சனி, ஜனவரி 31, 2015




மகான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரம ஹம்சரின் ஆன்மீக விளக்கம் 

     




             ஒரு சமயம் பக்தர் ஒருவர் கடவுளுக்கு உருவம் உண்டா இல்லையா என்று கேட்டார் .


                       அதற்கு பரமஹம்சர் அந்த பக்தரிடம் ,


           இறைவன் உருவம் உள்ளவர் . அதே போல் உருவம் இல்லாதவர் இரண்டும் அவர்தான் . அதாவது நீரும் பனிக்கட்டியும் போல என்றார் . பக்தர் தனக்கு புரியவில்லை விளக்கமாக கூறும் படி கேட்டுக் கொண்டார்  .

     கடவுள் கண்ணுக்கு எட்டாத எங்கும் வியாபித்து இருக்கும் பெரும்  கடல் போன்றவன் . அந்த கடலும் சூழலுக்கு ஏற்ப சில இடங்களில் அதீத குளிர்ச்சியின் காரணமாக பனிக்கட்டிகளாக  உறைந்து வெவ்வேறு வடிவங்களில் காணப்படும் . பின் வெப்பத்தின் காரணமாக உருகி கடலோடு ஒன்றி விடும் . பனிக்கட்டியும் கடல் தான் நீரும் கடல் தான் . அதேபோல இறைவனும் பக்தியின் குளிர்ச்சியால் பல்வேறு வடிவங்களில் காட்சி கொடுக்கிறான் . ஞானம் என்ற வெம்மை வெளிப்படும் போது அவனும் வடிவம் இல்லாதவனாக இருக்கிறான் . சாதாரண நிலையில் இருக்கும் பக்தனுக்கு உருவம் தேவைப்படுகிறது எல்லாம் கடந்த ஞானிகளுக்கு அது தேவை இல்லை என்று விளக்கம் கொடுத்தார் . 



                                      -  சிவமேஜெயம் திருவடி முத்துகிருஷ்ணன் 



    சிவத்தை போற்றுவோம் !!!  சித்தர்களை போற்றுவோம் !!!


     


   


           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக