ஞாயிறு, டிசம்பர் 15, 2013

திருவெம்பாவை தினம் ஒரு பாடல் .


மணிவாசக பெருமான் அருளிய 

   திருவாசகத்திலிருந்து 

பாடல்-5
மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ளப் பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய் படிறீ கடைதிவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனே என்று
ஓலமிடினும் உணராய் உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்.

திருமாலும் நான்முகனும்  தேடியும் அறியமுடியாத அடியையும் முடியையும் உடைய மலைபோன்ற நெடிய மேனியை உடைய பெருமானை நாம் கண்டுவிடலாம் என்று பொய்பேசித் திரிந்தவளே ,நீபேசும் சொற்கள் தேனும் பாலும் கலந்தது போன்று இனிமையுடையதாகத்தான் இருந்தன. ஆனாலும் இன்னும் கதவைத்திறவாது உறங்கிக் கொண்டிருக்கிறாய்.உடனே வந்து கதவைத்திற..
இந்த உலகத்தவரும் விண்ணுலகத்தில் உள்ளவர்களும் ஏனைய பிற உலகங்களில் உள்ளவர்களும் கடும் தவம் மேற்கொண்டும் அவர்களாலும் அறிய இயலாதவன்.ஆனால் நமக்கு எளிவந்த பிரானாக நம்மை ஆட்கொண்டு சிறப்பிக்கிறான்.அவன் நமது குற்றங்களைப் பொறுத்து அதனைக் குணமாகமாற்றி அருள்செய்பவன்.இத்தகைய பெருமானின் பெருமைகளை  வியந்து சிவனே சிவனே என்று ஓலமிடுகின்ற ஓசை உன் காதில் வில்லையா.குரல் கேட்டும் உறங்கிக் கொண்டு இருக்கிறாய்.எழுந்து வா பெண்ணே என்று உறங்கிக் கொண்டு இருக்கும் பெண்ணை எழுப்புவதாக இப்பாடல் அமைந்துள்ளது. 




                                                                                  இறை பணியில் 

                                                                                      பெ.கோமதி 

                                                    சிவமேஜெயம் !!

        சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக