செவ்வாய், ஜனவரி 07, 2014


திருவெம்பாவை தினம் ஒரு பாடல் .


மணிவாசகப் பெருமான் அருளிய 

   திருவாசகத்திலிருந்து 
பாடல் -15
பார்ஒருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்
ஓர்ஒருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீர்ஒருகால் வாய்ஓயாவாள் சித்தம் களிகூர
நீர்ஒருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப் 
பேரரையற்கு இங்கனே பித்தொருவர் ஆமாறும்
ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள் 
வார்உருவப் புாண்முலையீர் வாயாரநாம் பாடி
ஏர்உருவப் புாம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்

  கச்சை அணிந்த அழகிய முலைகளை உடைய பெண்களே!நம்மில் ஒருத்தி மட்டும் எம்பெருமான் என்று ஒருமுறை சொல்லாது பலமுறை வாய் ஓயாது சொல்லிச் சொல்லி அப்பெருமானது புகழைப் பேசுகிறாள்.அதனால் அவளுடைய கண்களில் இருந்த நீர் வற்றாத அருவிபோல்  கொட்டுகிறது.நிலத்தின்மீது விழுந்தவள் எழாது வணங்குகிறாள் தேவர்களை ஒருபோதும் வணங்குவது இல்லை .பேரரசனாகிய இறைவனிடடம் பித்துக்கொண்டு காணப்படுகிறாள் அவ்வாறு பித்துக்கொள்ளச் செய்த அப்பெருமானின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கிப்பாடி அழசிய புதுநீரால் நிரப்பப்பட்ட குளத்தில் பாய்ந்து நாமும் நீராடுவோம் என்று பாடுவதாக இப்பாடல் அமைந்திருக்கின்றது.

                                                                                      
                                                                                      இறை பணியில் 
                                                                                         
                                                                                        பெ.கோமதி 

                                                    சிவமேஜெயம் !!




        சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக