவியது . கடும் பஞ்சம் தலை விரித்தாடியது , இதனைக் கண்ட அனுசுயா தேவியின் மனம் வருந்தியது தன் தவசக்தியால் கங்கையை அங்கு வரவழைத்து பஞ்சத்தைப் போக்கிய பெருமை மிகுந்தவள் அனுசுயா தேவி .

அத்திரி முனிவரும் தவத்தில் சளைத்தவர் அல்லர் பகல்வேளையில் சூரியன் இருப்பது போல இரவு வேளைக்கு ஒரு வெளிச்சம் வேண்டும் என்று தன் தவ வலிமையால் நிலவினை இந்த பூமிக்கு கொடுத்தவர் . பதஞ்சலி முனிவரும் தத்தாத்ரேயரும் இவர்கள் புதல்வர்களாவர் . இன்னும் நிறைய பெருமைகள் கொண்ட அத்திரி முனிவரும் அனுசுயா தேவியாரும் அவர்கள்  அருளை இன்றளவும் தம்மை நாடி வருவோர்க்கு அருளை வழங்கி வருகிறார்கள் . 

              அடியேன் படித்த , தெரிந்த சிறு விபரமே இது அடியேன் அறியாதது இன்னும் நிறைய இருக்கிறது .


          சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 

சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் 


     

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக