ஞாயிறு, டிசம்பர் 29, 2013


திருவெம்பாவை தினம் ஒரு பாடல் .


மணிவாசகப் பெருமான் அருளிய 

   திருவாசகத்திலிருந்து 
பாடல்-14

காதார் குழையாட பைம்புாண் கனலாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதித் திறம் பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம் பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்

காதில் அணிந்திருக்கும் குழைகள் ஆடவும் உடம்பில் அணிந்திருக்கும் பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்கள் ஆடவும் ,கூந்தலில் அணிந்துள்ளமாலைகள் ஆடவும் அம்மாலையைச் சுற்றி வண்டுக்கூட்டங்கள் ஆடவும் ,ஆக குளிர்ந்த நீரில் ஆடி தில்லைச்சிற்றம்பலத்தைப்  புகழ்ந்து பாடிவேதத்தின் உட்பொருளாக விளங்குபவனைப்பாடி , அப்பொருளாக நிற்கும் அவனது பெருமைகளைப் பாடி ,ஒளிமயமானவனின் ஆற்றலைப்பாடி,
அவன் அணிந்துள்ள கொன்றைமலர் மாலையைப் பாடி ,அவனது அநாதி முறைப் பழமையைப் பாடி முடிவாக நிற்கும் தன்மையையும் பாடிபிற உயிர்களிடத்தில் இருந்து நம்மை வேறுபடுத்தி மீட்டு எடுத்த வளையல்கள் அணிந்த அம்மையின் திருவடிச் சிறப்பினைப் பாடி நீராடுவோமாக.என்று பாடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

                                                                                   இறை பணியில் 

                                                                                         பெ.கோமதி 

                                                    சிவமேஜெயம் !!





        சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக