பிறர் ஏற்றிய தீபத்தில் நாம் தீபம் ஏற்றலாமா
பிறர் ஏற்றிய தீபம் என்பதால் அதற்கு ஏதாவது தோஷம் ஏற்படாது. அதுபோல, நாம் தீபம் ஏற்றினால் நமக்கு கிடைக்க வேண்டிய பலன் பிறருக்கும் போய்விடாது.
சகல சாஸ்திரங்களும் வித்தைகளும் சிவபெருமானிடமிருந்து தோன்றியவை. அவற்றில் சில யோக சாஸ்திரம், பக்தி சாஸ்திரம், தந்திரம், ஆயுர் வேதம், இலக்கணம், தனுர் வேதம், கை ரேகை, விஞ்ஞானம். மேலும் 112 யோகாச்சார்யார்களுக்கு அவர் யோக வித்தைகள் கற்பித்திருக்கிறார்.
சிவபெருமான் வெளிநாடுகளில் பல்வேறு பெயர்களில் வணங்கப்படுகிறார். நேபாளம் - காட்மாண்டுவில் பசுபதி நாதனாக வழிபடுகிறார்கள். பாலி தீவில் புத்தரின் சகோதரராக அழைக்கப்படுகிறார். லாவோசில் விவசாயிகள் நிலத்தை உழுவதற்கு முன், சிவபெருமானை வழிபடுகிறார்கள். ஜப்பானில் ஆயின் எனும் நகரத்தில் சிவலிங்கத்துக்கு அர்ச்சனை நடைபெறுகிறது. திபெத்தில் ஈசனின் பழம் பெரும் ஆலயம் உள்ளது.
சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் நால்வர் என அழைக்கப்படுகின்றனர். நால்வரும் சிதம்பரத்தில் நடராஜனைக் காண நான்கு வழியாக திருக்கோயிலுக்குள் வந்தார்கள்.
நாவுக்கரசர் தாச மார்க்கத்தைப் பின்பற்றியவர். தாச மார்க்கம் என்பது ஆண்டான் அடிமை உறவு. ஆகவே வலது புறமாக (கிழக்கு) வந்து ஏவல் கேட்கும் நோக்கத்துடன் இறைவனைக் கண்டார்.
பூஜைவேளையில் கோயிலில் கண்டாமணி மிக சப்தமாக ஒலிக்கும். பிற சத்தங்கள் இதில் அழுந்திப் போகும். இறைவன், உலக வாழ்வில் ஈடுபட்டிருக்கும் நம்மை தன்னிடம் அழைக்கும் ஒலிக் குறிப்பாக மணியோசை அமைந்துள்ளது.

சிவன் கோயில் சந்நிதியில் தீபம் எரிந்து கொண்டிருந்தது. அணையும் நிலையில் இருந்த அந்த தீபத்தை ஒரு எலி அந்த விளக்கில் இருந்த நெய்யைக் குடிக்க வாயை வைத்தது. எதிர்பாராமல் எலியின் வாய்பட்டு அணைய இருந்த திரியின் சுடர், தூண்டப்பட்டு பிரகாசமாக எரிந்தது. இந்நிகழ்ச்சி பெரிய புண்ணியச் செயலாக அமைந்து, மறுபிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறந்தது.
சுவாமி சந்நிதியில் விளக்கேற்றுவது தான் முக்கியமே தவிர மற்ற சந்தேகம் எதுவும் வேண்டாம்.
அரச மரத்தின் பெருமை
மும்மூர்த்திகளது வடிவமாகக் கருதப்படும் அரச மரத்தை காலை வேளையில் வலம் வந்தால் சகல நலன்களும் பெறலாம். கீதையில் கண்ணன், மரங்களில் நான் அரச மரம்! என்கிறான். அதனால் அரச மரம் சர்வ தேவதா ஸ்வரூபம்.இது திருவாவடுதுறை, திருநல்லம், திருப்பரிதி நிலையம் ஆகிய சிவத் தலங்களிலும், திருக்கச்சி திருப்புட்குழி, திருப்புல்லாணி போன்ற திருமால் தலங்களிலும் தல விருட்சமாக விளங்குகிறது.
அரச மரத்துக்கு வடமொழியில் அஸ்வத்த விருட்சம் என்று பெயர். அரச மரத்தை வழிபடுவோரின் பாவம் மறு நாளுக்குள் அழிந்து விடும். அரச மர நிழல் போதம் என்ற தத்துவ ஞானத்தைத் தரும். அரச மரத்தடியில்தான் சித்தார்த்தர், புத்தர் ஆனார். மரமும் போதி மரம் ஆயிற்று.
அரச மர நிழல் படும் நீர் நிலைகளில் வியாழன், அமாவாசை நாட்களில் நீராடுவது பிரயாகை - திரிவேணி சங்கமத்தில் நீராடுவதற்கு சமம்! திங்கட்கிழமை அமாவாசை வந்தால் அன்று அமாசோமவார விரதம் என்பர். அன்று அரச மர பிரதட்சிணம் செய்வது மிகவும் புண்ணியம் தரும்.
வைகாசி மாதம் அரச மரத்தடியில் நாகர் சிலை பிரதிஷ்டை செய்வது சிறப்பு. தென்காசி அடுத்த ஆயக்குடி ஸ்ரீபாலசுப்ரமணியக் கோயிலில் அரச இலைகளில் விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது. அரச இலைகளின் சத்து காற்றில் பரவி, யோகிகளின் மன ஒருமைப்பாட்டுக்கு துணை செய்யும்.
உலகெல்லாம் சிவ மயம்
துஷ்டர்களை அழித்ததால், அவர் ருத்திரன், சிவனின் வாகனம் ரிஷபம். தர்ம சாஸ்திரங்களில் தர்மத்தின் பெயர் ரிஷபம். தர்ம, அர்த்த, காம, மோட்சங்கள் ரிஷபத்தின் நான்கு பாதங்களாகச் சொல்லப்படுகிறது. சிவபுராணத்தில் சர்வ, பவ, ருத்ர, உக்ர, பீம, பசுபதி, ஈசான, மகாதேவன் என்று அஷ்ட மூர்த்திகளாக சிவபெருமான் போற்றப்படுகிறார்.
மங்கோலியர்கள் சிவபெருமானை மிகவும் பக்தி சிரத்தையுடன் வழிபடுகிறார்கள். அது மட்டுமல்ல, அவர்கள் கங்கை நீரை அமிர்தமாகக் கருதுகிறார்கள். ஆப்கானிஸ்தானில் கலாம் நகரில் ஜடாசங்கரன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மேற்கு ஆகிய நாடுகளின் சில பகுதிகளில் அதிக அளவில் கிடைத்த சிவலிங்கங்கள், சங்க் ஏ அசபத் என்ற திருநாமத்துடன் பூஜிக்கப்படுகின்றன. கம்போடியா நாட்டில் பல நகரங்கள் சிவ பெருமானின் நாமங்களுடன் அழைக்கப்படுகின்றன. ஜாவாவில் குஞ்ரகுஞ்ச் பகுதியில் சிவபெருமானின் ஆலயங்கள் உள்ளன.
நால்வர் வந்த வழி
சம்பந்தர் இறைவனையடைய சத்புத்திர மார்க்கத்தைக் கையாண்டவர். அதனால் தென்வாயில் வழியாக நேரே வந்து இறைவனைக் கண்டுகளித்தார்.
சுந்தரர் நட்பு முறையில் இறைவனை வழிபட்டவர். அதனால் பின்புறமாக (வடக்கு) வந்து வேண்டியதை உரிமையுடன் பெற்றவர்.
மாணிக்கவாசகர் சன்மார்க்க முறையைக் கடைப்பிடித்தவர். (குரு சீட உறவு). ஆதலால் அருட்சக்தி (மேற்கு) பக்கம் வந்து இறைவனைக் கண்டார்.
மணியோசை கேட்கட்டும்
புறவுலகை மறந்து வழிபாட்டில் மனம் ஒருமித்த உணர்வுடன் ஈடுபட மணியோசை வழிசெய்கிறது. இறைவன் நாத தத்துவமாகத் திகழ்கிறார் என்பதை திருநாவுக்கரசர் ஓசை ஒலியெலாம் ஆனாய் போற்றி என்று சிவபெருமானை போற்றுவதன் மூலம் அறியலாம்.
மணியோசை எழுப்பும் இடத்தில் தீய சக்திகள் அண்டாது என்பது ஐதீகம். வழிபாட்டின் போது வீட்டிலும் மணி ஒலிப்பது நன்மை தரும்.
நன்றி தினமலர்
வணக்கம். மிகவும் பயனுள்ள தொகுப்பு. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு