வெள்ளி, ஆகஸ்ட் 21, 2015

சித்தர்கள் வணங்கிய வாலையை பற்றி ........ (பதிவு 2 )






   
    ஞானகுரு ஸ்ரீ பட்டினத்தார் தன்னுடைய பூரணமாலையில்   
வாலையை எண்ணாது இருந்து விட்டேனே என்று பாடுகிறார் .       

மூலத்து உதித்தெழுந்த முக்கோணச் சக்கரத்துள்
வாலைதனைப் போற்றாமல் மதிமறந்தேன் பூரணமே
 !



        புண்ணாக்குச் சித்தர் தமது பாக்களில் வாலையை மனோன்மணி என்று குறிப்பிடுகிறார் .


தேவிமனோன்மணியாள் திருப்பாதம் காணஎன்று
     தாவித்திரந்தேளே - ஞானம்மா
     சரணம் சரணம் என்றே.




சித்தர் கருவூராரும் தன்னுடைய பாடல்களில் வாலையை

பின் வருமாறு போற்றுகிறார் .

ஆதியந்தம் வாலையவ ளிருந்தவீடே
   ஆச்சர்ய மெத்த மெத்த அதுதான் பாரு 
சோதியந்த நடுவீடு பீடமாகிச் 
   சொகுசுபெற வீற்றிருந்தாள் துரைப் பெண்ணாத்தாள்  

வீதியந்த ஆறுதெரு அமர்ந்த வீதி 
    விளையாடி நின்றதிரு மாளி கண்டாய் 
பாதி மதி சூடியே யிருந்த சாமி 
    பத்துவய தாகுமிந்த வாமி தானே .


அவளுக்கு வயது பத்து என்று கருவூரார் தெளிவாக கூறுகிறார் . அவள் கருணை இல்லாமல் முக்தி நிலை பெற முடியாது . உள்ளுக்குள் நம்மை இயக்கிடும் சக்தி இந்த வாலை தான் . நாம் அவளை அன்போடு அழைத்தால் ஓடி நம் அருகே வந்து அமர்வாள் அத்துணை கருணை .
அவளை போற்றி நாமும் மெய்யான நிலை அடைவோம் .



                           ஓம் ஸ்ரீ பட்டினத்தார் திருவடிகள் போற்றி !
                           ஓம் ஸ்ரீ வில்வேஸ்வரர் திருவடிகள் போற்றி !
                           ஓம் ஸ்ரீ வாலை திருவடிகள் போற்றி !
                           ஓம் ஸ்ரீ சுப்பிரமணியர் திருவடிகள் போற்றி !
                            
சிவசோதி சங்கமித்த சித்தர் பெருமக்கள் அனைவர் பொற்பாதங்கள் போற்றி !! போற்றி !!

மகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான நிலையம் 
ஸ்ரீ பட்டினத்தார் குடில் 
6/400 வண்ணார் பேட்டை 
தாளமுத்து நகர் 
தூத்துக்குடி 2 
9944091910 
                          சிவமேஜெயம்-திருவடி முத்துகிருஷ்ணன்

    சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!  





 

                      






             

1 கருத்து: