பட்டினத்து அடிகள் வரலாறு
நல்லா ரிணக்கமும், நின்பூசை நேசமும், ஞானமுமேஅல்லாது வேறு நிலையுளதோ? அகமும், பொருளும்
இல்லாளும் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழிலுடம்பும்
எல்லாம் வெளிமயக்கே இறைவா, கச்சியேகம்பனே
கல்லார் சிவகதை, நல்லோர் தமக்குக் கனவிலும்மெய்
சொல்லார், பசித்தவர்க் கன்னங் கொடார், குருசொன்னபடி
நில்லார், அறத்தை நினையார், நின்நாமம் நினைவில்சற்றும்
இல்லா ரிருந்தென்? இறந்தென்? புகல், கச்சியேகம்பனே.
பிறந்துமண்மீதிற் பிணியே குடிகொண்டு பேரின்பத்தை
மறந்து சிற்றின்பத்தின் மேல்மயலாகிப் புன்மாதருக்குள்
பறந்துழன்றே தடுமாறிப்பொன் தேடியப் பாவையர்க்கீந்து
இறந்திடவோ பணித்தாய் இறைவா, கச்சியேகம்பனே.
பட்டினத்தார்
மண்ணுலகில் உள்ள தலங்களைத் தரிசிக்க விரும்பிய குபேரனைச் சிவபெருமான் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் சிவநேசர் ஞானகலாம்பிகை ஆகியோர்க்கு மகனாகப் பிறக்குமாறு செய்தருளினார். பெற்றோர் திருவெண்காடு சென்று வேண்டிப் பெற்ற பிள்ளையாதலின் திருவெண்காடர் எனப் பெயரிட்டு வளர்த்தனர். ஐந்து வயதில் தந்தையாரை இழந்த திருவெண்காடர் கல்வி பயின்று இறை உணர்வோடு வாணிபம் புரிந்து வந்தார்.வாணிகத்தால் பெரும் பொருள் ஈட்டி சிவபத்தியில் சிறந்தவராய், சிவனடியார்களுக்கு வேண்டுவன அளிக்கும் பண்பினராய் விளங்கினார். சிவகலை என்னும் பெண்ணை மணந்து இல்லறம் இயற்றினார். நெடுநாள் ஆகியும் மகப்பேறு இல்லாததால் இறைவனை வேண்டி வந்தார்.
திருவிடைமருதூரில் தன்னை வழிபட்டுச் சிவதருமங்கள் பல செய்து வந்த அந்தணராகிய சிவசருமர் சுசீலை ஆகியோர் வறுமை நிலையில் இருப்பதை உணர்ந்து மகாலிங்கப் பெருமான் அவர்கள் கனவில் தோன்றி, நாளை தீர்த்தக் கரையில் மருத மரத்தடியில் நாமே ஒரு குழந்தையாய் இருப்போம். அக்குழந்தையைக் காவிரிப் பூம்பட்டினத்தில் வாழும் வணிகராகிய திருவெண்காடரிடம் கொடுத்து எடைக்கு எடை பொன் பெற்று வறுமையின்றி வாழ்க என அருள் புரிந்தார். சிவசருமரும் சுசீலையும் விடிந்த உடன் தீர்த்தக் கரைக்கு சென்று பார்த்தார்கள் . அங்கே மிகவும் ஒளி பொருந்திய முகத்துடன் ஒரு குழந்தையை கண்டார்கள் .யார் அந்த குழந்தை சாட்ஷாத் சிவபெருமான் தான் . அக்குழந்தையை எடுத்து அணைத்து அதனைக் கொடுக்க மனம் இன்றி முடிவில் இறைவன் கட்டளைப்படி காவிரிப்பூம்பட்டினம் வந்தடைந்து திருவெண்காடரிடம் அளித்து எடைக்கு எடை பொன் பெற்று ஊர் திரும்பினர் .
திருவெண்காடரின் மகனாக வந்தடைந்த மருதவாணர் வளர்ந்து சிறந்து வாணிபத்தில் வல்லவராய்ப் பெரும் பொருள் ஈட்டித் தம் பெற்றோரை மகிழ்வித்து வந்தார். வணிகர் சிலருடன் கடல் கடந்து சென்று வாணிபம் புரிந்து பெரும் பொருள் ஈட்டி திருக்கோயில் பணிகட்கும், சிவனடியார்கட்கும் அளித்து வந்தார். அவ்வாறு கடல் வாணிபம் செய்து வரும்போது ஒருமுறை வணிகர்கள் பலரோடு கடல் கடந்து சென்றவர் அங்கிருந்து எருமுட்டைகளையும் தவிட்டையுமே வாங்கித் தம் மரக்கலத்தில் நிரப்பிக்கொண்டு ஊர் திரும்பினார்.
வழியில் அனைவர் மரக்கலங்களும் காற்றில் திசைமாறிப் போயின. உடன் வந்த வணிகர்கள் உணவு சமைத்தற்கு இவரிடம் கடனாக எரு மூட்டைகளை வாங்கிப் பயன்படுத்தி உணவு சமைத்தனர். சில நாட்கள் கழித்து அனைவரும் காவிரிப்பூம்பட்டினம் மீண்டனர். கப்பலில் எரு மூட்டைகளையும் தவிட்டையும் கொண்டு வந்த தம் மைந்தரைத் தேடியபோது அவர் மனைவியார் மைந்தர் தம்மிடம் கொடுத்துத் தந்தையிடம் சேர்ப்பிக்குமாறு கூறி பெட்டியில் காதற்ற ஊசி ஒன்றையும் நூலையும் `காதற்ற ஊசியும் வாராது கடைவழிக்கே` என்றெழுதிய ஒலை நறுக்கினையும் ஒரு பெட்டியில் வைத்து மூடி வளர்ப்புத் தாயிடம் அளித்துத் திருவெண்காடரிடம் அதனைச் சேர்ப்பிக்குமாறு கூறி இல்லத்தை விட்டு மறைந்து சென்றார்.

திருவெண்காடர் வீட்டுக்கு வந்தவுடன் அவர் மனைவி , மருதவாணர் அளித்த சிறு பெட்டியை அவரிடம் கொடுத்தார் . அபபெட்டியில் இருந்த ஓலையில் " காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே " எனும் வாசகத்தைப் படித்தவுடன் மனம் வெம்பினார் . சிவபெருமானே தன்னை ஆட்கொள்ளவோ இங்ஙனம் செய்தானோ என்று மனம் விட்டு அழுது அரற்றினார் பின் நிலையில்லாத பொருள் மீது பற்று வைத்து விட்டோமே என்று எண்ணி இல்லற வாழ்வை துறந்தார் ,
பட்டாடைகளை களைந்து இருவகைப் பற்றுக்களையும் அறவே விட்டுத் துறவறமாகிய தூய நெறியை மேற்கொண்டு ஊர் அம்பலத்தை அடைந்து அங்கேயே வாழ்ந்து வரலானார். திருவெண்காடர் துறவு பூண்டதை அறிந்த அரசன் அவரை அணுகி `நீர் துறவறம் பூண்டதனால் அடைந்த பயன் யாது` என வினவிய போது `நீ நிற்கவும் யான் இருக்கவும் பெற்ற தன்மையே அது` என மறுமொழி புகன்றார். எல்லோரும் திருவெண்காடரைத் திருவெண்காட்டு அடிகள் என அழைத்தனர்.
பெருஞ்செல்வரான திருவெண்காடர் துறவு பூண்டு பலர் வீடுகளுக்கும் சென்று பிச்சை ஏற்று உண்ணுதலைக் கண்டு வெறுப்புற்ற உறவினர் சிலர் அவர்தம் தமக்கையாரைக் கொண்டு நஞ்சு கலந்த அப்பத்தை அளிக்கச் செய்தனர். அதனை உணர்ந்த அடிகள் அதனை வாங்கி `தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்` எனக் கூறி தமக்கையார் வீட்டின் இறப்பையிற் செருகிய அளவில் வீடு தீப்பற்றி எரிந்தது. அடிகள் காவிரிப்பூம்பட்டினத்தில் சிலநாள் தங்கி யிருந்து தன் தாயார் இறந்தபோது அவருக்கு ஈமக்கடன் செய்து முடித்துத் திருவிடைமருதூர் சென்று அங்குச் சில காலம் தங்கி மருதப் பிரானை வழிப்பட்டுப் பின் திருவாரூர் முதலிய தலங்களை அடைந்து அங்கிருந்தபோது முன்பு தமக்குக் கணக்கராய் இருந்த சேந்தனாரை அரசன் சிறைப்படுத்திய செய்தி கேட்டு `மத்தளை தயிருண்டானும்` என்ற பாடலைப் பாடிய அளவில் சிவகணங்கள் சேந்தனாரைச் சிறை யிலிருந்து மீட்டு அவர் முன் கொணர்ந்து நிறுத்தின. சேந்தனாரும் திருவெண்காட்டு அடிகளைப் பணிந்து `பிறவிச் சிறையிலிருந்து விடுதலை பெறும்` உபதேச மொழிகளைக் கேட்டு உய்தி பெற்றார்.
சிவ தலங்களை வழி பட்டுக் கொண்டு உஜ்ஜயினியை அடைந்து அவ்வூரின் புறத்தே இருந்த சிறு காட்டில் விநாயகர் ஆலயத்தில் தங்கித் தவ நிலையில் இருந்தார்.
இரவில் பத்ரகிரி மன்னன் அரண்மனையில் அணிகலன்களைத் திருடியவர்கள் தாம் வேண்டிச் சென்று வெற்றியோடு களவாடிய அணிகலன்களில் மணிமாலை ஒன்றை விநாயகர்மீது வீசி எறிந்து சென்றனர். அம்மாலை விநாயகர் கோயிலில் தவமிருந்த திருவெண்காடர் கழுத்தில் விழுந்திருந்தது. சிறிது நேரத்திற்கெல்லாம் திருடர்களைத் தேடி அரண்மனைக் காவலர்கள் வந்தனர். அடிகள் கழுத்தில் மணிமாலை இருத்தலைக் கண்டு அவரைக் கள்வர் கூட்டத்தைச் சேர்ந்தவர் என்று கருதி பிடித்துச் சென்றனர். அரசனிடம் தெரிவித்து கழுமரத்தில் அவரை ஏற்றுதற் பொருட்டு கழுமரம் இருக்கு மிடத்துக்கு அழைத்து வந்தனர். அடிகள் தான் குற்றம் செய்யாமல் இருக்கவும் தன்னைத் தண்டித்த அரசன் செயலுக்குவருந்தி
என் செயலாவது யாதொன்றுமில்லை இனித்தெய்வமே உன் செயலென்றே உணரப்பெற்றேன் இந்த ஊனெடுத்த பின்
செய்த தீவினை யாதொன்றுமில்லை பிறப்பதற்கு முன் செய்த தீவினையோ இங்ஙனமே வந்து மூண்டதுவே
என்ற பாடலைப் பாடிய அளவில் கழுமரம் தீப்பற்றி எரிந்தது. அதனை அறிந்த பத்திரகிரி மன்னன் அடி களை அடைந்து பிழை பொறுக்குமாறு வேண்டியதோடு தானும் அரசு துறந்து அடிகளைப் பணிந்து அவருடைய சீடரானார் .பத்திரகிரியாரைத் திருவிடைமருதூர் சென்று கோபுர வாயிலில் தங்கியிருக்குமாறு செய்து அங்கிருந்து புறப் பட்டுப் பல தலங்களுக்கும் யாத்திரை சென்றார். பத்திரகிரியார் கையில் திருவோடு ஒன்றை ஏந்தி இரந்துண்டு திருவிடைமருதூர்க் கோயிலில் தங்கியிருந்தார்.
பட்டினத்து அடிகள் பல தலங்களுக்கும் சென்று பின் திருவிடை மருதூரை அடைந்து பத்திரகிரியாரை மேலைக் கோபுர வாயிலில் இருக்கச் செய்து தான் கீழைக் கோபுர வாயிலில் இருந்தார். பத்திர கிரியார் பலர் இல்லங்கட்கும் சென்று இரந்து வந்து தன் குருநாதர்க்கு அமுதளித்து எஞ்சியதைத் தான் உண்டு மீதத்தைத் தன்னைத் தொடர்ந்து வந்த நாய் ஒன்றிற்கு அளித்து மேலைக் கோபுர வாயிலில் இருந்தார்.

ஒருநாள் சிவபெருமான் சித்தராக வந்து பட்டினத்து அடிகளிடம் உணவு வேண்ட அடிகள் `யான் கந்தையும் மிகை` என்னும் கருத்தோடு வாழும் துறவி, என்பால் ஏதுவும் இல்லை. மேலைக்கோபுர வாயிலில் ஒரு குடும்பி உள்ளான் அவனிடம் சென்று கேளும் எனக்கூற, சித்தர் அவ்வாறே சென்று அடிகள் கூறியன வற்றைத் தெரிவித்துக் கேட்ட அளவில் பத்திரகிரியார் நம்மோடு இணைந்துள்ள உணவேற்கும் ஓடும் பரிவு காட்டும் நாயும் அல்லவா நம்மைக் குடும்பியாக்கின என அவ்வோட்டை கீழே எறிய ஓடு உடைந்து சிதறியது. நாயின்மீதுபட்டு நாயும் இறந்தது. சித்தர் மறைந்தார். நாய் அடியார் பரிகலம் உண்ட சிறப்பால் காசிராசன் மகளாகச் சென்று பிறந்தது.
சில ஆண்டுகளுக்குப்பின் அப்பெண் தந்தையோடு திருவிடைமருதூர் வந்து பத்திரகிரியாரைப் பணிந்து `அடிநாய் மீண்டும் திருவடிப்பேற்றுக்கு வந்துள்ளது` எனக் கூற பத்திரகிரியார் அப்பெண்ணைப் பட்டினத்து அடிகளிடம் அழைத்து வந்து ஞானிகளின் பரிகலம் உண்ட சிறப்பால் அரச மரபில் பிறந்து வளர்ந்துள்ள இப் பெண்ணுக்கு வீடுபேறு அருளுமாறு வேண்ட அங்கு ஒரு சிவசோதி தோன்றியது. அப்பெண் அச்சோதியில் கலந்து வீடு பெற்றார். பத்திரகிரியாரும் குருநாதர் ஆணைப்படி அச்சோதியில் கலந்து இறையடிப் பேற்றை எய்தினார்.
அடிகள் இறைவன் கருணையை வியந்து `என்னையும் என் வினையையும் இங்கு இருத்தி வைத்தனை போலும்` என இரங்கிக்கூற சிவபிரான் திருஒற்றியூருக்கு அவரை வருமாறு பணித்தருளினார். அடிகள் எப்போது தனக்கு முத்தி சித்திக்கும் எனக் கேட்க பெருமான் பேய்க்கரும்பு ஒன்றை அவர் கையில் தந்து இக்கரும்பு எங்கு தித்திக்கிறதோ அங்கே உனக்கு முத்தி சித்திக்கும் எனக் கூறியருளினார். பட்டினத்தார் பல தலங்களுக்கும் சென்று இறைவனை பாடினார் .அடிகள் இறைவன் அருளியவாறு திருவொற்றியூரை அடைந்தார். அங்குச் சில நாள் தங்கினார். கடற்கரையில் சிறுவர்களுடன் அவர் விளையாடிக் கொண்டிருந்த போது கையில் கொண்ட கரும்பு இனிக்கத் தொடங்கியது. பட்டினத்து அடிகள் இறைவன் திருவருளை எண்ணிய நிலையில் அத்தலத்தில் மணலில் மறைந்து சிவலிங்கத் திருவுருவாய் வெளிப்பட்டருளினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக