சித்தர் பாடல்களில் இருந்து .............................
பாம்பாட்டி சித்தர்

நாறுமீனைப் பலதரம் நல்ல தண்ணீரால்
நாளுங் கழுவினு மத னாற்றம் போமோ
ஊறுமுடல் பலநதி பாடிக் கொண்டதால்
கொண்டமல நீங்கா தென்றா டாய் பாம்பே.
நாறுகின்ற மீனை சுத்தமான நீரினால் எவ்வளவு நேரம் கழுவினாலும் அதன் மணம் நல்லமணமாகாது . பாவம் பல செய்துவிட்டு பல புண்ணிய நதிகளில் எதனை நாள் நீராடினாலும் பாவத்திற்கான பரிகாரம் நிச்சயம் உண்டு அது நம்மை விட்டு நீங்காது என்று ஆடு பாம்பே என்று நமக்கு சொல்கிறார் .
இருவர் மண்சேர்த்திட வொருவர் பண்ண
ஈரைந்து மாதமாய் வைத்த சூளை
அருமையா யிருப்பினு மந்தச்சூளை
அரைக்காசுக் காகா தென் றாடாய்ப் பாம்பே’
ஆணும் பெண்ணும் கூடி கரு தரித்து பத்து மாதம் அவள் அதை பாதுகாத்து பக்குவம் பார்த்து முடிவில் பிறக்கும் அந்த பிறப்பும் நிலைக்காது என்று மிக அழகாக உதாரணம் காட்டுகிறார் .இரண்டு பேர் மண் சேர்த்துப் பிசைய ஒருவர் பானை செய்து அவரே பத்து மாதம் சூளையில் வைத்துப் பக்குவமாய் இறக்கி வைத்தாலும் அந்தப் பானையானது இறுதியில் அரைக்காசுக்குக்கூட உதவாது என்று எவ்வளவு அழகாக இந்த உடல் நிலையாமையைக் கூறுகின்றார் பாம்பாட்டிச் சித்தர்.
இறை பணியில்
திருவடி முத்துகிருஷ்ணன்
சிவத்தை போற்றுவோம் !!! சித்தர்களை போற்றுவோம் !!!
சிவமேஜெயம் !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக