புதன், ஜனவரி 18, 2012

திருவாசகத்தில் இருந்து


              மணிவாசக பெருமான் அருளிய
     திருவாசகத் தேனிலிருந்து சில துளிகள்
        திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் 
திருச்சதகம்


வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையை விண்ணோர் 
    பெருமானே எனக்கேட்டு வெட்ட நெஞ்சாய்ப்
பள்ளந்தாழ் உறுபுனலில் கீழ்மே லாகப் 
    பதைந்துருகும் அவர்நிற்க என்னை ஆண்டாய்க்கு
உள்ளந்தாள் நின்று உச்சி அளவும் நெஞ்சாய்
   உருகாதால் உடம்பெல்லாம் கண்ணாய் அண்ணா
வெள்ளந்தான் பாயாதால் நெஞ்சங் கல்லாம் 
   கணை இணையும் மரமாம் தீவினையினேற்கே .


தேவர்கோ வறியாத தேவதேவன் 
  செலும் பொழில்கள் பயந்து காத்து அழிக்கு மற்றை 
மூவர்கோ னாய் நின்ற முதல்வன் மூர்த்தி 
    மூதாதை மாதாளும் பாகத்து எந்தை 
யாவர்கோன் என்னையும் வந்து ஆண்டுகொண்டான் 
   யாமார்க்கும் குடியல்லோம் யாதும் அஞ்சோம் 
மேவினோம் அவனடியார் அவனடியாரோடு 
  மேன்மேலும் குடைந்தாடி ஆடுவோமே .


தரிக்கிலேன் காய வாழ்க்கை சங்கரா போற்றி ! வான
விருத்தனே போற்றி ! எங்கள் விடலையே போற்றி ! ஒப்பில் 
ஒருத்தனே போற்றி ! உம்பர் தம்பிரான் போற்றி ! தில்லை 
நிருத்தனே போற்றி ! எங்கள் நின்மலா போற்றி ! போற்றி !


போற்றி ஓம் நமச்சிவாய ! புயங்கனே மயங்குகின்றேன் 
போற்றி ஓம் நமச்சிவாய ! புகலிடம் பிறிதில்லை 
போற்றி ஓம் நமச்சிவாய ! புறமென்னைப் போக்கல் கண்டாய் 
போற்றி ஓம் நமச்சிவாய ! சயசய போற்றி ! போற்றி !


போற்றி ! இப்புவனம் நீர்தீக் காலோடு வானமானாய்
போற்றி ! எவ்வுயிர்க்கும் தோற்றமாகி நீ தோற்றமில்லாய்
போற்றி ! எல்லாவுயிர்க்கும் ஈறாய் ! ஈறின்மை யானாய் !
போற்றி ! ஐம்புலன்கள் நின்னைப் புணர்கிலாப் புன்னகையானே 


கோயில் திருப்பதிகம்   


அன்பினால் அடியேன் ஆவியோடு யாக்கை 
         ஆனந்தமாய் கசிந் துருக
என்பர மல்லா இன்னருள் தந்தாய்
        யானிதற்கு இலனொர் கைம்மாறு 
முன்புமாய் பின்பு முழுதுமாய்ப் பரந்த 
        முத்தனே முடிவிலா முதலே   
தென்பெருந் துறையாய் சிவபெருமானே 
     சீருடைச் சிவபுரத் தரசே .


தந்ததுன் தன்னை கொண்டதென் தன்னைச் 
      சங்கரா ஆர்கொலோ சதுரர் 
அந்தமொன்று இல்லா ஆனந்தம் பெற்றேன் 
      யாது நீ பெற்றது ஒன்று என்பால்
எந்தையே கோயில் கொண்ட எம்பெருமான் 
    திருப்பெருந் துறையுறை சிவனே 
எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய் 
     யானிதற்கு இலனோர் கைம்மாறே .


  இறை பணியில் 


  திருவடி முத்துகிருஷ்ணன் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக