சனி, ஜனவரி 11, 2014

திருவெம்பாவை தினம் ஒரு பாடல் .


மணிவாசகப் பெருமான் அருளிய 

   திருவாசகத்திலிருந்து 
 பாடல்-17
செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
     
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
     
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளும் சேவகனை
     
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
     
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.

மணம்பொருந்திய கூந்தலை உடையபெண்ணே!சிவந்த கண்ணை உடைய திருமாலிடத்தும் நான்மமுகனிடத்தும் மற்றைய தேவர்களிடத்ததும் என்று யாருக்கும் கொாடுக்காத இன்பத்ததை நமக்குக்கொடுத்து நம்மைப்பாராட்டி இங்குவந்து நம் வீடுகள்தோறும் எழுந்தருளி தன்னுடைய சிவந்த தாமரை மலர் போன்ற திருவடிகளைத்தந்து அருள்செய்யும் எளியவனை அழகிய கண்ணை உடைய அரசை அடியார்களுக்குக் கிடைத்த அரிய அமுதம் போன்றவனை நமது பெருமானைப் பாடிப் புகழ்ந்து தாமரை புாத்த நீரில் மூழ்கி ஆடுவோமாக.


                                                                                   இறை பணியில் 

                                                                                         பெ.கோமதி 

                                                    சிவமேஜெயம் !!        சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக