சத்குருவின் ( குருவாசகம் )ஆன்மீக சிந்தனைகள்
இன்னொருவரைப் பார்த்து அதே போல உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முயற்றி செய்தால் பரிணாம வளர்ச்சியில் பின்னோக்கிப் போய் குரங்கு போல நடக்கப் போகிறோம் என்றல்லவா அர்த்தம் ? உங்கள் திறமையை கண்டறிந்து அதை எப்படி முழுமையாக பயன்படுத்திக் கொள்வது என்பதல்லவா உங்கள் நோக்கமாக இருக்க வேண்டும் .
நீங்கள் நூறு சதவீத திறமையைப் பயன்படுத்துங்கள் சூழ்நிலைகளைப் புரிந்து அவற்றுக்கு தக்கவாறு கவனமாய் விழிப்புடன் செயலாற்றுங்கள் . அப்போது எல்லா கிரகங்களும் நட்சத்திரங்களும் உங்களுக்கு சாதகமாக வேலை செய்யத் தொடங்கிவிடும் .
உங்கள் இருதயம் அன்பில் நிறைந்து இருந்தால் உங்களுக்கு அறிமுகம் இல்லாதவர் கூட உங்கள் அன்பில் நனைந்து விடுவர் .
உங்கள் அனுபவங்களுக்கு விதி ,தன்மானம் , சுயகௌரவம் , ரோஷம் . என்று எத்தன மீதாவது பழி சுமத்தும் வரை ஒரு நாளும் ஆனந்தத்தின் ருசியை நீங்கள் உணர மாட்டீர்கள் எல்லாவற்றுக்கும் முழுமுதற்காரணம் நீங்கள் , நீங்கள் , நீங்கள் மட்டுமே தான் .
வாழ்க்கையை அச்சத்துடன் அணுகினால் எல்லாமே அபாயமாகத்தான் தோன்றும் . மிகவும் பத்திரமாக பாதுகாப்பாக வாழ நினைத்தால் கல்லறைக்குள் தான் போய் முடங்க வேண்டும் .
ஆன்மீகத்தில் முன்னோக்கிப் போகிறோமா பின்னோக்கிப் போகிறோமா எப்படிக் கண்டுபிடிப்பது . இதோ அளவுகோல் , நேற்றைவிட இன்று சிறிதாவது மகிழ்ச்சியுடன் இருக்கிறீர்களா என்பதைப் பாருங்கள் .
எப்போது உங்களுக்குள் மனிதத் தன்மை நிரம்பி வழிகிறதோ அப்போது தெய்வீகத்தன்மை உங்களுக்குள் நிரம்பிவிடும் . அதன்பிறகு தெய்வீகத்தை நீங்கள் தனியாக வெளியில் தேடத் தேவை இருக்காது .
எனக்கு என்ன ஆகுமோ என்ற உங்கள் பயத்தினாலேயே பிரமாண்டமான ஆற்றலும் பலபல சாத்தியங்களும் உங்கள் வாழ்க்கையில் நசுக்கப்பட்டு விடுகின்றது .
வாழ்க்கையை வெளியே இருந்து வேதனையோடு வேடிக்கை பார்ப்பதை நிறுத்துங்கள் சுமைகளைக் களைந்து விட்டு ருசித்து வாழ்ந்து பாருங்கள் பிறகு வாழ்க்கை உங்களை இளமையாக வைத்திருக்கும் .
கோபமும் பதற்றமும் உங்கள் வாடிக்கையாகி இருந்தால் இனி ஒவ்வொரு முறையும் அது பற்றிய கவனத்துடன் அணுகிப் பாருங்கள் கோபம் உதிரும் சொர்க்கம் நிலைக்கும் .
வாழ்க்கையை தொலைத்துவிட்டு வாசிகளைப் பெருக்கிக் கொள்வது செத்த கிளிக்கு தங்கக் கூண்டு செய்து கொடுப்பது போல .
தனக்குக் கீழ் பணிபுரிபவர் கைகளில் விலங்குகளைப் பூட்டிவிட்டு அவர்கள் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என்று எதிர்பார்த்தீர்கள் என்றால் அது வடிகட்டிய முட்டாள் தனம் .
உங்களுக்கு இருக்கும் திறமைக்கு நீங்கள் பொறுப்பென்றால் உங்கள் திறமையின்மைக்கும் நீங்களே முழுப் பொறுப்பு .
நன்றி
சத்குரு ஆசியுடன்
உங்கள் அன்பன் விவேகானந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக