வெள்ளி, மே 17, 2013

ஐயா ஞானகுரு பட்டினத்தார் ( pattinathar )




கட்டிஅணைத்திடும் பெண்டிரு மக்களுங் காலத்தச்சன் 
வெட்டிமுறிக்கும் மரம்போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால்
கொட்டிமுழக்கி அழுவார் மயானங் குறுகியப்பால்
எட்டியடி வைப்பரோ இறைவாகச்சி யேகம்பனே.


                                                                               ஐயா ஞானகுரு பட்டினத்தார் 

3 கருத்துகள்:

  1. கட்டி அணைத்திடும் மனைவியும் பிள்ளைகளும் காலத்தச்சன் எனும் எமன் , வெட்டி வீழ்த்திய மரம் போல் நமது உடலை சாய்த்து விட்டால் , என்ன செய்வார்கள் பறைகளை கொட்டி அழுவார்கள் மயானம் கொண்டு வந்து ஈமக்கடன்கள் செய்வார்கள் . அம்மயானத்தைத் தாண்டி (நம்முடன்) ஓரடி எடுத்து வைப்பாரோ ! என் இறைவனே காஞ்சியிலே வாழும் ஏகம்ப நாதனே .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் விளக்கத்திற்கு நன்றி ஐயா , அருமையான விளக்கம்

      நீக்கு
  2. கட்டி அணைத்திடும் மனைவியும் பிள்ளைகளும் காலத்தச்சன் எனும் எமன் , வெட்டி வீழ்த்திய மரம் போல் நமது உடலை சாய்த்து விட்டால் , என்ன செய்வார்கள் பறைகளை கொட்டி அழுவார்கள் மயானம் கொண்டு வந்து ஈமக்கடன்கள் செய்வார்கள் . அம்மயானத்தைத் தாண்டி (நம்முடன்) ஓரடி எடுத்து வைப்பாரோ ! என் இறைவனே காஞ்சியிலே வாழும் ஏகம்ப நாதனே .

    பதிலளிநீக்கு