திருவெம்பாவை தினம் ஒரு பாடல் .
மணிவாசகப் பெருமான் அருளிய
திருவாசகத்திலிருந்து
பாடல்-16
முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையா ளிட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள்நமக்கு முன் சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்.
மேகமே! மழைக்காலத்திற்குமுன்பே இந்தக்கடல் நீர் சுருங்குமாறு மேல் எழுந்து எம்மைஉடையவள் ஆகிய உமாதேவியின் மேனி நிறம்போல் கருத்து அவளது சிறுத்த இடைபோல் மின்னி பெருமாட்டியின் திருவடிகளில் அணிந்துள்ள பொற்சிலம்பு போல முழக்கம் செய்து அவளது திருப்புருவம் போல வளைந்த வானவில் தோன்றி அம்மையைவிட்டுப்பிரியாத எம் தலைவனாகிய சிவபெருமான் தன் அடியார்களுக்குத் தன் தேவியொடு வந்து அருள் புரிவது போல நீயும் அருள்வாயாக!
இறை பணியில்
பெ.கோமதி
சிவமேஜெயம் !!
சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக