சனி, அக்டோபர் 08, 2011

சிவபெருமான் 108 போற்றிகள்


சிவபெருமான் 108 போற்றிகள் 




    திருச்சிற்றம்பலம் 

1. ஓம் அரசே போற்றி
2. ஓம் அமுதே போற்றி
3. ஓம் அறிவே போற்றி
4. ஓம் அணுவே போற்றி
5. ஓம் அத்தா போற்றி
6. ஓம் அரனே போற்றி
7. ஓம் அருவமும் உருவமும் ஆனாய் போற்றி
8. ஓம் அழிவிலா ஆனந்தவாரி போற்றி
9. ஓம் அருளிட வேண்டும் அம்மான் போற்றி
10. ஓம் அண்ணாமலையெம் அண்ணா போற்றி

11. ஓம் ஆடகமதுரை அரசே போற்றி
12. ஓம் ஆவா என்றனக் கருளாய் போற்றி
13. ஓம் ஆழா மேயருள் அரசே போற்றி
14. ஓம் ஆருரமர்ந்த அரசே போற்றி
15. ஓம் ஆளானவர்கட்கு அன்பா போற்றி
16. ஓம் ஆரா அமுதே அருளே போற்றி
17. ஓம் இடரைக் களையும் எந்தாய் போற்றி
18. ஓம் இருள்கெட அருளும் இறைவா போற்றி
19. ஓம் இலங்கு சுடரெம் ஈசா போற்றி
20. ஓம் இரும்புலன் புலர இசைந்தனை போற்றி

21. ஓம் ஈசா போற்றி
22. ஓம் ஈசனடி போற்றி
23. ஓம் ஈங்கோய்மலையெம் எந்தாய் போற்றி
24. ஓம் உடையாய் போற்றி
25. ஓம் உணர்வே போற்றி
26. ஓம் உரையுணர்விறந்த ஒருவ போற்றி
27. ஓம் எந்தையடி போற்றி
28. ஓம் எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி
29. ஓம் எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி
30. ஓம் ஏனோர்க் கெளிய இறைவா போற்றி

31. ஓம் ஏகம்பத்துறை யெற்தாய் போற்றி
32. ஓம் ஏழைக் குருளைக் கருளினை போற்றி
33. ஓம் ஐயா போற்றி
34. ஓம் ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி
35. ஓம் காவாய் கனகக் குன்றே போற்றி
36. ஓம் கல்நார் உரித்த கனியே போற்றி
37. ஓம் கதியே போற்றி
38. ஓம் கனியே போற்றி
39. ஓம் கடையேன் அடிமை கண்டாய் போற்றி
40. ஓம் கருமுகிலாகிய கண்ணே போற்றி

41. ஓம் கனவிலுந் தேவர்க்கரியாய் போற்றி
42. ஓம் கண்ணார் அமுதக் கடலே போற்றி
43. ஓம் கடம்பூர் மேவிய விடங்கா போற்றி
44. ஓம் கலைஆர் அரிகேசரியாய் போற்றி
45. ஓம் கலைத்தலை மேவிய கண்ணே போற்றி
46. ஓம் கழுநீர் மாலைக் கடவுள் போற்றி
47. ஓம் கருங்குருவிக் கன்றருளினை போற்றி
48. ஓம் குழைத்த சொன்மாலை கொண்டருள் போற்றி
49. ஓம் கூடல் இலங்கு குருமணி போற்றி
50. ஓம் குற்றாலத்தெங் கூத்தா போற்றி



51. ஓம் கோகழி மேவிய கோவே போற்றி
52. ஓம் மூவா நான்மறை முதல்வா போற்றி
53. ஓம் படைப்பாய் போற்றி
54. ஓம் துடைப்பாய் போற்றி
55. ஓம் தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
56. ஓம் சேவாய் வெல்கொடிச் சிவனே போற்றி
57. ஓம் மின்னாருருவ விகிர்தா போற்றி
58. ஓம் வேதியனே போற்றி
59. ஓம் விமலா போற்றி
60. ஓம் சைவா போற்றி

61. ஓம் தலைவா போற்றி
62. ஓம் குறியே போற்றி
63. ஓம் குணமே போற்றி
64. ஓம் நெறியே போற்றி
65. ஓம் நினைவே போற்றி
66. ஓம் தோழா போற்றி
67. ஓம் துணையே போற்றி
68. ஓம் வாழ்வே போற்றி
69. ஓம் என் வைப்பே போற்றி
70. ஓம் முத்தா போற்றி

71. ஓம் முதலே போற்றி
72. ஓம் நித்தா போற்றி
73. ஓம் நிமலா போற்றி
74. ஓம் பத்தா போற்றி
75. ஓம் பவனே போற்றி
76. ஓம் பெரியோய் போற்றி
77. ஓம் பிரானே போற்றி
78. ஓம் அரியாய் போற்றி
79. ஓம் அமலா போற்றி
80. ஓம் சிறவே போற்றி

81. ஓம் சிவமே போற்றி
82. ஓம் மஞ்சா போற்றி
83. ஓம் மணாளா போற்றி
84. ஓம் முழுவதும் நிறைந்த முதல்வா போற்றி
85. ஓம் தேசனடி போற்றி
86. ஓம் நேயத்தே நின்ற நிமலனடி போற்றி
87. ஓம் வானோர்க்கரிய மருந்தே போற்றி
88. ஓம் விரிகடல் உலகின் விளைவே போற்றி
89. ஓம் கருமுகிலாகிய கண்ணே போற்றி
90. ஓம் மன்னிய திருவருள் மலையே போற்றி


91. ஓம் தொழுகை துன்பந் துடைப்பாய் போற்றி
92. ஓம் மானோர் நோக்கிமணாளா போற்றி
93. ஓம் வானசுத்தமர் தாயே போற்றி
94. ஓம் பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
95. ஓம் சீரார் திருவையாறா போற்றி
96. ஓம் பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி
97. ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி
98. ஓம் மலைநாடுடைய மன்னே போற்றி
99. ஓம் பஞ்சேவடியான் பங்கா போற்றி

100. ஓம் பேராயிரமுடைப் பெம்மான் போற்றி
101. ஓம் தோளாமுத்தச் சுடரே போற்றி
102. ஓம் திருக்கழுக் குன்றிற் செல்வா போற்றி
103. ஓம் சந்தனச் சாந்தின சுந்தர போற்றி
104. ஓம் சீரார்பெருந்துறை நம்தேவனடி போற்றி
105. ஓம் செழுமலர்ச் சிவபுரத்தரசே போற்றி
106. ஓம் பரம் பரஞ்சோதிப் பரண போற்றி
107. ஓம் சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
108. ஓம் பராய்த்துறை மேவிய பரனே போற்றி



போற்றி போற்றி ஜய ஜய போற்றி
திருச்சிற்றம்பலம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக