புதன், ஜூலை 06, 2011

64 திருவிளையாடல்


வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்!


 ஊரில் எத்தனை யானை இருந்தாலும், ஐராவத யானை வெள்ளை நிறம் என்பதால், அதற்கு மிகவும் கர்வம்.அகம்பாவிகளுக்கு என்றாவது ஒருநாள் அடி விழும். அப்படி ஒரு சோதனை ஐராவதம் யானைக்கும் ஏற்பட்டது. இந்திரன் தேவலோகம் வந்ததும், அவனை ஏற்றிக் கொண்டு இந்திரபுரிக்குள் அட்டகாசமாக நுழைந்தது. துர்வாசர் என்ற மகரிஷி இருந்தார். அவருக்கு ஒழுக்கம் ரொம்ப முக்கியம். சிறிது பிசகலாக பேசினாலோ, நடந்தாலோ கூட மூக்கு மேல் கோபம் வந்துவிடும். அப்படிப்பட்ட கோபக்காரரிடம் அந்த யானை மாட்டிக் கொண்டது. அன்று துர்வாசர் சிவபெருமானை மலர் தூவி வணங்கினார். அவரது பக்திக்கு மகிழ்ந்த ஈசன், தன் ஜடையில் இருந்த பொற்றாமரை ஒன்றை கீழே விழும்படி செய்தார். இறைவன் தந்த அந்த பிரசாதத்தை எடுத்து முனிவர் தன் கமண்டலத்தில் வைத்துக் கொண்டார். இந்திரனை தேவர்கள் ஆரவாரமாக அழைத்து வந்து கொண்டிருந்தனர். இவ்வளவு அடிபட்டும் இந்திரனுக்கு அலட்சிய குணம் மட்டும் மாறவில்லை. மேலும் விருத்திராசுரனையே வென்று விட்டோமே என்ற மமதையுடன் வந்தான். எதிரே வந்த துர்வாசர், அவன் நீடுழி வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் கமண்டலத்தில் இருந்த பொற்றாமரையை அவனிடம் கொடுத்தார். பிரசாதம் வாங்கும் போது பணிவு வேண்டும்.

இந்திரன் சற்றும் பணிவின்றி அந்த தாமரையை அலட்சியமாக வாங்கி அதை யானையின் மத்தகத்தின் மீது வைத்தான். யானை அதை தும்பிக்கையால் எடுத்து கால்களில் போட்டு மிதித்து விட்டது. துர்வாசர் நெருப்பு பொங்கும் கண்களுடன் இந்திரனையும், யானையையும் பொசுக்கி விடுவது போல பார்த்தார். தேவேந்திரா... என்று அவர் கோபத்தில் எழுப்பிய சப்தம் அந்த பிரதேசத்தையே கிடுகிடுக்கச் செய்தது. விட்டது வினை என்று இங்கு வந்தால் இந்த துர்வாசரிடம் சிக்கிக் கொண்டோமே என்று இந்திரன் நடுங்கினான். அவன் எதிர்பார்த்தபடியே துர்வாசர் சாபமிட்டார். ஏ இந்திரா! கடம்பவன நாதனான எம்பிரானின் பிரசாதத்தையா அலட்சியம் செய்தாய்! அதை மரியாதையுடன் பெற்றிருந்தால், உன் நிலையே வேறு விதமாக இருந்திருக்கும்! ஆனால், கேடு கெட்ட இந்த யானையிடம் கொடுத்தாய். அது காலில் போட்டு மிதித்தது. தேவனாகிய நீ பூலோகத்தில் பாண்டிய மன்னன் ஒருவனிடம் தோற்றுப் போவாய். அவனுடைய சக்கராயுதம் உன் தலையைக் கொய்து விடும், என்றார். தேவேந்திரனும் தேவர்களும் நடுங்கி விட்டனர். யானையில் இருந்து குதித்த இந்திரன், ஐயனே! அறியாமல் செய்த பிழையை மன்னிக்க வேண்டும். ஏற்கனவே பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்டு பல்லாண்டுகள் பூலோகத்தில் வாடிக்கிடந்த நான் மீண்டும் பூலோகம் செல்வதா? அதிலும், ஒரு மானிடனிடம் தோற்றுப்போவதா? ஐயோ! இதை விட வேறென்ன கொடிய தண்டனையை நான் பெற முடியும்? தவங்களில் சிறந்தவரே! என்னை மன்னியும், என்றான். தேவர்கள் எல்லாருமே கிரீடங்கள் தலையில் பதியும்படி அவர் காலில் விழுந்து கிடந்தனர்.

துர்வாசர் இதுகண்டு மனம் மாறினார். கோபம் உள்ள இடத்தில் தானே குணமும் இருக்கும்! அவர் இந்திரனிடம், இந்திரா! கொடுத்த சாபத்தை திரும்பப் பெற இயலாது. இருப்பினும், பாண்டிய மன்னன் பயன்படுத்தும் சக்ராயுதம் உன் தலையைக் கொய்ய வரும்போது, அது உன் கிரீடத்தை மட்டும் பறித்துச் செல்லும் நிலை வரும். தலைக்கு வருவது தலைப்பாகையோடு போகும், என்றவர் யானையைப் பார்த்தார். ஏ ஐராவதமே! பெரியவர்களிடம் பணிபுரிபவர்கள் தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதற்கு உன் வாழ்க்கை இந்த உலகத்துக்கு பாடமாக இருக்க வேண்டும். உன் வெள்ளை நிறம் அழிந்து போகும். தேவலோக யானையான நீ, பூலோகம் சென்று காட்டுக்குள் பிற யானைகளுடன் கலந்து, புழுதி படிந்து நூறாண்டு காலம் திரிவாய். பின்னர், இந்திர லோகத்தை அடைவாய், என சாபமிட்டார்.

வெள்ளை யானை கண்ணீர் வடித்தது. பின்னர் அது பூலோகம் வந்து பல இடங்களிலும் சுற்றித் திரிந்தது. ஒருவழியாக நூறாண்டுகள் கடந்தன. பல வனங்களில் சுற்றிய அந்த யானை, கடம்ப வனத்துக்குள் புகுந்தது. அதுவே இந்திரனால் உருவாக்கப்பட்ட மதுரையம்பதி. அங்கிருந்த சொக்கலிங்கத்துக்கு அது பொற்றாமரைக் குளத்தில் இருந்து தும்பிக்கையில் தண்ணீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்தது. தங்கத் தாமரைகளைப் பறித்து வந்து தூவி வழிபட்டது. அந்த யானையின் மீது இரக்கம் கொண்ட சொக்கநாதர் அதன் முன் தோன்றினார். ஐராவதமே! நீ செய்த சிவஅபச்சாரம் நீங்கியது. நீ இந்திரலோகம் திரும்பலாம்,என்றார். யானை சிவனிடம், எம்பெருமானே! இந்த வனத்தின் அழகில் நான் மெய்மறந்து விட்டேன். மேலும் தங்களைப் பிரிய எனக்கு மனமில்லை. நான் இந்த வனத்திலேயே இருக்கிறேனே! தங்கள் விமானத்தை (கருவறைக்கு மேலுள்ள கோபுரம் போன்ற அமைப்பு) தாங்கும் யானைகளில் ஒன்றாக என்னையும் கொள்ள வேண்டும், என்றது. சிவபெருமான் அதனிடம், ஐராவதமே! இந்திரன் எனது பக்தன். அவனைச் சுமந்தால் என்னையே சுமப்பது போலாகும். நீ இந்திரலோகத்திற்கே செல், என்றார்.

 மேலும், அதன் சுயவடிவத்தையும் தந்தார்.அந்த யானைக்கோ கடம்பவனத்தை விட்டு செல்ல மனமில்லை. அது கடம்பவனத்தின் ஒரு பகுதிக்குச் சென்று அங்கிருந்த ஒரு லிங்கத்திற்கு பூஜை செய்து அங்கேயே தங்கி விட்டது. வெள்ளை யானை வந்து தங்கிய அந்த இடத்துக்கு அதன் பெயரான ஐராவதநல்லூர் என்று அமைந்தது. பின்னர், இந்திரன் அந்த யானை பற்றி அறிந்து வந்து அதை அழைக்க வந்தான். சிவபெருமானிடம் யானையின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தான் எழுப்பிய விமானம் தன் பெயரால் இந்திர விமானம் என அழைக்கப்பட வேண்டும் என்றும், வெள்ளை யானை தன்னைத் தாங்குவது போல், அந்த விமானத்தையும் ஐராவதமே எட்டு வடிவங்களில் தாங்குவது போன்ற தோற்றம் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான். அதன்படியே, எட்டு வெள்ளை யானைகள் மதுரை சொக்கநாதரின் விமானத்தை தாங்கியுள்ள காட்சியை இப்போதும் காணலாம்.

 நன்றி : தினமலர் 

64 திருவிளையாடல்

           இந்திரன் தோஷம் தீர்த்தப் படலம்!



                         ஒரு செயலைத் தொடங்கும் முன், அந்த செயல் பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டால், மிகவும் சிறப்புடையதாக இருக்கும். முன்பின் தெரியாத ஊருக்குச் செல்லும் போது, அந்த ஊர் பற்றிய விபரங்களை விபரமறிந்தவர்களிடம் கேட்டோ, இணையத் தளங்கள் மூலம் அறிந்தோ செல்வது அங்கு சென்று வர எளிதாக இருக்கும். புராணங்களைப் படிக்கும் முன்பும் அப்படியே. புராணக்கதைகளை மட்டும் படித்தால் போதாது. அதை எழுதியவர் யார், அவரைப் பற்றிய விபரம், எந்தச் சூழ்நிலையில் எழுதினார், அவரை எழுதத் தூண்டியவர்கள் யார் என்பது பற்றியும் தெரிந்து கொண்டால், படிப்பவர்களுக்கு அதுபற்றிய முழுமையான விபரமும் தெரியவரும். திருவிளையாடல் புராணம் இன்று துவங்குகிறது. 


கூடல்மாநகராம் மதுரையில் சிவபெருமான் செய்த அற்புதலீலைகளை ஹாலாஸ்ய மகாத்மியம் என்னும் வடமொழி நூலில் சொல்லியுள்ளார்கள். வியாசர் இயற்றிய ஸ்கந்த புராணத்தில் இந்த லீலைகள் சொல்லப்பட்டுள்ளன. நந்திதேவர் சனத்குமார முனிவருக்கு இந்த லீலைகள் பற்றி சொன்னார் என்றும், அதை வியாசருக்கு சனத்குமாரர் சொன்னார் என்றும், வியாசர் அதை ஸ்கந்தபுராணத்தில் எழுதினார் என்றும் ஒரு தகவல் இருக்கிறது. ஹாலாஸ்ய மகாத்மியத்தை தமிழில் மொழி பெயர்த்தவர் பரஞ்சோதி முனிவர். அதை அப்படியே மொழி பெயர்க்காமல், தமிழுக்கே உரித்தான செய்யுள் நடையில் 3363 செய்யுள்களாக வடித்தார். இதில் முதல் 343 செய்யுள்கள் காப்பு, மதுரை நகர சிறப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது. 344 வது செய்யுள் முதல் தான் பெருமானின் திருவிளையாடல் துவங்குகிறது. வேதாரண்யத்தில் வசித்த மீனாட்சி சுந்தர தேசிகரின் மகனே பரஞ்சோதி. தந்தையே குருவாக இருந்து, மகனுக்கு சைவ சித்தாந்த கருத்துக்களைப் போதித்தார். நீறிட்ட உடலுடன் வேதாரண்யத்து பெருமானை துதித்து வந்த பதஞ்சலி முனிவர், தமிழகத்திலுள்ள பிறகோயில்களையும் பார்க்க ஆவல் கொண்டார். மதுரையம்பதிக்கு வந்த அவர், மண்டபம் ஒன்றில் தங்கியிருந்த போது, அவரது கனவில் தோன்றிய அன்னை மீனாட்சி, சிவபெருமான் அந்நகரில் நிகழ்த்திய லீலைகளை அழகு தமிழில் பாடும்படி உத்தரவிட்டாள். அன்னையின் திருக்காட்சி கண்ட பரஞ்சோதி முனிவர் தெள்ளுதமிழில் இனிய பாடல்களை வடித்தார். அதுவே திருவிளையாடல் புராணம். இது 64 படலங்களைக் கொண்டது. முதல் 18 படலங்கள் மதுரை காண்டம் என்றும், 19 முதல் 48 வரையான படலங்கள் கூடற்காண்டம் என்றும், 49 முதல் 64 வரையான படலங்கள் திருவாலவாய் காண்டம் என்றும் பெயர் பெற்றுள்ளன.


பிரம்மா ஒருமுறை ஒரு தராசுத் தட்டில் கைலாயத்தை ஒரு தட்டிலும், மதுரையம்பதியை ஒரு தட்டிலும் வைத்து நிறுத்தார். அப்போது, மதுரை இருந்த தட்டு தாழ்ந்தது. கயிலையை விட மதுரை மிகச்சிறந்த தலம் என்ற முடிவுக்கு வந்தார். அத்தகைய பெருமை பெற்ற மதுரை நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. திருவிளையாடல் புராணத்தை அரங்கேற்ற பரஞ்சோதி முனிவர் தயாராகி விட்டார். மக்கள் அனை வரும் சுந்தரேஸ்வர பெருமானின் திவ்ய லீலைகளைக் கேட்பதற்கு வரவேண்டும் பாண்டிய மன்னரின் சார்பில் பறையறைந்து தெரிவிக்கப் பட்டது. தேரோடும் வீதிகளை மக்கள் கோமயம் தெளித்து சுத்தமாக்கினர். அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டன. வாழை மரத் தோரணங்களை மக்கள் தங்கள் இல்லங்கள் முன்பு கட்டினர். இன்றைய சித்திரை திருவிழாவுக்கு நகரை அலங்கரிப்பது போல், மக்கள் வெகு விமரிசையான ஏற்பாடுகளை அவரவர் செலவில் செய்தனர். இந்த விபரத்தையறிந்து வெளியூர்களில் இருந்தெல்லாம் சிவனடியார்கள் மதுரையை மொய்த்தனர். எங்கும் சிவாய நம என்ற திருமந்திரம் ஒலித்தது. திருவிளையாடல் புராண அரங்கேற்றத்தை நடத்த பெரிய மண்டபம் வேண்டும், என்ன செய்யலாம் என யோசித்தனர் அமைச்சர்கள். கோயிலுக்குள் இருக்கும் ஆயிரங்கால் மண்டபத்தில் ஆயிரக்கணக் கான மக்கள் அமரலாம், மண்டபத்துக்கு வெளியேயும் மக்களை கூடச் செய்யலாம் என்ற அடிப் படையில் மண்டபத்தை சீரமைத்தனர். அலங்கார மேடை ஒன்றில் பட்டுக் கம்பளம் விரிக்கப்பட்டு, பரஞ் சோதியார் எழுதிய திருவிளையாடல் புராண ஓலைச்சுவடிகள் வைக்கப்பட்டிருந்தன. பரஞ்சோதியார் விழா மேடைக்கு வந்தார். அப்போது திருச்சங்குகள் முழங்கின. முரசுகள் ஆர்ப்பரித்தன. மங்கல வாத்தியங்கள் முழங்கின. பாண்டிய மன்னர் பரஞ்சோதியாரை எதிர்கொண்டு வரவேற்று, பொன்னாடை போர்த்தினார். அனைவரும் அன்னை மீனாட்சியின் சன்னதிக்குச் சென்றனர். கற்பூர ஒளியில் மரகதவல்லி மீனாட்சி தகதகவனெ ஜொலித்து ஆசிர்வதித்தாள். அடுத்து சுந்தரேஸ்வரப் பெருமானின் சன்னதிக்குச் சென்று, அரங் கேற்றம் மிகச்சிறப்பாக அமைய வேண்டினார் பரஞ்சோதி முனிவர். பின்னர் மண்டபம் திரும்பி, விநாயகப் பெருமானை மனதில் எண்ணி கணீர் என்ற குரலில் திருவிளையாடல் புராணத்தை சொல்ல ஆரம்பித்தார்.


சக்தியாய் சிவமாகித் தனிப்பர
முத்தி யான முதலைத் துதி செயச்
சுத்தியாகிய சொற்பொரு ணங்குள
சித்தி யானை தன் செய்பொற் பாதமே!
என்று விநாயகரை வணங்கிப் பாடினார்.
தொடர்ந்து மதுரையின் சிறப்பு, புராண வரலாறு ஆகிய முன்னுரைக்குப் பின், மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலுள்ள பொற்றாமரைக் குளத்தின் சிறப்பைச் சொன்னார்.  இந்தக் குளத்தைப் பார்த்தால் தர்மம் செய்த புண்ணியம் சேரும். தீர்த்தத்தைத் தொட்டால் செல்வம் பெருகும். மூழ்கி எழுந்தால் மோட்சம் கிடைக்கும் என்றார்.



இந்திரன் பழிதீர்த்தப் படலம்


            ஆசிரியரை மாணவர்கள் மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக சிவபெருமானின் முதல் திருவிளையாடல் அமைந்தது. தேவலோகத்தின் அரசன் யார் என்றால் தேவேந்திரன் என்று பச்சைக்குழந்தை கூட பதில் சொல்லிவிடும். அவன் தேவேந்திரன் என்றாலும், அவனுக்கும் சட்டதிட்டங்கள் உண்டு. குறிப்பாக, தலைமை பொறுப்பில் உள்ளவன், சட்ட திட்டங்களை மதித்து நடக்க வேண்டும். தனது பொறுப்பில் பலர் இருக்கிறார்களே என்ற அக்கறை வேண்டும். இல்லாவிட்டால், பதவி பறிபோய் விடும். தேவேந்திரனுக்கும் ஒருநாள் அப்படியொரு நிலை வந்தது. பூலோகத்தில் புண்ணியம் செய்தவர்களே தேவர் என்ற அந்தஸ்தை அடைகிறார்கள். பூலோகத்தில் அவர்கள் அடைய நினைத்த இன்பமெல்லாம் அங்கே கிடைக்கும். அதற்காக எதற்கும் ஒரு நேரம், காலம் உண்டல்லவா! அங்கும் நல்லநேரம், கெட்ட நேரமெல்லாம் உண்டு. தேவேந்திரனுக்கு ஒருநாள் கெட்ட நேரம் வந்தது பெண்களின் வடிவில்! தேவலோகத்தில் தேவர்கள் கூடிக்களித்திருக்க, நாட்டியத்தை ரசிக்க அப்சரஸ்கள் எனப்படும் தேவகன்னியர் உண்டு. அவர்களில் ரம்பா, ஊர்வசி, திலோத்தமா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்களின் நடனத்தை ரசித்துக் கொண்டிருந்த தேவேந்திரன், பல அப்சரஸ்களின் அழகில் மயங்கி லயித்துக் கிடந்தான். அந்த நேரத்தில் தேவர்களின் குருவான பிரகஸ்பதி அங்கு வந்தார். இவர் யார் தெரியுமா? நவக்கிரக மண்டபத்தில் மஞ்சள் உடை உடுத்தி வடக்கு நோக்கி ஒரு சிற்பம் இருக்குமே! அந்த குரு பகவான் தான்! இவரது பார்வை ஒரு இடத்தில் பட்டாலே நல்லது நடக்கும். அதனால் தான் குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள்.


தேவேந்திரனுக்கு தான் கெட்ட நேரமாயிற்றே! இல்லாவிட்டால், பொறுப்புள்ள பதவியிலுள்ள ஒருவன், பெண்களுடன் பொது இடத்தில் கூடிக் களிப்பானா? மறைவிடத்து விஷயங்கள் பொது இடத்தில் நடந்தால், யாரால் கண் கொண்டு பார்க்க முடியும்! பிரகஸ்பதி, தேவேந்திரன் நிகழ்த்திய கூத்தைப் பார்த்து, அப்படியே கண்ணைப் பொத்திக் கொண்டார். குரு பார்வையை மூடினால், நிலைமை என்னாகும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தேவேந்திரனுக்கு ஆரம்பமானது கெட்ட நேரம்.பிரகஸ்பதி, அப்படியே திரும்பிப் போய் விட்டார். தேவேந்திரன் தன் ஆட்டபாட்டத்தை முடித்துக் கொண்டு, தனது அந்தரங்க அறைக்குள் செல்லும் வேளையில், தேவர்களில் சிலர் அவனைப் பார்த்தனர். தேவேந்திரா! குருநாதர் பிரகஸ்பதி வந்திருந்தார். தாங்கள் அந்நேரத்தில் இருந்த நிலை கண்டு, கண் பொத்தி வெளியேறி விட்டார். உடனடியாக அவரைச் சந்தித்து, மன்னிப்பு கேளுங்கள். குருவின் ஆதரவு இல்லாவிட்டால் தங்களுக்கு மட்டுமல்ல! தங்களை நம்பியிருக்கும் எங்களுக்கும் சிரமம் வந்து சேரும், என்றனர். தேவேந்திரன் கதிகலங்கி விட்டான். குரு நிந்தை செய்தோமே! என்ன நடக்கப் போகிறதோ? உடனே அவரை சென்று பார்த்து வருகிறேன், என்று அவரது இல்லத்துக்கு தனது வெள்ளை யானையான ஐராவதத்தில் ஏறி விரைந்தான்.


குரு அங்கே இருந்தால் தானே! சிலருக்கு திருமணமாகாமலே இருக்கும். அதற்கு காரணம் என்ன தெரியுமா? குடும்பத்தினர் அல்லது முன்னோர் செய்த பாவத்தின் விளைவே அது. இவர்கள் மீது குருவின் பார்வை பட வேண்டுமானால், பெரும் பரிகாரங்களை எல்லாம் செய்தாக வேண்டும்! தேவேந்திரனின் பார்வையில், குரு படவே இல்லை. தனது தலைமை சீடனே இப்படியிருந்தால் மற்றவர்கள் எப்படியிருப்பார்கள்? பெண் பித்தர்களான இவர்களுக்கு போய் பாடம் எடுத்தோமே என்ற வேதனையில் குரு மறைவான இடத்துக்குப் போய் விட்டார். தேவேந்திரன் அவரைத் தேடியும் காணாமல், அவன் பிரம்மாவைப் பார்க்க ஓடினான். குரு அபச்சாரம் செய்து விட்டதை அவரிடம் சொன்னான். பிரம்மா ஒரு யோசனை சொன்னார். தேவேந்திரா! குரு நிந்தனை கொடிய பாவம். இதற்கு தகுந்த பரிகாரம் செய்தால் தான் அவர் உனக்குத் தென்படுவார். அந்த பரிகாரத்தையும் நான் சொல்கிறேன் கேள். துவஷ்டா என்ற அசுரன் ஒரு மகனைப் பெற்றிருக்கிறான். அவனது பெயர் விஸ்வரூபன். அவனுக்கு மூன்று முகம். மிகவும் கொடியவன். ஆனால், ஆச்சார அனுஷ்டானங்களை சரியாகக் கடைபிடிப்பவன். அவனை உன் தற்காலிக குருவாக ஏற்றுக்கொள். வேறு வழியில்லை, என்றார். குரு பார்வை இல்லாவிட்டால் கெட்ட நேரம் விடவே விடாது. இந்திரன் அதற்கு விதிவிலக்கா என்ன! பெரியவர்கள் ஒன்றைச் சொன்னால், அதை நம்பிக்கையுடன் செய்ய வேண்டும்.


தன்னிலும் உயர் பதவியிலுள்ள, வேதநாயகனான நான்முகன் சொன்ன யோசனை இந்திரனுக்குப் பிடிக்கவில்லை. தேவலோகத்துக்கு ஒரு அசுரனை குருவாக நியமிக்கச் சொல்கிறாரே! இவருக்கு என்ன ஆயிற்று? என்று எண்ணியபடியே சென்றான். இருப்பினும், அவரது யோசனையை செயல்படுத்தாவிட்டால் அவரது பகையையும் சம்பாதிக்க நேரிடும். மேலும், தேவலோகத்துக்கு ஒரு குருவும் நிச்சயம் வேண்டுமே என்ற எண்ணத்துடன் விஸ்வரூபனை சந்தித்து அவனை வணங்கினான். என்ன இந்திரா! தேவலோகாதிபதி என்னைத் தேடி வந்திருக்கிறாய்! என்ன விஷயம்? என்றான். தங்களை குருவாக ஏற்க வந்துள்ளேன். தாங்கள் தேவலோக குரு பதவியை ஏற்க வேண்டும், என்றான். விஸ்வரூபனுக்கும் இதில் மனமில்லை. அசுரனான நாம், தேவர்களுக்கு குருவாக இருப்பதாவது! இருப்பினும், தானாக வலையில் வந்து சிக்கிய மானை விட்டு வைக்கலாமா! சிங்கமாக இருந்து இந்த தேவர்களை ஒரு வழி செய்து விட வேண்டும். ஏழு உலகிலும் அசுரக்கொடி பறக்க இதை விட அருமையான சந்தர்ப்பம் ஏது? என்று எண்ணி யவனாய், பதவி ஏற்க சம்மதித்தான். ஆக, மாணவனுக்கும் மனமில்லை, குருவுக்கும் வஞ்சக எண்ணம் என்ற ரீதியில் தேவர்கள் அசுரர்களின் கிடுக்கிப்பிடியில் சிக்கினர்.


ஒரு வழியாக விஸ்வரூபன் தேவர்களுக்கு குருவானான். தேவேந்திரனுக்கு தன் குலகுரு பிரகஸ்பதிக்கு செய்த துரோகம் மனதை அரித்துக் கொண்டே இருந்தது. அவரது அதிருப்தியில் இருந்து விடுபட்டு பாவம் நீங்குவதற்காக யாகம் ஒன்றை நடத்த எண்ணம் கொண்டான். தன்னுடைய விருப்பத்தை விஸ்வரூபனிடம் தெரிவித்தான். புதிய குரு விஸ்வரூபன் யாகம் நடத்த ஒப்புதல் கொடுப்பது போல நடித்து, இதையே சந்தர்ப்பமாக்கி தேவேந்திரனை கொன்று தேவலோகத்தை நிரந்தரமாக கைப்பற்றி விடவேண்டும் என்ற எண்ணம் கொண்டான். ஒருவருக்கு குரு பார்வை இல்லாவிட்டால் துன்பங்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். தேவேந்திரனுக்கு இந்த யாகத்தின் மூலம் பெரும் துன்பம் வந்து சேர இருந்தது. யாகம் துவங்கியது.


 விஸ்வரூபன் யாகத்திற்கு தலைமை வகித்தான். யாக குண்டத்தில் நெய்யை வார்க்கும்போது, தேவர்குலம் தழைக்க வேண்டும் என்பதற்கு பதிலாக அரக்கர் குலம் தழைக்க வேண்டும் என்று சொல்லி நெய்யை ஊற்றினான். மந்திரங்களை மனதிற்குள் உச்சரித்தான். அவன் என்ன செய்கிறான் என்பதை யாராலும் அறிந்துகொள்ள முடியவில்லை. தேவேந்திரன் சுதாரித்துக் கொண்டான். தன் ஞானதிருஷ்டியால் எதிரே அமர்ந்திருக்கும் விஸ்வரூபன் குரு என்ற போர்வையில் தனக்கு எதிராக மந்திரங்களை உச்சரிக்கிறான் என்பதை தெரிந்துகொண்டான். அவனுக்கு கடும் கோபம் ஏற்பட்டது. தனது வஜ்ராயுதத்தை எடுத்து விஸ்வரூபன் மீது வீசினான். இந்திரனின் வஜ்ராயுதத்துக்கு தப்பியவர்கள் யாருமில்லை. விஸ்வரூபனின் மூன்று தலைகளையும் அது கொய்தது. அந்த தலைகள் மூன்று பறவைகளாக உருமாறி வானில் பறந்தது. எப்படியோ விஸ்வரூபனின் ஆவி பிரிந்துவிட்டது. ஏற்கனவே பிரகஸ்பதியின் சாபத்தை பெற்றுக்கொண்ட இந்திரன், இப்போது புதிய குருவான விஸ்வரூபனையும் கொன்றுவிட்டதால் பிரம்மஹத்தி தோஷம் (கொலை பாவம்) பற்றிக் கொண்டது. ஒருவருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டால் அதற்கு மாபெரும் பரிகாரங்களை செய்தாக வேண்டும். அந்த பரிகாரங்களை எல்லாம் தேவர்கள் செய்தனர். இதன் மூலம் அந்த தோஷம் நீங்கியது. ஆனால் அசுரர்களின் பகையை அவன் அதிகமாக சம்பாதித்துக்கொண்டான். விஸ்வரூபனின் தந்தை துவஷ்டா. இவர் தன் மகனைக்கொன்ற தேவேந்திரனை பழிவாங்க எண்ணம் கொண்டார். இதற்காக யாகம் ஒன்றை துவங்கினார். அந்த யாகத்தீயிலிருந்து பயங்கர ஆயுதங்கள், கோரைப்பற்கள், நாற்பது கைகளுடன் ஒரு அரக்கன் தோன்றினான். அவனது கண்களிலும் வாயிலும் விஷவாயு வெளிப்பட்டது. அவன் துவஷ்டாவை வணங்கிநின்றான்.


தலைவனே! உன் கட்டளைக்கு அடிபணிந்து உன் முன்னால் நிற்கிறேன். உனக்காக நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டான். அதற்கு துவஷ்டா, சீடனே! உனக்கு விருத்திராசுரன் என பெயர் சூட்டுகிறேன். நீ இப்போது இருப்பதைவிட பலமடங்காக உன் உருவத்தை வளர்த்துக்கொள்ளும் வரத்தையும் தருகிறேன். உன் உருவம் வளர வளர கோபமும் அதிகமாகும். அந்த கோபத்தை பயன்படுத்தி நீ தேவர்குலத்தை அழிக்க வேண்டும். குறிப்பாக என் மகன் விஸ்வரூபனை கொன்ற இந்திரனின் உயிர் எனக்கு வேண்டும். உடனே புறப்படு! என ஆணையிட்டார். விருத்திராசுரன் தனது நாற்பது கைகளிலும் பல்வேறு ஆயுதங்களை தாங்கி இந்திரனை தேடி புறப்பட்டான். விருத்திராசுரன் தன்னை நோக்கி வருவதை இந்திரன் அறிந்துகொண்டான். அவன் தனது வாகனமாகிய வெள்ளை ஐராவதத்தில் அமர்ந்து புறப்பட்டான். இருவரும் வானவெளியில் சந்தித்தனர். கடும் போர் ஏற்பட்டது. இந்திரன் தனது வஜ்ராயுதத்தின்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவன். அதை விருத்திராசுரன் மீது அவன் எறிந்தான். ஆனால் அது அவனை எதுவுமே செய்யவில்லை. தன் கையிலிருந்த இரும்பு தடியால் வஜ்ராயுதத்தை தடுத்து நிறுத்திவிட்டான் விருத்திராசுரன்.


 மேலும் அந்த தடியால் இந்திரனையும் தாக்கினான். இந்திரன் மயங்கி விழுந்துவிட்டான். இந்திரன் இறந்துவிட்டான் என நினைத்த விருத்திராசுரன், துவஷ்டாவிடம் திரும்பி சென்றுவிட்டான். ஆனால் சிறிது நேரத்தில் இந்திரனுக்கு மயக்கம் தெளிந்து விட்டது. தான் உயிருடன் இருப்பது தெரிந்தால் விருத்திராசுரனால் ஆபத்து ஏற்படும் என பயந்துபோன இந்திரன் சத்யலோகத்திற்கு வந்துசேர்ந்தான்.அங்கு பிரம்மாவை வணங்கி, விருத்திராசுரனை கொல்வதற்குரிய வழி பற்றி கேட்டான். பிரம்மா அதுபற்றி ஏதும் சொல்லவில்லை. தேவேந்திரனே! விருத்திராசுரனை கொல்லும் வழியை நான் அறியமாட்டேன். அசுரர்களை கொல்லும் சக்தி ஸ்ரீமந் நாராயணனுக்கே இருக்கிறது. நாம் அவரிடம் சென்று யோசனை கேட்டு வரலாம் என சொல்லி வைகுண்டம் சென்றனர்.


 அங்கே திருமால் ஆதிசேஷன் மீது துயில் கொண்டிருந்தார். பரந்தாமனாகிய பெருமாளை இருவரும் பாடித்துதித்தனர். திருமால் அவர்களிடம், என்ன காரணத் திற்காக வந்தீர்கள்? என கேட்டார்.அவர்கள் வந்த காரணத்தை விளக்கினர். திருமால் இந்திரனிடம், தேவேந்திரா! திருப்பாற்கடலை கடைந்தபோது நீ உனது ஆயுதத்தை ததீசி முனிவரிடம் கொடுத்து வைத்தாய். ஆனால் அதை திரும்ப வாங்க மறந்துவிட்டாய். நீ வருவாய் என காத்திருந்த மகரிஷி வராமல் போனதால் அந்த ஆயுதங்களை விழுங்கிவிட்டார். அவை அனைத்தும் அவரது முதுகுத்தண்டில் சென்று சேர்ந்துவிட்டது. அந்த மகரிஷியிடம் வேண்டி அவரது முதுகுத் தண்டை பெற்று அதை ஆயுதமாக பயன்படுத்தி போரிட்டால் விருத்திராசுரன் மடிவான்.ஆனால் முதுகுத் தண்டை உனக்கு காணிக்கையாக கொடுத்துவிட்டால் மகரிஷி இறந்துவிடுவார். இனி அதை பெறுவது உன்னுடைய வேலை என்று சொல்லி ஆசீர்வதித்து அனுப்பினார்.


வேந்திரன் ததீசி முனிவர் தவம் செய்துகொண்டிருந்த ஆசிரமத்திற்கு சென்றார். அவன் வந்த காரணத்தை அறியாத முனிவர் அவனை வரவேற்றார். ததீசி முனிவருக்கு இந்திரன் தான் கொண்டு வந்த மங்கலப் பொருட்களை சமர்ப்பித்தான். பெரியவர்களைப் பார்க்க வெறும் கையுடன் செல்லக்கூடாது. பழம், பூமாலை முத லானவற்றை வாங்கிச் செல்வது உத்தமம். தேவேந்திரன் அதையே செய்திருந்தான். அவன் வந்த காரணத்தை ததீசி முனிவர் கேட்டார். தேவேந்திரா! திடீரென என்னைத் தேடி வந்த காரணம் என்ன?என்றார். ஒருவரிடம் எதை வேண்டுமானாலும் கேட்கலாம். ஆனால், முதுகுத்தண்டை கேட்பது என்றால்... முதுகுத்தண்டை சாதாரணமாகவா எடுக்க முடியும்? உயிர் பிரிந்தால் தானே அது சாத்தியம்... இருந்தாலும், நாராயணன் இப்படி சொல்லியிருக்கிறார் எனச்சொல்லி, அவரிடம் விஷயத்தை விளக்கினான் தேவேந்திரன். 


ததீசி முனிவரின் முகம் பிரகாசமானது. இப்படி ஒரு பாக்கியம் எனக்கா? தாராளமாக என் முதுகெலும்பை எடுத்துக் கொள் தேவேந்திரா. தேவர்களைப் பாதுகாக்க என் முதுகுத்தண்டு உதவுமென்றால் அதை விட வேறு என்ன பேறு எனக்கு வேண்டும்? என்று அகம் மகிழச் சொன்னார். உனக்காக உயிரையும் கொடுப்பேன் கண்ணே! என்று காதலன் காதலியிடமும், கணவன் மனைவியிடமும் வசனம் வேண்டுமானால் பேசலாம். ஆனால், அதற்கு தயாராக இருப்பவர்கள் எத்தனை பேர்? ததீசி மனப்பூர்வமாக சம்மதித்தார். பத்து உயிர் வாழ்வதற்கு ஒரு உயிர் போகிறது என்றால் அதுபற்றி கவலைப்படவே கூடாது. இங்கோ! முப்பத்து மூன்று கோடி தேவர்களின் உயிர், முனிவரின் முதுகுத்தண்டில் இருக்கிறது என்பதால், அவர் உளப்பூர்வமாக சம்மதித்தார். உடனடியாக, அவர் யோகாவில் ஆழ்ந்தார். அவரது பிராணன் பிரிந்தது.


 பிறருக்காக உயிர் விட்ட அந்த ஆவியை வானத்தில் இருந்து புஷ்பக விமானம் வந்து ஏற்றிக்கொண்டு சிவலோகம் நோக்கிச் சென்றது. இந்திரன், முனிவரின் முதுகுத்தண்டுடன் சென்று, விருத்திராசுரனுடன் போரிட்டான். அவனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அசுரப்படைகள் முழுமையாக அழிந்து விட்டன. விருத்திரனுக்கு ஆச்சரியம். இப்படியும் ஒரு ஆயுதமா? இனியும் இவன் முன்னால் நின்றால் உயிரிழக்க நேரிடும் என்றெண்ணிய அவன் கடலுக்குள் போய், அங்கே ஏற்கனவே மறைந்திருந்த அசுரர்களுடன் போய் இணைந்து கொண்டான். தேவேந்திரன் பிரம்மாவிடம் ஓடினான். கடலுக்குள் மறைந் தவனை எப்படி பிடிப்பது என்று யோசனை கேட்டான்.


மகரிஷி அகத்தியரால் மட்டுமே அது முடியும். காவிரியையும், தாமிரபரணியையும் தன் கமண்டலத்துக்குள் அடக்கியவர் அவர். அவரைச் சந்தித்தால் இதற்கு விடிவு பிறக்கும், என்றார். இந்திரன் அகத்தியரைத் தேடிச் சென்று நமஸ்கரித்து, வந்த விஷயத்தைச் சொன்னான்.அதுபற்றி கவலை வேண்டாம், என அருள் பாலித்த அகத்தியர், அந்தக் கடலருகே சென்று உளுந்து அளவுக்கு மாற்றி, அதை உள்ளங்கையால் அள்ளி பருகி விட்டார். வற்றிப் போன கடலுக்குள் அசுரர்கள் அங்குமிங்கும் ஓடினர். விருத்திராசுரனை நோக்கி முதுகுத்தண்டை வீசினான் தேவேந்திரன். அது அவனை விரட்டிச் சென்று தலையைக் கொய்தது. குரு நிந்தனை மிகவும் பொல்லாதது. எப்படி தெரியுமா? விருத்திராசுரன் மடிந்த அடுத்தகணமே கொலைப் பாவமான பிரம்மஹத்தி அவனைத் தொற்றிக் கொண்டது. குருவை ஒருமுறை அவமதித்ததால், அவன் தொடர்ந்து அவஸ்தைகளை அடைந்து வந்தான். இன்னும் அது தீர்ந்தபாடில்லை. நாராயணன், பிரம்மா ஆகியோர் இருந்தும், இரண்டு மகரிஷிகளின் உதவி இருந்தும் இப்படி ஒரு நிலை. அதனால் தான் தெய்வத்துக்கு முன்னதாக குருவுக்கு ஸ்தானம் கொடுத்தார்கள் பெரியவர்கள். கொலைப் பாவம் காரணமாக, இந்திரனுக்கு சித்த பிரமை ஆகி விட்டது. அவன் தரையில் உருண்டு புரண்டு அரற்ற ஆரம்பித்தான். பின்னர், ஒரு தாமரைத் தண்டுக்குள் சென்று அதனோடு ஐக்கியமாகி விட்டான். இப்போது தேவலோகத்தில் தலைமைப் பொறுப்பு காலியாகி விட்டது. தேவேந்திரன் போன இடம் தெரியவில்லை. இதனால் நகுஷன் என்ற தேவனை இந்தப் பதவியில் தேவர்கள் அமர்த்தினர். நகுஷன் பதவிக்கு வந்தவுடன் ஆட்டம் போட ஆரம்பித்து விட்டான். இந்திரப்பதவியில் இருக்கும் எனக்கு இந்திராணி சொந்தமாக வேண்டும் என்று வாதம் செய்ய ஆரம்பித்து விட்டான். இந்திராணிக்கு பல வகைகளிலும் தொந்தரவும் கொடுத்தான். இந்திராணி அதற்கு படியவில்லை.


ஒருநாள் இந்திராணியை தன் அந்தப்புரத்துக்கு இழுத்து வாருங்கள் என்று காவலர்களுக்கு உத்தரவு போட்டான். இந்த விஷயம் தேவகுருவிற்கு தெரிந்து விட்டது. ஆஹா... நம்முடைய பிடிவாதத்தால் இந்திராணிக்கு களங்கம் வரலாமா? அவளது கற்புக்கு பங்கம் வந்தால் நான் தானே பொறுப்பு, என்று முடிவெடுத்து, தேவலோகம் சென்றார். இந்திராணி அவரது பாதங்களில் விழுந்து, தன் கணவர் மீது கொண்ட கோபத்தை மறந்து விடும்படியும், தன் கற்பிற்கு பாதுகாப்பு கேட்டும் மன்றாடினாள். அவளது கண்ணீர் பிரகஸ்பதியைக் கரைத்தது. 


குரு பலம் குறைந்தவர்கள், நவக்கிரக சன்னதியில் உள்ள குருவிடம், கண்ணீர் விட்டு மன்றாடினால், இரக்க குணமுள்ள குரு, சோதனைகளைக் குறைப்பார் என்பது இதில் இருந்து நமக்கு கிடைக்கும் தகவல். குருதேவர், அவளை சமாதானம் செய்து, ராணி! கவலை படாதே. நகுஷன் உயர்பதவியில் இருக்கிறான், அவன் மாபெரும் வீரன் வேறு, அவனை அவ்வளவு எளிதில் யாராலும் அடக்க முடியாது. அந்த பராக்கிரமசாலியை அடக்க ஒரு உபாயம் சொல்கிறேன் கேள். அவனை ஒரு தங்கப்பல்லக்கில் அமர்ந்து, ஏழு ரிஷிகள் அதனை தூக்கி வர வேண்டும் என்றும், அவ்வாறு என்னை (இந்திராணி) காண வந்தால், நான் உமது மனைவியாவேன், என்று சொல்லியனுப்பு, என்றார். குருவின் கட்டளையை ஏற்ற இந்திராணியும் அவ்வாறே செய்தாள். நகுஷன் சப்தரிஷிகளை வரவழைத்தான். ஏ ரிஷிகளே! என்னை இந்திராணியின் இருப்பிடத்துக்கு பல்லக்கில் அமர்த்தி தூக்கிச் செல்லுங்கள், என உத்தரவு போட்டான். பல்லக்கு புறப்பட்டது.


 அவர்களில், ஒரு ரிஷி மட்டும் சற்று மெதுவாகச் சென்றதால், மற்றவர்களும் மெதுவாக நடக்க வேண்டியதாயிற்று. நகுஷன் பல்லக்கில் இருந்தபடியே, மெதுவாகச் செல்பவன் யார்? என்று ஒருமையில் கத்தினான். அந்த முனிவர் அவனை எட்டிப்பார்த்தார். ஓ அகத்தியரா! இந்தக் குள்ளனால் தான் தாமதமா? அகத்தியரே! என் அவசரம் உமக்கென்ன தெரியும்? இந்திராணியை அடைய வேண்டும் என்ற விரகம் தாளாமல் அவதிப்படும் என்னைக் கொஞ்சமாவது புரிந்து கொண்டீரா? பருந்தைக் காணும் பாம்பு எப்படி வேகமாக ஊர்ந்து செல்லுமோ அதைப் போல் பல்லக்கை வேகமாகச் சுமந்து செல்லுங்கள், என உத்தரவிட்டான்.


 அகத்தியர் சாதாரணமானவனரா? தன்னை அவமதித்த அந்த காமாந்தகாரனை விடுவாரா? நகுஷா! நீதிமுறை பிறழ்ந்து நெறிகெட்ட வார்த்தைகளைப் பேசினாய். உன் மோகத்தைத் தீர்க்க சப்தரிஷிகளான எங்களை பாம்பு போல் விரைந்து செல்லச் சொன்னாயே! அடேய், அந்தப் பாம்பாகவே நீ மாறுவாய். இப்போதே இறப்பாய்! என்று சாபமிட்டார். பெரியவர்கள் நம்மைச் சுமப்பவர்கள். குடும்பத்தில் எத்தனையோ கஷ்டங்களை அனுபவித்து, அவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டு, இளையவர்களை வளர்ப்பவர்கள். அவர்களை நாம் மதிப்புடன் நடத்த வேண்டும். இல்லாவிட்டால் நகுஷனைப் போல் கடும் சாபத்துக்கு ஆளாகி, நம்மையே இழந்து விடுவோம். அகத்தியரின் சாபம் பொய்க்குமா? உடனடியாகப் பலித்து விட்டது. நகுஷன் பாம்பாக மாறி பல்லக்கில் இருந்து விழுந்து படமெடுத்து தன்னைச் சுற்றி நின்ற காவலர்களை கடிக்கச் சென்றான்.


 உடனே காவலர்கள் அதைக் அடித்தே கொன்று விட்டனர். பாம்பு இறந்தது. அகத்தியரால் நகுஷன் மாண்ட செய்தி இந்திராணியை எட்டியது. தனது கற்புக்கு களங்கம் வராமல் காப்பாற்றிய அகத்தியரை அவள் மனதார வணங்கினாள். பின்னர் தேவகுரு பிரகஸ்பதி, தாமரை தடாகத்தில் மறைந்திருந்த இந்திரனைத் தேடிச் சென்று அவனை வரவழைத்தார். குரு பார்க்க கோடி நன்மை ஆயிற்றே! இந்திரன் தான் செய்த பாவத்துக்கு மன்னிப்பு கேட்டு அவரது பாதங்களைப் பற்றிக்கொண்டான். குருவே! அடியேன் தங்களைக் கண்டு கொள்ளாமல் இருந்ததன் விளைவை அனுபவித்து விட்டேன். தங்களுக்கு அவமானம் விளைவித்தும் அவற்றைப் பொருட்படுத்தாமல் என் மனைவியின் மானத்தைக் காப்பாற்றினீர்கள். தங்கள் கிருபை வேண்டும், என பிரார்த்தித்தான்.


 பின்னர் பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக பூலோகம் சென்று அங்குள்ள புனிததீர்த்தங்களில் நீராடும்படியும், தேவர்கள் எல்லோருமே அங்கு செல்லலாம் என்றும் ஆலோசனை சொன்னார். அதன்படி இந்திரனின் தலைமையில் புஷ்பக விமானத்தில் அனைவரும் பூலோகம் புறப்பட்டனர். பனிபொங்கும் கயிலைமலையில் இறங்கிய அவர்கள் சிவபெருமானையும், உமாதேவியையும் வணங்கி கேதாரம், காசி உள்ளிட்ட தலங்களைத் தரிசித்தனர். கங்கை, யமுனை, சரஸ்வதியில் நீராடினர். நாம் பூலோகத்தில் வாழ்கிறோம் என்றால் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். தேவர்கள் கூட அவர்கள் செய்த பாவம் நீங்க பூலோகத்து புண்ணிய தீர்த்தங்களை நாடித்தான் வர வேண்டியுள்ளது. ஆனால், அதன் அருமை தெரியாமல் நாம் ஆறுகளை பாழ்படுத்திக் கொண்டிருக்கிறோம். இனியேனும், நதிகளின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொண்டு அவற்றுக்குரிய மரியாதையைச் செய்ய வேண்டும். பின்னர் அவர்கள் கடம்பவனத்தை அடைந்தனர். அங்கே ஒரு லிங்கம் தென்பட்டது. அதைக் கண்ட இந்திரன் அவ்விடத்தில் ஒரு தாமரைக் குளம் இருந்ததையும் பார்த்தான். அந்த தீர்த்தத்தில் தங்கத் தாமரைகள் பூத்திருந்தன. அந்த லிங்கத்திற்கு பூஜை செய்த இந்திரன், தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவிடம், உடனடியாக லிங்கம் இருந்த இடத்தில் அழகிய விமானம் அமைக்குமாறு பணித்தான். எட்டு யானைகள் தாங்கும் அழகிய விமானத்தை விஸ்வகர்மா அமைத்தார். பலநாட்களாக அங்கேயே தங்கி இந்திரன் பூஜைகள் செய்தான். அவனது பிரம்மஹத்தி தோஷம் நீங்கி விட்டது. இறைவன் அவன் முன்னால் தோன்றி, இந்திரா! உன் மீதான சாபம் நீங்கியது. நான் இந்த தலத்தில் சொக்கநாதர் என்ற பெயருடன் எழுந்தருள்வேன். சோமசுந்தரர் என்றும் என்னை அழைப்பர். இத்தலத்துக்கு வருபவர்கள் தீராத பாவங்களும் நீங்கப்பெறுவர், என அருள் பாலித்தார். பின்னர் அனைவரும் தேவலோகம் சென்றனர். 




நன்றி : தினமலர் 
                     

திங்கள், ஜூலை 04, 2011

சித்தர் பாடல்கள்(குமரகுருபர சுவாமிகள்)


              ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய 


                                       பண்டார மும்மணிக்கோவை





    நேரிசை வெண்பா


    எண்டிசைக்குஞ் சூளா மணிமாசி லாமணிசீர்
    கொண்டிசைக்கு மும்மணிக் கோவைக்குக்-கண்டிகைபொற்
    பைந்நாகத் தானனத்தான் பாற்கடலான் போற்றவருள்
    கைந்நாகத் தானனத்தான் காப்பு.
    1

    நேரிசை யாசிரியப்பா
    பூமலி சததளப் பொன்னந் தாதுகு
    காமர்பீ டிகையிற் கருணையோடு பொலிந்து
    வீற்றுவீற் றமைந்த விரிதலைப் புவனம்
    பாற்பட வகுத்த பழமறைக் கிழவனும்
    மதுக்குட முடைந்தாங் கிதழ்க்கடை திறந்து .....(5)
    பிரசமூற் றிருந்து முருகுகொப் புளிப்ப
    வண்டுழு துழக்குந் தண்டுழா யலங்கற்
    புரவுபூண் டகிலம் பொதுக்கடிந் தளிக்கும்
    கருணைபூத் தலர்ந்த கமலக் கண்ணனும்
    அஞ்சிறைச் சுதைநிறச் செஞ்சூட் டன்னமும் .....(10)
    செம்மயிர்க் கருங்கண் வெள்ளெயிற் றேனமும்
    ஆகுபு தனித்தனி யலமர நிவந்த
    மீகெழு பரஞ்சுடர் வௌிப்பட் டம்ம
    எம்மனோர் போல வினிதெழுந் தருளிக்
    கைம்மா றற்ற கணக்கில்பே ரின்ப .....(15)
    மோனவாழ் வளிக்கு ஞான தேசிகன்
    விரிகதிர் பரப்பு மரகதத் தகட்டிற்
    சுடர்செய் செம்மணி யிடையிடை பதித்தெனப்
    பாசடைப் பரப்பிற் பதும ராசிகள்
    சேயிதழ் விரிக்குஞ் செழுமல ரோடையும் .....(20)
    அண்டகோ ளகையு மெண்டிசா முகமும்
    கோட்டுடைத் தடக்கை நீட்டியளந் தென்னச்
    சேட்பட நிவந்த செண்பகா டவியும்
    கால்கிளர் விசும்பிற் கற்பகா டவிக்கு
    வேலியிட் டன்ன வியன்மணிப் புரிசையும் .....(25)
    மருங்குசூழ் கிடந்த வண்டமிழ்க் கமலைப்
    பெரும்பதி புரக்கும் பேரருட் குரிசில்
    நான்மறை நவின்ற நற்பொரு ளிவையென
    மோனவா சகத்தான் முப்பொரு ணவிற்றுபு
    நன்னலம் புரியு ஞானப் பிரகாசன் .....(30)
    இன்னருள் பழுத்த செந்நெறிச் செல்வன்
    திருக்கிளர் ஞானத் திருந்திழைக் கணியாம்
    அருட்பெருஞ் சைவத் தருங்கல னாப்பண்
    ஆசற விளங்கு மாசி லாமணி
    அமண்மா சறுத்த கவுணியர் பெருந்தகை .....(35)
    பிள்ளைமை விடுத்த தள்ளரும் பருவத்
    துள்ளதன் படிவ முணர்த்துவ கடுப்ப
    மாநிலத் தமர்ந்த ஞானசம் பந்தன்
    பொன்னடிக் கமலஞ் சென்னிவைத் திறைஞ்சுதும்
    இருகால் சுமந்த வொருபெருஞ் சேவகத் .....(40)
    தைம்புலக் களிறுந் தம்புலத் திழுப்ப
    ஊனிடைப் பிறவிக் கானகத் துழலா
    தேனைய முத்திநா டெய்தவோர்
    ஞான வாரண நல்குதி யெனவே.
    2

    நேரிசை வெண்பா
    என்வடிவ நின்வடிவாக் கொண்டா யௌியேற்குன்
    றன்வடிவ நல்கத் தகுங்கண்டாய் - மன்வடிவால்
    வெம்பந்த நீக்கும் விமலநீ மெய்ஞ்ஞான
    சம்பந்த னென்பதனாற் றான்.
    3

    கட்டளைக் கலித்துறை
    தானின் றெனைத்தனக் குள்ளே யொளிக்குமென் றன்மைநிற்க
    யானின்ற போதெனக் குள்ளே யொளித்திடு மிப்பரிசே
    வானின்ற சின்மய மாமாசி லாமணி மன்னுந்தன்மை
    நானின்று கண்டனன் காணே னிதற்கொத்த நன்மணியே.
    4

    நேரிசை யாசிரியப்பா
    மணிவடஞ் சுமந்த புணர்முலைக் கொதுங்கி
    ஈயா மாக்க டீமொழி கவர்ந்த
    சிற்றிடை படைத்த பேரமர்க் கண்ணியர்
    கரைகொன் றிரங்குந் திரைசெய்நீர்ப் பட்டத்து
    மைவிழி சேப்பச் செவ்வாய் விளர்ப்பக் .....(5)
    கருங்குழல் சரிய வெள்வளை கலிப்பச்
    சீராட் டயரு நீராட் டயர்ந்து
    புலவியிற் றீர்ந்து கலவியிற் றிளைக்கும்
    நீரர மகளிர் பேரெழில் காட்ட
    மருதம்வீற் றிருந்து பெருவளஞ் சுரக்கும் .....(10)
    தருமையம் பதிவாழ் சற்குரு ராய
    ஒள்ளொளி பரப்பும் வெள்ளிவே தண்டத்
    தொருபாற் பொலிந்த மரகதங் கவினச்
    சுடர்விடு செங்கதிர்க் கடவுண்மா மணிக்கு
    விளங்கெழின் மிடற்றோர் களங்கமுண் டென்பவக் .....(15)
    காசுலா மலினங் கரந்தகா ரணத்தால்
    மாசிலா மணியென வண்பெயர் நிறீஇ
    மேன்மையோ டமர்ந்த ஞானசம் பந்த
    ஈண்டுனைத் தமியனேன் வேண்டுவ தியாதெனின்
    அந்நிய மென்று மநநிய மென்றும் .....(20)
    இந்நிலை யிரண்டு மெய்திற் றென்றும்
    பல்வே றுரைக்குநர் சொல்வழிப் படாது
    திவ்வியம் பழுத்த சைவசித் தாந்தத்
    திறவா நிலைமைபெற் றின்பமார்ந் திருக்கும்
    பிறவா நன்னெறி பெறப்புரி வதுவே .....(25)
    அங்கது புரிதற் கரிதெனி னிங்கொரு
    சனனமியான் வேண்டுவ தினிதரு ளெனக்கே, அதுவே
    ஐந்தரு நிழற்கீ ழரசுவீற் றிருக்கும்
    இந்திர னாகிவாழ்ந் திருப்பதோ வன்றே
    மலரோ னாகி மன்னுயிர்த் தொகுதி .....(30)
    பலர்புகழ்ந் திசைப்பப் படைப்பதோ வன்றே
    அடலரா வணையி லறிதுயி லமர்ந்த
    கடவுளா யுலகங் காப்பதோ வன்றே, அவைதாம்
    ஆரா வின்பமென் றரும்பெயர் பெறினும்
    வாரா வல்வினை வருவிக் கும்மே .....(35)
    அன்னவை யொழியமற் றென்னைகொல் பிறவெனின்
    விழுத்தகு கல்வியு மொழுக்கமு மிலராய்ப்
    பழிப்பபள ராயினு மாக வழுத்துநின்
    பொன்னடித் துணைசேர் நின்னடித் தொண்டர்
    திருவமு தார்ந்து தெருக்கடை யெறிந்த .....(40)
    பரிகல மாந்தியிப் பவக்கட லுழக்கும்
    வரனுடை ஞமலி யாகிநின்
    அருளையு மயரா தவதரிப் பதுவே.
    5

    நேரிசை வெண்பா
    அவமாசி லாமனத்தார்க் காருயிரா ஞானோற்
    பவமாசி லாமணிச்சம் பந்தா - தவமார்
    ததியருளத் தானேநின் சந்நிதிப்பட் டேற்குக்
    கதியருளத் தானே கடன்.
    6

    கட்டளைக் கலித்துறை
    கடல்பெற்ற தோர்மணி சிந்தித்த


    நல்குங் கருத்துக்கெட்டா
    மிடல்பெற்ற பேரின்ப நல்கிய
    வாவருள் வேலைபெற்றென்
    உடல்பெற்ற கண்மணிக் குண்மணி
    யாகியொண் கூடல்வைகும்
    அடல்பெற்ற ஞானச் சுடர்மாசி
    லாமணி யானதொன்றே.
    7

    நிலைமண்டில வாசிரியப்பா
    ஒன்றே தன்மை யுனக்குமற் றெமக்கும்
    அன்றென மொழியினு மாமெனப் படுமே
    அங்ஙனங் கூறிய தெங்ஙனம் பிறவெனின்
    எஞ்ஞான் றுளையுள மஞ்ஞான் றியாமே
    அழியா நிலைமையை யனையம் யாமே .....(5)
    வியாபக நினக்குள தியாமுமஃ துளமே
    அறிவெனப் பெயரிய பெயரினை யப்பெயர்
    பிறிவரும் பெயராப் பெற்றனம் யாமே
    இச்சா ஞானக் கிரியையென் றிசைக்கும்
    சத்திக ளுளையுள தத்திற மெமக்கே .....(10)
    இந்நிலை முழுவதூஉ மெமக்குமுண் டாகலின்
    அந்நிய மலநினக் கநநிய மியாமே
    தருமையுங் கமலையும் விரிதமிழ்க் கூடலும்
    திருநக ராக வரசுவீற் றிருக்கும்
    மாசி லாமணித் தேசிக ராய .....(1) 5
    சம்பந் தப்பெயர் தரித்தமை யாலெமைச்
    சம்பந் தஞ்செயத் தகுந்தகு நினக்கே
    கருவிகட் கிறைமை காட்டுபு நிற்றலிற்
    புருட நாமம் புனைந்தன மாயினும்
    அத்தநிற் குறிப்பிற் சத்திகள் யாமே .....(20)
    புருடனைச் சத்தியிற் புணர்த்தனை யன்னதற்
    கொருகாட் டென்ப புருடோத் தமனே
    உன்னுட னெம்மையு மொப்பெனப் படுத்து
    முன்னர்க் கூறிய முறைமையிற் சிற்சில
    முழுவது மொவ்வா தொழியினு மொழிக .....(25)
    உயர்ந்தோன் றலைவ னொத்தோட் புணரினும்
    இழிந்தோட் புணரினும் மிழிபெனப் படாதே
    ஆதலின் யாமுனைக் காதலித் தனமாற்
    காதலி னெமையருட் கைப்பிடித் தருளி
    ஒருவரு முணராப் பரம வீட்டில் .....(30)
    இருளறை திறந்த பெருவௌி மண்டபத்
    துயர்நா தாந்தத் திருமல ரமளியிற்
    புளகமெய் போர்ப்ப மொழிதடு மாற
    உள்ளொலி நாதப் புள்ளொலி முழங்க
    ஞானவா ரமுத பானம தார்ந்து .....(35)
    கருவிகள் கழன்று பரவச மாகிப்
    பரமா னந்தப் பரவையுட் படிந்து
    பேரா வியற்கை பெற்றினி திருப்ப
    ஆரா வின்ப மளித்தரு ளெமக்கே.
    8

    நேரிசை வெண்பா
    எம்மா ருயிரா மெழின்மாசி லாமணியை
    அம்மா பெறுதற் கரிதன்றோ - சும்மா
    இருந்தாரே பெற்றார்மற் றெவ்வுலகில் யாரே
    வருந்தாது பெற்றார் மணி.
    9

    கட்டளைக்கலித்துறை
    மணிகொண் டவர்தம் பொருளாவ


    தன்றியம் மாமணியாம்
    அணிகொண் டவரைக்கொண் டாள்வதுண்
    டேயருட் கூடல்வைகும்
    கணிகொண்ட கொன்றைத் தொடைமாசி
    லாமணி கண்டவுடன்
    பணிகொண்டு தொண்டுங்கொண் டாளுங்கொள்
    வோமென்று பார்க்குமுன்னே.
    10

    நிலைமண்டில வாசிரியப்பா
    முற்படு மாயை முதற்கரை நாட்டிற்
    பற்பல புவனப் பகுதி பற்றி
    ஈரிரு கண்ணாற் றெழுதரம் வகுத்த
    ஆறே ழிரட்டி நூறா யிரத்த
    செயற்படு செய்களி னுயிர்ப்பயி ரேற்றி .....(5)
    ஊழெனப் பட்ட தாழ்புனற் படுகரிற்
    றெய்விக முதலாச் செப்புமும் மதகும்
    ஒவ்வொரு மதகா யுடனுடன் றிறந்து
    தாக மென்னுந் தனிப்பெருங் காலிற்
    போக மென்னும் புதுப்புனல் கொணர்ந்து .....(10)
    பாயுமைம் பொறியாம் வாய்மடை திறந்து
    பருவம் பார்த்து வரன்முறை தேக்கலும்
    இதத்துட னகித மெனுமிரண் டூற்றிற்
    புதுபுனல் பெருகிப் புரம்பலைத் தோட
    வார்புன லதனை மந்திர முதலா .....(15)
    ஓரறு வகைப்படு மேரிக ணிரப்பி
    விளைவன விளைய விளைந்தன வறுத்தாங்
    கொருகளஞ் செய்யு முழவ னாகி
    மாநிலம் புரக்கு மாசி லாமணி
    ஞானசம் பந்த ஞான தேசிக .....(20)
    நல்லருட் டிறத்தா னம்பி நீயே
    பல்லுயிர்த் தொகுதியும் பயங்கொண் டுய்கெனக்
    குடிலை யென்னுந் தடவய னாப்பண்
    அருள்வித் திட்டுக் கருணைநீர் பாய்ச்சி
    வேத மென்னும் பாதவம் வளர்த்தனை .....(25)
    பாதவ மதனிற் படுபயன் பலவே, அவற்றுள்
    இலைகொண் டுவந்தனர் பலரே யிலையொரீஇத்
    தளிர்கொண் டுவந்தனர் பலரே தளிரொரீஇ
    அரும்பொடு மலர்பிஞ் சருங்கா யென்றிவை
    விரும்பினர் கொண்டுகொண் டுவந்தனர் பலரே .....(30)
    அவ்வா றுறுப்பு மிவ்வாறு பயப்ப
    ஓரும்வே தாந்தமென றுச்சியிற் பழுத்த
    ஆரா வின்ப வருங்கனி பிழிந்து
    சாரங் கொண்ட சைவசித் தாந்தத்
    தேனமு தருந்தினர் சிலரே யானவர் .....(35)
    நன்னிலை பெறுதற் கன்னிய னாயினும்
    அன்னவர் கமலப் பொன்னடி விளக்கியத்
    தீம்புன லமுத மார்ந்தன னதனால்
    வேம்பெனக் கொண்டனன் விண்ணவ ரமுதே.
    11

    நேரிசை வெண்பா
    விண்புரக்குஞ் சிந்தா மணியென்கோ மெய்ச்சுடரால்
    மண்புரக்குஞ் சூளா மணியென்கோ - பண்பார்
    திருமா முனிவர் சிகாமணியென் கோசீர்
    தருமாசி லாமணியைத் தான்.
    12

    கட்டளைக் கலித்துறை
    தானவ னாகிய தன்மைபெற் றானடி தாழப்பெற்றால்
    தானவ னாகிய தன்மைபெற் றுய்வனத் தன்மையின்றித்
    தானவ னாகிய தன்மைபெற் றேற்கரு டாழ்சடிலத்
    தானவ னாகம் பெறாமாசி லாமணிச் சம்பந்தனே.
    13

    நேரிசை யாசிரியப்பா
    பந்தனை தவிராச் சிந்தனை நிகர்ப்பப்
    பாயிருள் பரந்த மாயிரும் பொழிலிற்
    கொளற்குரி மாந்தர்க் களித்தல் செய்யா
    தரும்பூண் சுமந்த வறிவி லாளரிற்
    சுரும்பூண் வெறுத்த துதைமலர் வேங்கை .....(5)
    தன்மருங் குறீஇப் பொன்மலர் பிலிற்ற
    இலையறப் பூத்த சுதைமலர்ப் புன்னையின்
    மெய்ப்புல னோக்கார் கட்புலன் கடுப்ப
    இமையா வறுங்கண் ணிமைத்தபைங் கூந்தற்
    பசுந்தார் மஞ்ஞை யசைந்தமர் தோற்றம் .....(10)
    பொற்றுணர் பொதுளிய கற்பகப் பொதும்பர்
    பொறிவண் டுண்ணா நறுமலர் தூற்றப்
    பாடல் சான்ற கோடுபல தாங்கிக்
    கவளங் கொள்ளாத் தவளமால் களிற்றிற்
    கண்பல படைத்த கார்முகில் வண்ணத் .....(15)
    திந்திரன் பொலியு மெழினலங் காட்டும்
    தண்பணை யுடுத்த தமிழ்ப்பெருங் கூடல்
    வண்பதி புரக்கு மாசி லாமணி
    தலைப்படு கலைமதி தாங்கா தாங்கத்
    தலைப்படு கலைமதி தாங்கி நிலைப்படு .....(20)
    மானிட னாய வடிவுகொண் டருளாது
    மானிட னாய வடிவுகொண் டருளி
    எற்பணி பூணா தெற்பணி பூண்டு
    பாரிடஞ் சூழாது பாரிடஞ் சூழ்தர
    ஆரு ரமர்ந்த ஞான்சம் பந்த .....(25)
    நிற்புகழ்ந் திறைஞ்சுங் கற்பின் மாக்கள்
    விருப்பு வெறுப்பற் றிருப்ப ரென்ப
    பொருட்டுணி புணர்ந்த புலமை யோரே
    இகபர மிரண்டினு மெதிர்நிறை கொளினும்
    தொகுதியுள் வேற்றுமைத் தொகைப்பொருள் கொளினும் .....(30)
    முன்னவர் மொழிந்ததற் கன்னிய மாகலின்
    விருப்பு வெறுப்புள வாய
    கருத்தின ராகவுங் கண்டனம் யாமே.
    14

    நேரிசை வெண்பா
    கண்ணிற் கணியாங் கதிர்மாசி லாமணியைப்
    பண்ணிற் கணியாப் பகர்வரால் - எண்ணுங்காற்
    பன்னூலிற் கோக்கப் படுமணியன் றிம்மணிமற்
    றிந்நூலிற் கோக்குமணி யென்று.
    15

    கட்டளைக் கலித்துறை
    எனவச மாகநில் லாதநெஞ்


    சாமிரும் பைக்குழைத்துத்
    தன்வச மாக்கொண் டிழுக்கின்ற
    தாற்றொண்டர் தம்மையருள்
    மன்வச மாகச் செயுமாசி
    லாமணி மாமணிக்குப்
    பொன்வச மாகச்செய் காந்தமென்
    றேசொல்லப் போந்ததுவே.
    16

    நேரிசை யாசிரியப்பா
    போந்தையங் கண்ணி வேந்துவிற் பொறித்த
    மன்பெருங் கிரியின் மென்கரும் பெழுதித்
    தேசுலாம் பசும்பொற் சிகரமந் தரத்தின்
    வாசுகி பிணித்தென மணிக்கச் சிறுக்கிக்
    கடாம்பொழி கரடக் களிநல் லியானை .....(5)
    படாம்புனைந் தென்னப் பைந்துகில் போர்த்துப்
    பிதிர்சுணங் கலர்ந்த கதிர்முலை மடந்தையர்
    விட்புலத் தவர்க்குங் கட்புலன் கதுவாச்
    சூளிகை வகுத்த மாளிகை வைப்பிற்
    சுவல்கைத் தாங்குபு மதியணந்து பார்க்கச் .....(10)
    சேணிகந் தோங்கும் யாணர்செய் குன்றத்
    தாடகத் தியன்ற சூடகக் கரத்தால்
    மாடகத் திவவியாழ் மருமமீ தணைத்து
    மூவகை நிலையத் தேழுசுர நிறீஇக்
    கொவ்வைவாய் திறந்து குயிலென மிழற்றுபு .....(15)
    மென்னரம் புகிரான் விரன்முறை தடவிக்
    கின்னரம் வியக்குங் கீதம் பாட
    நகைநில வெறிக்கு முகமதி காணூஉச்
    சந்திர காந்தத்திற் சமைத்தசெய் குன்றம்
    மைந்தர்போன் றுருகி மழைக்கணீர் சொரியப் .....(20)
    பல்வளஞ் சுரக்கும் பைந்தமிழ்க் கமலை
    நல்வளம் பதிவாழ் ஞானசம் பந்த
    பாசமா மிருட்கோர் படர்மணி விளக்கெனும்
    மாசி லாமணித் தேசிக ராய
    சாற்றுவன் கேண்மதி மாற்றமொன் றுளதே .....(25)
    மெய்ம்மயிர் சிலிர்ப்பக் கண்ணீர் வார
    மொழிதடு மாற வுழுவலன் பலைப்பச்
    சத்திநி பாதத் தன்மைவந் தடைந்தோர்க்
    கப்பொருள் புரிதற் கதுபொழு தாகலின்
    மெய்ப்பொரு ளுணரத்துதல் வியப்பெனப் படாதே .....(30)
    சொற்றமிழ் விரகன் றுணைக்கண் சாத்த
    முற்றுணர் கேள்வியர் பற்பல ராயினும்
    கைசொலக் கேட்குங் கட்செவி மூங்கைக்
    குய்வகை புணர்த்த தொருவியப் பாகலின்
    அன்னது கடுப்பநின் சந்நிதி விசேடத் .....(35)
    தின்னருள் பெறாதவர் யாவரு மிலரென
    வியப்புள தாக நயப்பதொன் றுளதே
    அனையதீங் கென்னென வினவுதி யாலெனிற்
    கதலித் தண்டிற் பொதிதழற் கொளீஇப்
    பற்றா திருப்பினும் பைப்பைய மூட்டுபு .....(40)
    மற்றொரு சூழ்ச்சியிற் பற்றுவித் தாலென
    ஒருசிறி தெனினும் பருவமின் றாயினும்
    பவவிரு டுரந்தருள் பதியத்
    தவமில் பேதையேன் றனக்கருள் வதுவே.
    17

    நேரிசை வெண்பா
    தன்னேரி லாஞான சம்பந்தன் றாளடைந்தார்க்
    கென்னே யிருள்வௌியா மென்பரால் - அன்னோன்
    அருளாத போதுவௌி யாயிருந்த வெல்லாம்
    இருளா யிருந்த வெனக்கு.
    18

    கட்டளைக்கலித்துறை
    என்செய லாலொன்றும் யான்செய்வ


    தில்லை யெனக்கவமே
    புன்செய லாம்வினைப் போகமுண்
    டாவதென் போதமில்லேன்
    தன்செய லாயவெல் லாமாசி
    லாமணிச் சம்பந்தநின்
    நன்செய லாயினு மென்செய
    லாச்செய்யு நானென்பதே.
    19

    நேரிசையாசிரியப்பா
    நான்மறைக் கிழவ நற்றவ முதல்வ
    நூன்முறை பயின்ற நுண்மைசா லறிஞ
    சொற்சுவை பழுத்த தொகைத்தமிழ்க் கவிஞ
    கற்றவர் வியக்குங் காவியப் புலவ
    செவிதொறுஞ் செவிதொறுந் தெள்ளமு தூட்டுபு .....(5)
    கவிஞர்வயி னிரப்புங் கல்விப் பிரசங்க
    வெள்ளிடைத் தோன்றா துள்ளத் துணர்த்தவும்
    சேய்நிலை நின்று திருக்கண் சாத்தவும்
    சாயா மும்மலச் சகலரே முய்ய
    எம்முருக் கொண்டு மெம்மொடு பயின்றும் .....(10)
    மும்மலக் கிழங்கை முதலொடு மகழ்ந்து
    சிற்பர முணர்த்துஞ் சற்குரு ராய
    பளிங்கினிற் குயின்ற பனிநிலா முற்றத்து
    விளங்கிழை மடந்தையர் விளையாட் டயர்தரக்
    கொங்குவார் குழலுங் குவளைவாள் விழியும் .....(15)
    பங்கய முகமும் பத்திபாய்ந் தொளிர்தலிற்
    சைவலம் படர்ந்து தடங்கய லுகளும்
    செய்யபூங் கமலச் செழுமல ரோடையென்
    றாடவர் சிற்சிலர் நாடினர் காணூஉ
    வம்மின் வம்மின் மடந்தையர் நீவிர்மற் .....(20)
    றம்மெ லோதி யரம்பைய ராதலின்
    நீர்நிலை நிற்றிரா னீரவர் தங்களுள்
    யார்கொல் யார்கொ லிசைமி னிசைமினென்
    றிறும்பூ தெய்தி யிரந்தன ரிசைப்ப
    மறுமொழி கொடாது குறுநகை முகிழ்த்தாங் .....(25)
    கையுற வகற்று மணிமதிட் கமலை
    நன்னகர் புரக்கு ஞான தேசிக
    ஆசிலா வண்புக ழணிநிலா வெறிக்கும்
    மாசி லாமணி ஞானசம் பந்த
    என்பொருட் டாயினு மின்பொருட் டன்றிது .....(30)
    நின்பொருட் டொருபொரு ணிகழ்த்துவன் கேண்மோ
    வறிஞ னோம்பிய செறுவொன் றேய்ப்பப்
    பருவ நோக்காப் பவந்தொறும் பவந்தொறும்
    இருவினைப் போகமு மெற்கொண் டார்த்துபு
    மற்றென் னுருக்கொடு முற்றனை யாலினித் .....(35)
    தாகமின் றாகலிற் பாகமின் றெனக்கென
    அருளா தொழியினும் பரிபவ நினக்கே
    சேய்முகம் பாராள் சினந்தன ளேகினும்
    போயெடுத் தாற்றுமத் தாய்மீட் டன்றே
    ஆதலி னெனைப்போ லடிக்கடி தோன்றலை .....(40)
    ஈதியா லின்னரு ளின்னண மெனக்கே
    சமையந் தீர்ந்த தனிப்பொரு டெரித்தற்
    கமையந் தேர்கலை யருளுதி யாயினும்
    எண்ணீ ராண்டைக் கிலக்கமிட் டிருந்த
    அண்ணலங் குமரற் காருயிர் தோற்ற
    கடாவிடை யூர்திபாற் கண்டும்
    அடாதென மொழிகுந ரார்கொன்மற் றுனையே.
    20

    நேரிசை வெண்பா
    ஆரூரே யூர்பே ரருண்மாசி லாமணியென்
    றோரூர்பே ரில்லாற் குரைத்தேற்குப் - பாரேறப்
    பொய்யென்றான் மெய்யென்றான் பொய்யான பொய்யுடலை
    மெய்யென்றான் பொய்யென்றான் மீண்டு.
    21

    கட்டளைக் கலித்துறை
    மீளா மணிமந் திரமருந்


    தாற்சென்ம வெவ்விடநோய்
    வாளா மணியொன்றி னான்மீண்ட
    வாவம் மணிபிறர்கொண்
    டாளா மணியெமை யாட்கொள்சிந்
    தாமணி யைந்தவித்தோர்
    சூளா மணிமெய்ச் சுடர்மாசி
    லாமணி சூழ்ந்திடினே.
    22

    நேரிசை யாசிரியப்பா
    சூழ்போய் நிவந்த வாழ்கட லுலகத்
    தின்னருட் டிறத்தா லிடைமரு தமர்ந்த
    பொன்னவிர் கடுக்கைப் புரிசடைப் புங்கவன்
    அமையாக் காத லிமையவல் லிக்கு
    வழிபடன் முறைமை விழுமிதி னுணர்த்தத் .....(5)
    தானே தன்னைப் பூசனை புரிந்தென
    அருத்தியோ டெம்மைநம் முருத்திர கணங்கள்
    தெரித்துமற் றிவ்வா றருச்சனை புரிதிரென்
    றங்கையற் கண்ணி பங்கில்வீற் றிருந்த
    செக்கர் வார்சடைச் சொக்கநா யகனை .....(10)
    ஈரெண் டிறத்துப சாரமும் வாய்ப்பப்
    பூசனை புரியுந் தேசிக ராய
    மழைக்குலந் தழைப்பத் தழைத்ததீம் பலவின்
    வேரிடைப் பழுத்துப் பாரினுட் கிடந்த
    முட்புறக் கனிகள் விட்புறக் காண்டலும் .....(15)
    சிறுகண் மந்தி குறிவழிச் சென்று
    கீண்டுபொற் சுளைபல தோண்டுவ தம்ம
    முற்பக லொருவர் பொற்குட நிரம்பப்
    புதைத்தனர் வைத்த நிதிக்குழா மனைத்தும்
    வஞ்சகம் பழகு மஞ்சனக் கள்வர் .....(20)
    கண்டுகண் டெடுக்குங் காட்சித் தன்ன
    தண்டலை வளைஇத் தடமதி லுடுத்த
    தேசுலாங் கமலைத் திருநகர் புரக்கும்
    மாசி லாமணி ஞானசம் பந்த
    வாக்கு மனனும் யாக்கையு மொன்றாச் .....(25)
    சொற்றரு கரண மற்றிவை மூன்றும்
    நின்புகழ் நவிற்றியு நினைத்துநின் றுணைத்தாள்
    அன்புட னிறைஞ்சியு மின்பமுற் றனவால்
    அவகர ணங்களே யல்லமற் றம்ம
    சிவகர ணங்களாய்ந் திரிந்தன வன்றே, அதனாற் .....(30)
    றிரிகர ணங்களெள் றுரைசெயு மப்பெயர்
    ஒருபொருட் கிளவியெல் லோர்க்கும்
    இருபொருட் கிளவியா யிருந்ததின் றெனக்கே.
    23

    நேரிசை வெண்பா
    எற்கமலஞ் செய்யு மெழின்மாசி லாமணிதன்
    பொற்கமலஞ் சென்னி பொலிவித்தேன் - நற்கமலை
    ஊரிற் குறுகினே னோர்மாத் திரையளவென்
    பேரிற் குறுகினேன் பின்.
    24

    கட்டளைக் கலித்துறை
    பின்னம் படைத்த சமய விரோதப் பிணக்கறுத்தோர்
    சின்னம் படைத்த முனிமாசி லாமணிச் சித்தரியாம்
    இன்னம் படைத்தவ ரேது பெறாரமு திங்கெமக்கென்
    றன்னம் படைத்தவர் பெற்றார் புவன மடங்கலுமே.
    25

    நேரிசை யாசிரியப்பா
    அடங்கா வைம்புல னடங்கினர்க் கம்ம
    ஒடுங்கா வைம்புல னுளத்தினு முளவே, அவைதாம்
    செவிப்புல னறியா வகத்தொலி யொன்றே
    மெய்ப்புல னறியாத் தட்பமற் றொன்றே
    கட்புல னறியாக் கதிரொளி யொன்றே .....(5)
    நாச்சுவை யறியா நறுஞ்சுவை யொன்றே
    மூக்குயிர்த் தறியா முருகுமற் றொன்றே
    பேரா வின்பமிப் பெற்றியிற் றிளைக்கும்
    ஆரா வின்பமொன் றார்ந்தனம் யாமே, அதுவே
    கரையெறிந் தார்க்கும் பொருபுனற் படுகரிற் .....(10)
    பணிலமீன் றளித்த மணிநிலாப் போர்ப்பத்
    தருணவெள் ளெகினந் தன்னகத் தடங்க
    அருண முண்டக மகவிதழ் முகிழ்ப்பது
    தெண்டிரை யுடுத்த தீம்புனன் மடந்தை
    வெண்டுகிற் படாஅம் விரித்தனள் போர்த்து .....(15)
    வள்ளவாய்க் கமல மலர்க்கையால் வளைத்துப்
    பிள்ளைவெள் ளெகினம் பிடிப்பது கடுக்கும்
    காசுலாம் பசும்பொற் கடிமதிற் கமலை
    மாசி லாமணி ஞானசம் பந்தனென்
    றருந்தவர் துதிப்பவோர் பெரும்பெயர் நிறீஇப் .....(20)
    பரமா னந்தப் பரவையுட் டோன்றிய
    இன்பவா ரமுதமவ் வமுதம்
    அன்பருக் கௌிதௌி தரிதுவிண் ணவர்க்கே.
    26

    நேரிசை வெண்பா
    விண்மணியாய்க் காண்போர் விழிக்குட் பொலிந்துணைக்
    கண்மணியாய் நின்றெவையுங் காட்டுமால் - ஒண்மணிச்சூட்
    டம்மா சுணந்த னணிமுடிமேற் கொண்டிருந்த
    இம்மாசி லாமணிமற் றின்று.
    27

    கட்டளைக் கலித்துறை 
    இன்றோர் வியப்புள தான்மாசி லாமணி யென்றிருப்ப
    தொன்றோர் மணிகண் டவர்பல ராலதற் கோர்மருங்காய்
    நின்றோர் பலபல பேதங்க ளாச்சொல்வர் நீக்கமறச்
    சென்றோர்மற் றிம்மணி செம்மணி யேயென்று செப்புவரே.
    28

    நேரிசை யாசிரியப்பா 
    ஏழுயர் மும்மதச் சூழிமால் யானை
    தடம்புனல் குடைந்து படிந்தெழுந் துழக்கத்
    தெண்டிரை சுருட்டுங் குண்டகழ் வாவியிற்
    பங்கயத் தவிசிற் பசும்பொற் றாதளைந்
    தங்கம் வேறுபட் டரசனம் பொலிதலும் .....(5)
    ஆவலிற் படர்ந்த சேவல்கண் டயிர்த்துநம்
    பேடையன் றிதுமல ரோடையு மன்றே
    படரும்வெண் டாமரை படர்ந்ததை யன்றிது
    கடவுள ரமுதங் கடைந்தபாற் கடலே
    காந்துவெங் கனற்கட் களிறுமன் றிதுகடற் .....(10)
    சாய்ந்தெழு மந்தரத் தடங்கிரி யதுவே.
    போகுவா லுறுப்பும் புழைக்கையுந் தைவரு
    பாகரோ வாசுகி பற்றும்வா னவரே
    பொங்கிவெண் ணிலவு பொழிந்தவெண் டரளமன்
    றிங்கிது வங்கதி லெழுந்தவா ரமுதே .....(15)
    கொடிவிடு பாசடைக் குழாமன் றிங்கிதக்
    கடலிடைத் தோன்றிய கற்பகா டவியே
    சேயிதழ் விரிக்குஞ் செந்தா மரையிதன்
    றாயதன் வடிவமா யமர்ந்தமா நிதியே
    சங்கமன் றிதுவதன் றனிப்பெயர் நிதியே .....(20)
    செங்கிடை யன்றிது சிந்தா மணியே
    ஆதலி னமதுபேட் டன்னமு மன்றிதப்
    போதிலங் குதித்த பொலங்கொம் பன்றே
    என்றுள மருளவோ ரெழினலம் பயக்கும்
    மன்றலம் பணைசூழ் மருத வேலிப் .....(25)
    பொன்மதிற் கமலை நன்னகர் புரக்கும்
    தேசிக ராய சிற்பர முதல்வ
    மாசி லாமணி ஞானசம் பந்த
    எனையாட் கொள்ளவந் தெய்தினை யாகலின்
    முனியா தொன்றிது மொழிகுவன் கேண்மதி .....(30)
    கற்றன ராயினுங் கல்லா ராயினும்
    அற்றனம் யாமென வடைந்தனர் தமையெனிற்
    காலம் பாரார் கருத்தினை யளவார்
    சீல நோக்கார் தீக்குணங் கொள்ளார்
    பரிசிலர் வேண்டிய பரிசுமற் றெல்லாம்
    வரிசையோ டளிப்பது வள்ளியோர் கடனே
    நன்னெறிப் படரா நவமலி யாயினும்
    செந்நெறிப் படர்ந்தநின் சீர்புனைந் தேத்தலிற்
    சத்திநி பாதநின் சந்நிதிப் பட்ட
    இத்திறத் தௌிதினி லெய்திய தெனக்கே, அதனாற்
    சரியையிற் றாழ்க்கலை கிரியையிற் பணிக்கலை
    யோகத் துய்க்கலை பாகமு நோக்கலை
    நாளையின் றெனவொரு வேளையு நவிற்றலை
    ஈண்டெனக் கருளுதி யிறைவ
    பூண்டுகொண்டிருப்பனின் பொன்னடித் துணையே.
    29

    நேரிசை வெண்பா
    பொன்னேயல் லாமற் பொருளோ டுடலுயிர்விற்
    றென்னே மணியொன் றெவர்கொள்வார் - கொன்னே
    குருமாசி லாமணியைக் கொள்வோர்கொள் ளாமுன்
    தருவார்மற் றிம்மூன்றுந் தான்.
    30

    கட்டளைக் கலித்துறை
    தருமணிக் கோவைத் தருண்ஞான சம்பந்தன் றண்கமலைக்
    குருமணிக் கோவை நிகர்மாசி லாமணி கோத்திடலால்
    ஒருமணிக் கோவையிம் மும்மணிக் கோவையொண் சங்குகஞ்சம்
    பொருமணிக் கோவைப் பொருளாக்கொள் ளாரிது பூண்டவரே.
    31
    தடுத்த பிறவித் தளையாம்


    விலங்கு தனைமுறித்து
    விடுத்த கருணைக் கடன்மாசி
    லாமணி மெய்ப்புகழாற்
    றொடுத்த தமிழ்மும் மணிக்கோவை
    நித்தந் துதிக்கவல்லார்
    எடுத்த சனனத்தி லெய்தாத
    பேரின்ப மெய்துவரே.
    32
    உள்ளத் தருணின் றுணர்த்தவென்


    னாவி லுறைந்த வெள்ளை
    வள்ளக் கமலத் தவண்மாசி
    லாமணி வண்புகழில்
    எள்ளத் தனையள வோர்தொடை
    யாக்கி யிசைத்தனளாற்
    கள்ளப் புலன்கொண் டுரைத்தே
    னலனிக் கவிமுற்றுமே.
    33
    விரிக்குஞ் சரியையிப் பாமாலை


    சேர்த்தது மெய்க்கிரியை
    தரிக்கும் படிக்கின்று சாற்றிய
    தேமற்றென் றண்டமிழைத்
    தெரிக்கின்ற போதருள் செய்தது
    வேசிவ யோகமுண்மை
    பரிக்கின்ற ஞானமொன் றேமாசி
    லாமணி பாலித்ததே.
    34



    நேரிசை ஆசிரியப்பா 

    தமிழ்மணங் கமழுங் கமலையம் பதிவாழ்
    ஞானசம் பந்தனை வணங்கின்
    ஈனசம் பந்த மில்லைவீ டௌிதே.

    வஞ்சித்துறை 

    மாசி லாமணித்
    தேசி காவென
    பேசு வோர்கண்முப்
    பாச மோடுமே.

    முற்றிற்று.

சித்தர் பாடல்கள் ( பிண்ணாக்கீசர் )

                பிண்ணாக்கீசர் என்னும் புண்ணாக்கு சித்தர் 




தேவி மனோன்மணியாள் திருப்பாதம் காணவென்று 
         தாவிதிரந்தேளே - ஞானம்மா 
         சரணம் சரணம் என்றே 

அஞ்ஞானமு கடந்து அறிவை மிகசெலுத்தி
        மெய்ஞ்ஞானம் கண்டுகொண்டால் - ஞானம்மா 
         விலையில்லா ரத்தினமடி 

முட்டையினுள்ளே முழுக்குஞ்சு இருப்பதுபோல் 
         சட்டையாம் தேகத்தினுள்ளே - ஞானம்மா 
          தானுயிரு நிற்பதடி 

விட்டகுறை வாராமல் மெய்ஞ்ஞானம் தேராமல் 
         தொட்டகுறை ஆனதினால் - ஞானம்மா 
          தோன்று மெயஞ் ஞானமடி   
         
தம்முள மறியாமல் சரத்தைத் தெரியாமல் 
          சம்சாரம் மெய்யென்று - ஞானம்மா 
          சாகரத்திலே உழல்வார் 

இட்டர்க்கு உபதேசம் எந்நாளும் சொல்லிடலாம் 
         துட்டர்க்கு உபதேசம் - ஞானம்மா 
         சொன்னால் வருமோசம் 

முத்தி பெறுவதற்கும் முதலாய் நினைத்தவர்க்கும் 
         நித்திரையும் விட்டு - ஞானம்மா 
         நினைவோடு இருக்கணுமே 

நினைவைக் கனவாக நீயெண்ணி ப்பார்க்கில் 
        சினமாய் வரும் எமனும் - ஞானம்மா 
         தெண்டனிட்டுப் போவானே 

யோக விளக்கொளியால் உண்மை தெரியாமல் 
          மோகமெனும் குழியில் - ஞானம்மா 
          மூழ்கியே போவார்கள் 

சாத்திரம் கற்றறியாத சாமியார் தானாகி 
         ஆத்திதேட நினைத்து - ஞானம்மா 
         அலைவார் வெகுகோடி 

பூச்சும் வெறும்பேச்சும் பூசையும் கைவீச்சும் 
          ஏச்சுக்கு இடந்தானே - ஞானம்மா 
          ஏதொன்றும் இல்லையடி 

கலத்தை அலங்கரித்துப் பெண்கள் தலைவிரித்து 
         கணக்கைத் தெரியாமல் - ஞானம்மா 
         கலங்கி அழுதாரடி

மேளங்கள் போடுவதும் வெகுபேர்கள் கூடுவதும் 
         நாளை என்னாமலல்லோ - ஞானம்மா 
         நலிந்தே அழுவாரடி

கோவணமும் இரவல் கொண்டதூலம் இரவல் 
         தேவமாதா இரவல் - ஞானம்மா 
          தெரியாதே அலைவாரே 

செத்தவரை மயானம் சேர்க்கும்வரையில் ஞானம் 
          உத்தமர் போலப் பேசி - ஞானம்மா 
          உலகில் திரிவாரடி 

காட்டில் இருந்தாலுங் கனகதவஞ் செய்தாலும் 
         காட்டில் குருவில்லாமல் - ஞானம்மா 
         கண்டறிதல் ஆகாதே 

நல்ல வெளிச்சமது ஞான வெளிச்சமது 
         இல்லாவெளிச்சமது - ஞானம்மா 
         ஈனவெளிச்ச்மடி

சம்சாரமென்றும் சாகரமாமென்றும்
         இம்சையடைவோர்கள் - ஞானம்மா 
         இருந்து பயனா வதென்ன 

காத்தடைத்து வந்ததிது கசமாலப் பாண்டமிது 
         ஊத்தை சடலமிது - ஞானம்மா 
         உப்பில்லாப் பொய்க்கூடு 

அஞ்சுபேர் கூடி அரசாளவே தேடி 
          சஞ்சாரம் செய்ய - ஞானம்மா 
           தானமைத்த பொய்க்கூடே  

தொகுப்பு : திருவடி முத்துகிருஷ்ணன்