செவ்வாய், ஜூலை 11, 2017

சித்தர் பாடல்கள் ..

          ஞானச் சித்தர்   குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள் .



இறைவனை அடைய நற்றவம் இயற்ற வேண்டும் என்பதை தெளிவு பட கூறுகிறார் குணங்குடியார் . நிறைய பாடல்களை பதிவிட முடியாத காரணத்தினால் சில பாடல்கள் மட்டுமே பதிவிடுகிறேன்  . நிறைய பாடல்களில் மகான் ஸ்ரீ பட்டினத்தார் பாடல்களை நினைவு படுத்தும் விதமாக அமைந்து இருக்கிறது .


ஓடியலைந்து மிவ்வைய முற்று முழன்றுழன்றுந் 
தேடியெடுத்த திரவியம் யாவையுஞ் செத்தபின்பு 
நாடி எடுப்பது முண்டோ மறந்து நடக்குநெஞ்சே 
வாடியிறந்தறஞ் செய்வாய் குணங்குடி வாய்த்திடுமே .

பெண்ணாசை யென்கின்றபேய் பிடித்தாடிய பேதைநெஞ்சே 
கண்ணாலதில் வருங்கன்மங்கள் யாவையுங் கண்டிலையோ 
எண்ணதா பாவங்களெண் ணாமற்செய்யுமிப் பேருடம்பு 
மண்ணாக நற்றவஞ் செய்வாய் குணங்குடி வாய்த்திடுமே .  

எஞ்சாணு யரத்திருக்கும் பனையினிறக் கியுண்ணும் 
பஞ்சாக்கர மெனும் பாரிய கள்ளினைப் பாய்ந்தெடுத்துத் 
தஞ்சாவூராளு மகராசன் பாதந் தனைப் பணிந்தால் 
கெஞ்சாக் குணங்குடி கொள்வாயிது புத்திகேள் நெஞ்சமே .

நாட்டமென்றேயிரு வுன்னிரு பாதத்தினன் னிலையின் 
ஓட்டமென்றேயிரு வொன்றான வக்கிர மோதியதின் 
ஆட்டமென்றேயிரு தோற்ற மெவையு மலிபுடைய 
நீட்டமென்றேயிரு நெஞ்சே குணங்குடி வாய்த்திடுமே .

உற்றாரிந்தென்ன பெற்றாரிருந்தென் னுனக்குதவி 
சற்றாயினுமில்லை  சொன்னேன் சொன்னேனிது சத்தியமாய்ச் 
செற்றாலும் வைத்தடி வாங்காம னிற்கிற் செயம்பெறலாங் 
கற்றார் குணங்குடி கொண்டிடுவாய் மனக் கண்மணியே .


                     குணங்குடி சித்தர் பாடல்கள் தொடரும் ..  

           சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 

சிவத்தை போற்றுவோம் !!   சித்தர்களை போற்றுவோம் !!


மகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான நிலையம் 
ஸ்ரீ பட்டினத்தார் குடில் 
6/400 வண்ணார் பேட்டை 
தாளமுத்து நகர் 
தூத்துக்குடி 2 
9944091910 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக