தியானம் செய்வதனால்.... ( என்ன பயன் )
சத்குருவின் விளக்கங்கள்
நான் தியானம் செய்வதால் எனக்கு என்ன கிடைக்கும் ? என்கிற இந்த கணக்கை மட்டும் விட்டு விடுங்கள் .நீங்கள் பலன் பெறவும் வேண்டாம் , வேறு எதையும் பெறவும் வேண்டாம் ஒவ்வொரு நாளும் நிறைய பரபரப்பான சூழலுக்கு மத்தியில் மனதிற்கு சிறிது ஓய்வு கொடுப்பதற்காக ஒவ்வொரு நாளும் 10௦ முதல் 15 நிமிடங்களை வீணடிக்க சிறிது கற்றுக்கொள்ளுங்கள் .
தியானத்தை ஆரோக்கியமாக இருப்பதற்கோ , ஞானியாவதற்கோ , சொர்க்கத்தை அடைவதற்கோ செய்யத்தேவை இல்லை இது நேரத்தை வீணடிக்கும் வேலை அவ்வளவுதான் " ஒரு சத்சங்கத்திலிருந்து நாம் என்ன கொண்டு செல்லப் போகிறோம் என்று கேட்பதெல்லாம் நவீன காலத்து சொல் துஷ்ப்ரயோகமே ஆகும் . நீங்கள் எதையாவது எடுத்துச் செல்ல விரும்பினால் அற்ப விஷயங்களை மட்டுமே எடுத்துச் செல்வீர்கள் உண்மை எதுவோ அது உங்களுடன் வாராது . உங்களுக்கு உண்மை மட்டுமே வேண்டுமென்றால் , இந்த கொண்டும் செல்லும் பழக்கத்தை முதலில் விட்டுவிடுங்கள். நீங்கள் நீங்களாக மட்டும் இருங்கள் . வேறெதுவும் செய்ய வேண்டாம் .
உங்கள் வாழ்க்கையில் எல்லாவற்றிலும் எனக்கு என்ன கிடைக்கும் ? என்ற கேள்வியை விட்டு விட்டால் உங்களுக்கு எல்லைகளே இருக்காது நீங்கள் கருணையின் வடிவங்களாகவே மாறி விடுவீர்கள் . இதற்கு மாற்று வழியே இல்லை . இந்த சிறு கணக்கை விட்டுவிட்டால் அதுதான் உங்கள் மனதுக்கும் , அதன் செயல்பாடுகளுக்கும் இருக்கும் ஒரே சாவி அதுதான் மனதில் நடக்கும் அத்தனை விஷயங்களுக்கும் திறவுகோல் .
ஆனால் மக்களுக்கு சும்மா இருப்பது என்பது எப்படி என்று தெரியாததால் மாற்று வழி ஒன்று கூறப்பட்டுள்ளது . அது எப்போதுமே அனைத்து உயிர்களிடத்தும் அன்பாக இருப்பது .
ஏனெனில் இந்த வழியில் தான் ஓரளவிற்கு கொடுக்கல் வாங்கல் கணக்கு இல்லாமல் இருக்க முடியும் . ஆழமான அன்பையோ அல்லது கருணையையோ வளர்த்துக் கொள்ளுதல் பற்றிய பேச்சுக்கள் எல்லாம் உங்களுக்குள் இருக்கும் எதிர்பார்ப்பை நீக்கி விடுவதற்கே . யாருடனாவது தீவிர உணர்ச்சிகளை உருவாக்குவதன் மூலம் , எனக்கு என்ன கிடைக்கும் ? என்ற கேள்வியை அகற்றி விடலாம் .
வாழ்க்கையில் இந்த கணக்கை விட்டுவிட்டாலே , 90 சதவீத செயல்கள் முடிந்தாற்போலதான் மீதமுள்ள 10 சதவீத வேலைகள் தானாகவே நிகழ்ந்து விடும் . உங்களுக்கு பரமபத விளையாட்டு தெரியுமா? ஆரம்ப கட்டங்களில் அதில் பல ஏணிகளும் பாம்புகளும் இருக்கும் அவற்றில் ஏறி ஏறி இறங்கிக் கொண்டே இருப்போம் ஆனால் விளையாட்டின் கடைசிக் கட்டத்தை நெருங்கிவிட்டால் அதன் பின் பாம்புகளே இருக்காது தாயம் தாயமாகப் போட்டும் கூட பரமபதத்தை அடையலாம் . அங்கு பாம்பு விழுங்காது விழுங்குவதற்கு எந்த பாம்பும் இருக்காது . இதுவும் அது போலத்தான் , நீங்கள் இந்த ஒரு கணக்கை விட்டுவிட்டால் பிறகு பாம்புகளே இருக்காது . பிறகு அவ்விடத்தை அடைய எவ்வளவு நேரமாகும் என்பது மாட்டுமே கேள்வியாக இருக்கும் .
நன்றி
சத்குருவின் ஆசியுடன்
உங்கள் அன்பன் விவேகானந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக