செவ்வாய், ஜூன் 24, 2014

அடியேன் எழுதிய பாடல்கள் ..................

                                              சிவமயம் 
                                        சிவமேஜெயம் 
குருவே சரணம்  பட்டினத்தாரே சரணம்  குருவே துணை 




 
               இந்த பாடல் தூத்துக்குடி மாநகரில் அருளாட்சி நடத்தி வரும் என் அப்பன் சங்கர ராமேஸ்வரர் . ஞானத்தை அருள தனி சந்நிதி கொண்டிருக்கும் வில்வேஸ்வரனுக்கும் அடியேன் எழுதிய பாடல்கள் . என் அப்பன் வில்வேஸ்வரர் அடியேன் கேட்டதை எல்லாம் அருளிச் செய்தார் . 



சங்கடங்கடல் போற்சூழ்ந்து வரின்மனமேதிரு மந்திரநகருறை 
சங்கரராமேஸ் வரனைசரண டைந்துபணி செய்து கிடப்பதே 
நங்கடனென்று சிவசிந்தனையை சிந்தையில் ஏற்றினால் 
பங்கயத்தோனெழுத் தென்னநாளுங் கோளுமென்ன நமக்கேதுமிலையே.


இரைக்கே அல்லும்பக லும்திரிந் தலைந்து
இறையை மறந்து மண்பொன் பெண்ணிற்கு வாழ்ந்து 
மறைந்து போகவிருக்கு மீனனை திருமந்திர நக 
ருறைந்தருள் செய்யும் வில்வேஸ்வரனே காத்தருள்வாய் .


உற்றவனாய் எனக்கே யிருந்துவழிநடத்தி நினதருள் 
பெற்றவனாய் மாற்றிநின் பற்றைத் தவிர வேறொன்றும் 
அற்றவனாய் உன்னடியார்க்கு தொண்டு செய்யும் பணியை 
கொற்றவனே நாயேனுக்கருள் செய்யே .    

                                     -  திருவடி முத்துகிருஷ்ணன்

                                  சிவமேஜெயம் !!

சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !! 




  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக