சித்தர் பாடல்களிலிருந்து ................
திருமூலர் அருளிய திருமந்திரத்திலிருந்து ...

சில மந்திரங்கள்
பொன்னால் புரிந்திட்ட பொற்சடை என்னப்
பின்னால் பிறக்க இருந்தவர் பேர் நந்தி
என்னால் தொழப்படும் எம்மிறை மற்றவன்
தன்னால் தொழப்படு வாரில்லை தானே .
மின்னுகின்ற தங்கத்தால் பின்னியது போல் மின்னிடும் செஞ்சடை பின்புறம் ஒளி வீச எம் உள்ளத்துள் வீற்றிருக்கும் பரம்பொருளின்
திருநாமம் (பிறப்பும் இறப்பும் இல்லாதான் ) நந்தி என்பதாகும் . எம்மால் இடைவிடாது தொழுதிடும் ஈசனும் அவனே . உலகனைத்தும் புகழ்ந்து போற்றும் எம் இறைவனால் வணங்கப்படுபவர் எவ்வுலத்தில் தேடினாலும் யாவரும் இல்லை .
பின்னைநின்று என்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல்தவம் செய்கிலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே
முற்பிறப்பில் சிவபெருமானை போற்றாமல் நற்றவம் இயற்றாமல் இருப்பவர்கள் பிறவி பிணியை ஒழிக்காது பிறவி சுழற்றியில் சிக்கி தவிப்பார்கள் . நான் முற்பிறப்பின் செய்த தவப்பயனால் அவனுடைய பெருமையை செந்தமிழிலில் விளக்கும் அருளை எனக்களித்தான் இறைவன் .
அவனை ஒழிய அமரரும் இல்லை
அவன் அன்றிச் செய்யும் அரும் தவம் இல்லை
அவன் அன்றி மூவரால் ஆவது ஒன்று இல்லை
அவன் அன்றி ஊர் புகுமாறு அறியேனே.
அமர நிலை எனப்படும் இறவா நிலையை அடைந்தவர் அவனை தவிர யாறொருவருமில்லை . தேவரும் அவனைத்தொழுதே அமரத்துவம் பெற்றார்கள் அவனில்லாமல் தேவர்களும் இல்லை . அவன் அருளில்லாமல் செய்கின்ற தவத்திற்கும் நற்பேறு இல்லை .முத்தொழில் புரிந்திடும் மூவர்க்கும் அவன் அருள் இல்லாமல் வேலை ஒன்றுமில்லை . சிவனைத் தொழாமல் பேரின்ப பெரு வீடு அடைவதற்கும் யாவராலும் ஆவதில்லை .
என்றும் இறை பணியில்
திருவடி முத்துகிருஷ்ணன்
சிவமேஜெயம் !!!
சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!
அய்யா வணக்கம்
பதிலளிநீக்குஇறைவன் திருவடிகளே கண்கள் என்ற ரகசியத்தை
தங்க ஜோதி ஞான சபை குரு சிவசெல்வராஜ் அய்யா வள்ளல் பெருமான் அருளால்
வெளிப்படுத்தி உள்ளார்.
நீங்கள் குருவை சந்திந்து தீட்சை பெற்று தவம்
செய்யுங்கள் .
www.vallalyaar.com
nallathunga iya
நீக்கு