வியாழன், டிசம்பர் 24, 2015

ஞானகுரு மகான் ஸ்ரீ பட்டினத்தார் பாடல்கள் .....






அன்னவிசாரம் அதுவே விசாரம்அது வொழிந்தாற்
சொன்னவிசாரந் தொலையா விசாரநற் றோகையரைப்
பன்னவிசாரம் பலகால்விசார மிப்பாவி நெஞ்சுக்கு
என்னவிசாரம் வைத்தாய் இறைவாகச்சி ஏகம்பனே.


நிலையில்லா இந்த தேகத்தை வளர்க்கும் பொருட்டு அன்னத்தை தேடும் விசாரம் பெரிய விசாரம் அது ஒழிந்தால் வாழ்க்கையை அனுபவிக்க செல்வத்தை சேர்க்கும் விசாரம் விடாத விசாரம் . மயில்போல சாயலுடைய பெண்டிரை புகழ்ந்து பேசி இன்பந் துய்க்கும் விசாரம் பல கால விசாரமாம் , சித்தம் தெளியாது திரியும் இந்தப் பாவியின் மனதிற்கு என்ன விசாரம் வைத்தாய் , கச்சியில் அருள் புரியும் ஏகம்ப நாதனே .  


கல்லாப்பிழையுங் கருதாப்பிழையுங் கசிந்துருகி
நில்லாப்பிழையும் நினையாப்பிழையும் நின்அஞ்செழுத்தைச்
சொல்லாப்பிழையுந் துதியாப்பிழையுந் தொழாப்பிழையும்
எல்லாப்பிழையும் பொறுத்தருள் வாய்கச்சி ஏகம்பனே.



என்னிறைவா , நீவீர் அருளிச் செய்த சிவாகமங்களையும் வேதங்களையும் கற்றுணராத பிழையும் , வேதங்களின் வழிநில்லா பிழையும் , நின் திருவடியை சிந்தனை செய்யாத பிழையும் , இப்பிறவிக்கு நற்பயனருளும் நின் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சாடனம் செய்யாத பிழையும் , உன்னை வணங்காத பிழையும் , இதுவரை நாயேன் வினையின் காரணத்தால் செய்த பிழையெல்லாம் பொறுத்து எனக்கு அருள் செய்வாய் திருக்காஞ்சியில் உறைந்தரும் செய்யும் ஏகம்ப நாதனே . 


                         - சிவமேஜெயம் திருவடி முத்துகிருஷ்ணன் 
மகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான நிலையம் 
ஸ்ரீ பட்டினத்தார் குடில் 
6/400 வண்ணார் பேட்டை 
தாளமுத்து நகர் 
தூத்துக்குடி 2 
9944091910 

    சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக