திங்கள், அக்டோபர் 31, 2011

தியானம்

ஈஷாவின் கிரியா தியானம் 


 கிரியா தியானம் என்பது மிகவும் எளிமையான எல்லோரும் செய்யக்கூடிய ஒரு தியானம் . இந்த தியானம் உங்கள் உடலையும் மனதையும் வேறுபடுத்தி ஒரு இடைவெளியை ஏற்படுத்தும் .மனதை நாம் நான் என்று நினைப்பதால் மட்டுமே தொல்லைகளை அனுபவிக்க வேண்டி இருக்கிறது .உங்கள் உடல் வேறு மனம் வேறு நான் என்பது எதுவும் இல்லை என்று உணர்ந்து விட்டால் நமக்குள் இருக்கும் படைப்பின் மூலத்தோடு ஒன்றிப் போய்விட முடியும் . அப்போது அனைத்து சக்திகளும் உங்களுக்கு உள்ளேயே அடங்கும் . பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும் உங்கள் வாழ்க்கை அருள் நிறைந்ததாய் , ஆனந்தமயமானதாய் , குருவருளால் நிரம்பப் பெறும் .

    தியானத்திற்கான குறிப்புகள் 

  கண்களை மூடி கால்களை குறுக்காக வைத்து கிழக்கு பார்த்து அமரவும் , உள்ளங்கைகளை மேல் நோக்கி ( கடவுளிடம் யாசகம் கேட்பது போல் ) உங்கள் தொடைகளின் மேல் வைக்கவும் தலை நிமிர்த்தி மேல் முகமாக இருக்க வேண்டும் உங்கள் கவனத்தை புருவ மத்தியில் நிறுத்த வேண்டும் 

மூன்று நிலைகளில் தியானம் ..

   முதல் நிலை 

    உள்மூச்சும் வெளிமூச்சும் மிகவும் மெதுவாக மென்மையாக இருக்க வேண்டும் .

ஒவ்வொரு உள்மூச்சின் போதும் " நான் உடலும் அல்ல " என மனதுக்குள்ளே கூறிக்கொண்டு மூச்சை மெதுவாக உள்வாங்கவும் .

அதே போல வெளிமூச்சின் போதும் " நான் மனமும் அல்ல " என மனதுக்குள்ளே கூறிக்கொண்டு மூச்சை மெதுவாக வெளிவிடவும் .

மூச்சு இருதுவாரங்களிலும் சீராக நடக்குமாறு பார்த்துக் கொள்ளவும் இப்படியே ஒரு எழு நிமிடம் முதல் பதினோரு நிமிடம் வரை செய்யுங்கள் .

     இரண்டாம் நிலை 
   
  வாயை முழுமையாக திறந்து " ஆ " என சப்தம் உங்கள் அடிவயிற்றிலிருந்து எழுமாறு உச்சரிக்க வேண்டும் மிகவும் சப்தமாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை உடலில் அதிர்வு உணரும் வகை , மூச்சு முழுவதும் வெளியேறும் வரை இந்த சப்தத்தை உச்சரிக்கவும் ஏழு முறை உச்சரியுங்கள் .

  மூன்றாம் நிலை 

 முகத்தை மேல் முகமாக வைத்து புருவ மத்தியில் கவனத்தை செலுத்தி ஆறு நிமிடம் இருக்கவும் 

அனைத்தி நிலைகளும் சேர்ந்து மொத்தம் பதினெட்டு நிமிடங்கள் ஆகும் பழகப் பழக நேரத்தை அதிகரித்துக் கொள்ளலாம் .

உங்கள் உடலிலோ மனதிலோ என்ன நடந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் மனதை வெறுமனே வைத்துக் கொண்டு அமருங்கள் பயிற்றி செய்யும் போது இடையிடையே நிறுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் ஏனெனில் சக்திகள் ஒருங்கினைவதில் பாதிப்புகள் ஏற்படலாம் 

யார் வேண்டுமானாலும் இந்த தியானத்தை செய்யலாம் . எந்த குறிப்பையும் மாற்றாமல் அப்படியே பின்பற்ற வேண்டும் மிகவும் எளிமையான அதே சமயம் மிகவும் சக்தி வாய்ந்தது இந்த கிரியா தியானம் 

பயிற்றி நேரம் தவிர மற்ற நேரங்களிலும் " நான் உடலும் அல்ல " நான் மனமும் அல்ல " என்பதை நாளின் எந்த வேளையிலும் நீங்கள் மனதளவில் நினைவில் வைத்துக்கொள்ள பழகிக் கொள்ள வேண்டும் .

இந்த தியானத்தை ஒரு மண்டலம் அதாவது 48 நாட்களுக்கு கண்டிப்பாக தொடர்ந்து செய்ய வேண்டும் . ஒரு நாளைக்கு பனிரெண்டு நிமிடங்கள் வீதம் காலை மாலை இருவேளையும் செய்து வந்தால் மனம் லேசாகும் எந்த முடிவும் திடமாகும் நான் என்பது மறைந்து ஆனந்தமான மனிதராக மாறிவிடுவீர்கள் . இதுவே நீங்கள் குருவிற்கு செய்யும் குருதட்சனை ஆகும் . தியானம் செய்வோம் மனநிறைவுடன் ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோம் .

  நன்றி 

சத்குரு ஆசியுடன் 

உங்கள் அன்பன் விவேகானந்தன் .   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக