சனி, ஏப்ரல் 30, 2016

தேவார பாடல்கள் ..

 வாழ்க்கையில் கஷ்டம் தீர ..


       

வாசி தீரவே காசு நல்குவீர்
மாசின் மிழலையீர் ஏச லில்லையே.


இறைவ ராயினீர் மறைகொண் மிழலையீர்
கறைகொள் காசினை முறைமை நல்குமே.


செய்ய மேனியீர் மெய்கொண் மிழலையீர்
பைகொ ளரவினீர் உய்ய நல்குமே.


நீறு பூசினீர் ஏற தேறினீர்
கூறு மிழலையீர் பேறு மருளுமே.


காமன் வேவவோர் தூமக் கண்ணினீர்
நாம மிழலையீர் சேம நல்குமே.


பிணிகொள் சடையினீர் மணிகொண் மிடறினீர்
அணிகொண் மிழலையீர் பணிகொண் டருளுமே.


மங்கை பங்கினீர் துங்க மிழலையீர் 
கங்கை முடியினீர் சங்கை தவிர்மினே.


அரக்க னெரிதர இரக்க மெய்தினீர்
பரக்கு மிழலையீர் கரக்கை தவிர்மினே.


அயனு மாலுமாய் முயலு முடியினீர்
இயலு மிழலையீர் பயனு மருளுமே.


பறிகொள் தலையினார் அறிவ தறிகிலார்
வெறிகொள் மிழலையீர் பிறிவ தரியதே.


காழி மாநகர் வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல் தாழு மொழிகளே.                                        கஷ்டம் தீர பெருமானிடம் பொருள் கேட்கும் பதிகம் . மெய்யன்பினால் ஈசனிடம் சம்பந்தபெருமான் படிக்காசு கேட்க சிவபெருமான் கொடுத்தருளினார் . அதுபோல நம்முடைய கஷ்டத்தையும் நீக்கும் பொருட்டு நம் அப்பனிடம்  இப்பதிகத்தை பக்தியோடு பாடி கஷ்டம் தீர்க்க அருள்புரிய வேண்டுவோம் .                            சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் சிவத்தை போற்றுவோம் !! சித்திகளை போற்றுவோம் !!                              


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக