வியாழன், நவம்பர் 03, 2011

ஆன்மீக சிந்தனைகள்

சத்( குரு )வாசகம்  

         தன் நன்மைக்காக செய்யும் செயலிலேயே ஒருவரால் உண்மையாக இருக்க முடியாவிட்டால் மற்றவர்களுக்காக செய்யும் செதிலும் அவரால் உண்மையாக இருக்க முடியாது . ஏனென்றால் தன்னை விட அதிகமாக யாரையும் நீங்கள் அதிகம் நேசிப்பதில்லை . உங்கள் மீதே உங்களுக்கு அன்பும் மதிப்பும் இல்லையென்றால் பிறகு எப்படி மற்றவர்களை நேசிக்க உங்களால் முடியும் .

      ஆனந்தம் என்பது உங்களுக்குள் நீங்கள் உணர்வது என்பதைப் புரிந்து கொண்டால் தற்போதைய உங்கள் செயல்கள் யாவும் ஆனந்தம் பெறுவதற்கான குழந்தைத்தனம் என்பதை அறிவீர்கள் .

       நீங்கள் அடுத்தவர் மீது அன்பு செலுத்த வேண்டாம் . அக்கம் பக்கத்தில் இருப்பவரிடமும் தேடித் போய் அன்பு செலுத்த வேண்டாம் . உங்களுக்குள் அன்பாக இருங்கள் . எப்போதும் அன்புமயமாகவே இருங்கள் அது போதும் 

        யார் ஒருவர் இந்த வாழ்க்கையை ஒரு உயர்ந்த தன்மையை அடைவதற்குரிய படியாக பார்க்கிறாரோ அவருக்கு தோல்வியே இல்லை.

   உங்கள் வாழ்வின் அனுபவமே நீங்கள் வாழ்க்கையில் ஆழமாக ஈடுபடுவதில்தான் உள்ளது . ஈடுபாட்டுடன் நீங்கள் செய்பவை எல்லாம் எப்போதும் ஆனந்தமாக இருக்கும் என்பதை கவனித்து பாருங்கள் . ஆழமான ஈடுபாடு இருந்தால் ஒழிய வாழ்க்கையின் அழகை உங்களால் அறிந்து கொள்ள முடியாது .

        குழப்பமான மனதுடன் நாம் சிந்தனை செய்யும் போது நாம் எடுக்கும் முடிவு மட்டும் அல்ல வாழ்க்கையும் குழப்பமாகவே இருக்கும் .

     உங்கள் பற்றுக்களின் காரணமாக நீங்கள் துன்பப்பட்டால் பரவாயில்லை ஆனால் உங்கள் சுதந்திரத்தினால் துன்பபட்டால் அது பரிதாபமானது .

       உலகம் எப்படி இருக்க வேண்டுமென பார்ப்பதற்கு முன்பாக உங்களுக்குள் நீங்கள் எப்படி இருக்கவேண்டுமென பார்க்க வேண்டும் உங்களை நீங்கள் அமைதியாக வைத்துக் கொள்ள இயலாவிட்டால் உலகை அமைதியாக வைத்துக் கொள்வதென்பது வெற்றுப் பேச்சுதான் .

  எது மிகவும் மேன்மையானது என்று உங்களுக்குத் தெரியுமோ அதைத் தொடர்ந்து தேடிக் கொண்டிருங்கள் அது உங்களுக்கு கிடைத்தாலும் சரி கிடைக்கா விட்டாலும் சரி குறையில்லை உயர் நோக்குடன் வாழ்வதே உன்னதமான அனுபவமாகவும் ஆனந்தமான செயலாகவும் அமையும் .

    உங்களை கீழ்த்தரமாக நடத்தும் ஒருவரை அதே போல் நடத்த எந்த விழிப்புணர்வும் தேவை இல்லை . ஆனால் அந்தச் சூழ்நிலையிலும் அமைதி காப்பதற்கு ஏராளமான விழிப்புணர்வுடன் இருத்தல் அவசியமாகும் .

        உங்களது மகிழ்ச்சியும் நல்வாழ்வும் யாரையும் அல்லது எதனையும் சார்ந்து இருக்காத போதுதான் நீங்கள் சுதந்திரமானவராக இருக்க முடியும்
இல்லாவிட்டால் தெருவில் திரிந்தால் என்ன சிறையில் இருந்தால் என்ன உங்களுக்கு நீங்களே கைதியாக இருப்பீர்கள் .

   வாழ்வில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று நீங்கள் குழம்பும் போது உங்களிடம் இருக்கும் அனைத்திலும் முழு ஈடுபாடு காட்டுங்கள் . உங்கள் வாழ்விற்கு எது உகந்ததோ அதை உங்கள் வாழ்வே ஈர்த்துத் தீர்மானிக்கும் அது ஒரு போதும் தவறாவதில்லை .

    நீங்கள் சுவாசிக்கும் காற்று , அருந்தும் நீர் , உண்ணும் உணவு , காணும் தாவரம் ,ரசிக்கும் பறவை நடக்கும் பூமி என்று உங்கை சுற்றியுள்ள அனைத்தையும் ஆத்மார்த்தமாக வழிபடும் உணர்வோடு அணுகினால் உங்கள் வாழ்வு மிக அழகாக மாறும் .

  நன்றி 

சத்குரு ஆசியுடன் 

உங்கள் அன்பன் விவேகானந்தன்      
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக