அத்ரிமலை
அதிசயங்கள் நிறைந்த அத்ரி மலை
அதிசயங்கள் நிறைந்த அத்ரி மலை
திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் அமைந்து உள்ளது இந்த எண்ணற்ற ஆச்சர்யங்களும் அதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த அத்ரி மலை .
அகத்தியர் , அத்ரி மகரிஷி , கோரக்கர், தேரையர் , போன்ற முனிவர்கள் மற்றும் சித்தர்கள் வாசம் செய்த மலை இந்த அத்ரிமலை பல அரிய வகை மூலிகைகள் நிறைந்த அடர்ந்த வனப்பகுதி . இன்றும் பசுமை போர்வை போர்த்தி இருக்கும் ஒரு அற்புத வனம் . இந்த மூலிகைகளை தழுவிக்கொண்டு வரும் காற்று நம் உடலில் பட்ட உடனே ஒரு வித சிலிர்ப்பும் , உற்றாகமும் கரை புரண்டு ஓடும் .
அத்ரி மகரிஷியும் அவரது சீடர்களும் தியானம் செய்த அற்புத மலை. அத்ரி மகரிஷியின் சீடர்களில் ஒருவர் கோரக்கர் என்னும் சித்தர் அவர் தவம் செய்த புண்ணிய மலை . அத்ரிமலை அடிவாரத்தில் கடனா அணை அணையில் இருந்து அத்ரி மலையின் தோற்றம் மிகவும் அருமையாக மனதை இயற்கையோடு ஒன்றி நம்மை அரவணைத்துக் கொள்ளும் .
அத்ரி மகரிஷி தோற்றுவித்த ஊற்று
கோரக்கருக்கு தாகம் எடுக்கவே அவர் குருநாதர் தன் சீடர் தாகம் தணிக்க கங்கையை தோற்றுவித்தார் இன்றளவும் வற்றாத சுனையாக , மறக்காத சுவையாக சிறிய நீரோடை . ஓடை சிறியது என்றாலும் அதன் பெருமை பெரியது . அகத்தியருக்கும் , அத்ரி மஹரிஷிக்கும் கற்சிலை உள்ளது .
அத்ரி பரமேஸ்வரனை தரிசிக்க வரும் பக்தர்கள் கரடு முரடான பாதைகளை கடந்து வந்தாலும் அவன் பதத்தை அடையும் போது அந்த களைப்பு இருக்காது .வாழ்க்கை என்னும் பள்ளம் மேடு நிறைந்த பாதையை அவன் துனையோடு கடக்க எண்ணுவோமே யானால் அதுவும் இது போலத்தான் இலகுவாக அவன் பத்தில் கொண்டு சேர்க்கும் என்பதை நமக்கு உணர்த்தும் .
அருள்மிகு அனுசுயா பரமேஸ்வரி சமேத அத்ரி பரமேஸ்வர சுவாமி
அருள்மிகு கோரக்க நாத சுவாமி திருக்கோவில்
வெறுமையை உணரும் .
அடியேன் தெரிந்த அனுபவித்த விஷயங்களையே இங்கு
தொகுத்துள்ளேன் , அடியேனுக்கு தெரியாத பல விஷயங்கள் அங்கு
உள்ளது .
அத்ரி மலைக்கு செல்லும் வழியினை பார்ப்போம்
நெல்லையை அடைந்து அங்கிருந்து அம்பாசமுத்திரம் அடுத்துள்ள , ஆழ்வார்குறிச்சியில் இறங்கி மேற்கேயுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பக்கமிருக்கும் அழகப்பபுரம் வரை போக்குவரத்து வசதியுள்ளது. பேருந்துகள், ரயில் போக்குவரத்து வசதிகள் தாராளமாக உள்ளன. அங்கிருந்து மேற்கிலிருக்கும் கடனா நதிக்கு கால்நடைப் பயணமாகச் சென்ற பிறகு மேற்குத் தொடர்ச்சி மலையின் மேல 7 கிலோ மீட்டர் நடந்தால் அத்ரி மலை சிவன் ஆலயத்தை அடையலாம்.
என்றும் இறை பணியில்
சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன்
சிவத்தை போற்றுவோம் !!! சித்தர்களை போற்றுவோம் !!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக