சனி, ஏப்ரல் 30, 2016


 
தேவார பாடல்கள் ...

 தினம் ஒரு பாடல் .                         தம் தந்தைக்காக  எம்பெருமானிடம் பொருள் அருளுமாறு திருஞானசம்பந்த பெருமான் அருளிச் செய்த திருப்பதிகம் . 
1.  இடரினும் தளரினும் எனதுறுநோய் 
     தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் 
     கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை 
     மிடறினில் அடக்கிய வேதியனே 
     இதுவோயெமை ஆளுமாறீவதொன் றெமக்கில்லையேல்  
     அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே .


         தேவர்கள் அமுதம் பெரும் பொருட்டு பாற்கடலை கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகாலம் என்னும் கொடும் விஷத்தை தனது கழுத்தில் அடக்கி உலகத்தை காத்த வேதநாயகனே ! அடியேனுக்கு எவ்வளவு துன்பம் நேர்ந்தாலும் , இளமை நீங்கி முதுமை அடைந்து தளர்ந்து போனாலும் தீவினையால் தீராத நோய் ஏற்பட்டாலும் உன் திருவடிகளை மறவாது வணங்குவேன் . அத்தகைய அடியேனை நீ ஆட்கொள்ளும் தன்மை இதுதானோ ? எம் தந்தைக்கு தேவைப்படும் பொருளை நீ தராது போனால் உன் திருவருளுக்கு அழகோ ஆவடுதுறை ஆளும் பெருமானே . 


                                  சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக