புதன், ஜனவரி 31, 2018

கோ பூஜை ( கோ சேவை )      
                                                     
 

  கடவுள் நம்பிக்கை ஒன்றே இக்கலியுகத்தில் மனிதனை கரையேற்ற சிறந்தவழி . தெய்வ வழிபாடுகள் தான் மனிதனின் தீய எண்ணங்களை அழித்து நல்ல எண்ணங்களை விதைக்கும் . எத்துணை துன்பம் நேரினும் அவனே துணை என்று வாழ்ந்தவர்களை எம்பெருமான் ஆட்கொண்டு அருளினார் என்பது பல அருளாளர்களின் அனுபவ பூர்வமான உண்மை


                                                     அதே போல நம்முடைய இந்துக்களின் வழிபாடுகளில் மிக முக்கியமானது இந்த கோ பூஜை . ஒவ்வொரு மனிதனுக்கும் பலப்பல தோஷங்கள் இருக்கின்றன. பிதுர் தோஷம், பிரம்மஹத்தி தோஷம் , நாகதோஷம் , காலசர்ப்பதோஷம் , களத்திர தோஷம் , மாங்கல்ய தோஷம் , புத்திர தோஷம் , நவக்கிரக தோஷம் என்றுஇன்னும் நிறைய . இதை போன்ற தோஷங்கள் நம்பால் அணுகாதிருக்க பிரதோஷ காலத்தில் நம் அப்பனை தில்லையில் நடம்புரியும் ஆனந்தக் கூத்தனை வழிபடுவதால் நமக்கு எந்த துன்பமும் இல்லை . சிவ வழிபாட்டிற்கு அடுத்து நம்முடைய எல்லாத் துன்பங்களையும் நீக்க வல்லது கோ பூஜை .


                   கோ பூஜையில் கலந்து கொண்டு பசுவை வழிபடுவதால் நம்முடைய எல்லா தோஷங்களும் துன்பங்களும் நிச்சயம் விலகும். ஏனெனில் கோமாதா என்று சொல்லக் கூடிய பசுவின் உடல் பாகங்களில் அத்துணை தேவர்களும் , முகத்தில் எம்பெருமானும் , பின்புறத்தில் திருமகளும் அருள் புரிகிறார்கள் அத்துணை சிறப்பு வாய்ந்த பசுவினை பூஜித்தால் நமக்கு வாழ்வில் எல்லா தோஷங்களும் நீங்கி அனைவருடைய அருளோடு சகல செல்வங்களும் நம் இல்லத்தில் குடி கொள்ளும் நம் சந்ததியையே வாழ வைக்கும் அத்துணை சிறப்பு வாய்ந்தது கோ பூஜை


                       
பசு தெய்வாம்சம் நிறைந்தது அதனை நன்மலர் கொண்டு அர்ச்சனை செய்து தூப தீப ஆராதனை காட்டி வழிபட வேண்டும் . பசு வசிக்கும் இடத்தில் தியானம் செய்வது மிகவும் நல்லது . கோமியத்தை தீர்த்தமாக வீட்டை சுற்றி தெளிக்க தீய சக்திகள் நம்மை அண்டாது மனக்குழப்பங்கள் நீங்கி மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் . மிக எளிமையான முறையில் நம் தோஷங்கள் , பாவங்கள் , துன்பங்கள் அகல ஒரே வழி பசுவிற்கு உணவளிப்பது. பசுவுக்கு புண்ணாக்கு , நாற்றுக்கட்டு என்று வயிறு நிறையும் உணவாக கொடுப்பது மிகவும் சிறந்தது  . நல்லது சிவமேஜெயம்.


                           
 சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 

   
சிவத்தை போற்றுவோம் !!! சித்தர்களை போற்றுவோம் !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக