செவ்வாய், ஜனவரி 23, 2018

பசு பராமரிப்பு ( கோ சேவை )                                                                                                               

                                இந்துக்கள் பழங்காலத்திலிருந்து வணங்கும் புனிதமான உயிர் பசு . பண்டைய புராணங்களின் படி நாம் பசுவை காமதேனு என்று தெய்வத்திற்கு சமமாக வணங்குகிறோம் பசுவிற்கு ஒரு கைப்பிடி புல் கொடுப்பது சிறப்பு என்பர்.  திருமூல நாயனாரும் தனது திருமந்திரத்தில்  பின்வருமாறு குறிப்பிடுகிறார் .

யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே. 

                                                         பசுவின் மகத்துவமும், தெய்வீகத் தன்மையும் நல்லவர்களுக்கே புரியும். உதாரணமாக ராமாயணத்தில் பரதனை விட்டு ராமர் பிரியும் போது, பரதன் வேதனை தாளாமல் புலம்புவார். உன்னை (ராமர்) பிரியும் அளவுக்கு என்ன பாவம் செய்தேன்; பசுவுக்கு உணவு வழங்காமல் இருந்தேனா; இல்லை கன்று பால் குடிக்கும் சமயத்தில் அதனை தாய்ப் பசுவிடம் இருந்து பிரித்தேனா; பசுவை அடித்துத் துன்புறுத்தினேனா?... என்றெல்லாம் கூறி வருந்துவார். அத்துனை சிறப்பு வாய்ந்தது கோ சேவை .

                                                பசு என்பது விருத்தியின் அம்சம் அதன் பொருட்டே நாம் வீடு கட்டி கிரகப் பிரவேசம் போகும் போது பசுவை வீட்டிற்கு அழைத்து வருவதை நாம் வழக்கத்தில் வைத்துள்ளோம் . இந்துக்களின் புராணங்களின் படி காமதேனுவும் , நந்தினியும் தேவலோக பசுக்கள் ஆகும். 
" திலீபன் சக்கரவர்த்தி " நந்தினி எனும் பசுவைக் காக்க தன்னையே புலிக்கு உணவாக்க முன்வந்தார் . ஆகவே பசுக்களை பாதுகாப்பது நம் கடமை , பசுக்களை பாதுகாக்க நாமும் நம்மால் இயன்றதை செய்வோம் . நல்லது . சிவமேஜெயம் .


                        சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 


சிவத்தை போற்றுவோம் !!! சித்தர்களை போற்றுவோம் !!! 


             

1 கருத்து: