சனி, ஆகஸ்ட் 22, 2015அடியேன் எழுதிய பாடல்கள் ....நாய்செய் தநல்வினை யான்செய்ய விலையோபிறவி 
நோய்தீர்ப் பவனேசங்கர ராமேஸ்வரா நின்னாலயத்துள் அந் 
நாயுறங்க என்னதவம் செய்ததோ இந்நாய்மனம்  நோகுதையா ஆல 
வாயண்ணலே அடிநாய்க் கருள் செய்யே .அருவானவ னெங்குநிறைந்து அருவுருவானவன் கற்ப 
தருவானவன் நிலையான இன்பந் தருவானவன் குருவுக்குங் 
குருவானவன் மெய்யன்பரழைக்க வுடன் வருவானவன் தானே 
உருவானவன் தன்னிகரில்லாத வனெங்கள் வாக்கீசனே .


                               சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் .


      சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக