சிறப்பான சித்தர் கோவில்கள் ..
பூவுலகில் எண்ணற்ற சக்தி வாய்ந்த ஆலயம் பல இருப்பினும் அக்கோவில்கள் பிரபலம் ஆவதற்கும் ஆற்றலை அள்ளி வழங்குவதற்கும் அங்கே கண்டிப்பாக ஒரு சித்தர் ஜீவ சமாதி கொண்டிருப்பார் . உதாரணத்திற்கு திருச்செந்தூர்,மதுரை , சிதம்பரம் , திருவண்ணாமலை , கும்பகோணம் , பழனி இன்னும் நிறைய திருத்தலங்கள் எண்ணற்ற சித்தர்கள் .
சித்தர்களை வணங்கும்போது நம்முடைய தீவினையின் தாக்கம் சீக்கிரம் குறையும் அவர்கள் தன்னுடைய ஆற்றல் எனும் அக்கினியில் நம்முடைய கர்மாக்களை எரிக்க கூடியவர்கள் . கண்டிப்பாக கர்மாவை கழித்து தான் ஆக வேண்டும் . ஒரு பெரிய பாறையில் நம் தலை மோத வேண்டி இருக்கிறது இது கர்மா , அது நம் தலை மீது விழுந்தால் அவ்ளோ தான் தலை அதே பாறையில் நம் தலை இடித்தால் சிறு காயத்தோடு தப்பி விடலாம் . சித்தர்கள் நமக்கு வரும் துன்பத்தை குறைத்து நம்மை வழி நடத்துவார்கள் . அவர்கள் ஆசி இருந்தால் எல்லாம் சாத்தியம் . ஒரு குரு கிடைப்பது சாதாரண விஷயமல்ல ஈசன் அருளும் , பூர்வ புண்ணியமும் இருந்தால் மட்டுமே சாத்தியம் .
அப்படிப்பட்ட சித்தர்கள் அருள் செய்யும் ஆலயங்கள் பற்றியும் இருப்பிடம் பற்றியும் இனி வரும் பதிவுகளில் பாப்போம்
மகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான நிலையம்
ஸ்ரீ பட்டினத்தார் குடில்
வண்ணாரப்பேட்டை , தாளமுத்து நகர்
தூத்துக்குடி 2 , 9944091910
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக