வெள்ளி, மே 27, 2011

ஆன்மீக சிந்தனைகள்


கடவுள் நம்பிக்கை எதற்காக!




* மதம் என்பது எந்த நிலையிலும் மனிதனுக்கு துணை போக வேண்டும். இல்லாவிட்டால் வாழ்க்கையில் அதற்கு இடம் தர வேண்டிய அவசியமில்லை.


* முதலில் நாம் நம்மிடம் நம்பிக்கை வைத்துக் கொள்ள வேண்டும். அந்த நம்பிக்கை இருந்தால் தான் முன்னேற வழி கிடைக்கும்.


* வாழ்க்கையில் ஏதாவது லட்சியம், கொள்கையில் பிடிப்பு வேண்டும். அந்த கொள்கை வழியில் நடந்தால் நம்முடைய இடர்ப்பாடுகளின் அளவு குறைந்து விடும் அல்லது மட்டுப்பட்டு விடும்.


* ஒரு திட நம்பிக்கையைக் கடைபிடித்து வாழ்க்கையில் சாதனை நிகழ்த்தியவர்களை சரித்திரம் காட்டுகிறது. அதே நம்பிக்கையைச் சற்று விரிவுபடுத்தினால் அது கடவுள் நம்பிக்கையாகி விடும்.


* கடவுள் என்பவர் நம் எல்லோரையும் இணைக்கும் சக்தி. கடவுள் மீது நம்பிக்கை கொள்வது சமூகத்தின் நன்மைக்காகவே. கடவுளை நம்புபவன் உலகத்தை நேசிக்கிறான்.


* கடவுள் கடல் போன்றவர். நாம் கடவுளைத் துணைக்கு அழைத்தால், அந்தக் கடலளவு சக்தியில் ஒரு துளியை மட்டுமே பயன்படுத்துகிறோம். அந்த ஒரு துளியை முழுமையாகப் பயன்படுத்தக்கூட, கடவுள் பற்றிய பூரணநம்பிக்கை இருந்தால் தான் முடியும்.





* கையை இறைவன் படைத்தது கொடுப்பதற்கே, நீ பட்டினியாய்க் கிடக்க நேர்ந்தாலும், உன்னிடத்திலுள்ள கடைசிப் பருக்கையையும் பிறருக்குக் கொடுத்துவிடு, அவ்வாறு பிறருக்கு கொடுப்பதாலேயே நீ பூரணமடைவாய், தெய்வமாகவும் ஆவாய்.

* தன்னை அடக்கப் பழகிக் கொண்டவன், புறத்தேயுள்ள எதற்கும் வசப்பட மாட்டான். அதன் பின் அவனுக்கு அடிமைத்தனம் எதுவுமில்லை. அவன் மனம் விடுதலை பெற்று விட்டது. அத்தகைய நிலைமை அடைந்தவனே உலகத்தில் நன்றாக வாழக் கூடிய தகுதி பெற்றவனாவான்.

* அன்பைக் கொடு, உதவியைக் கொடு, பணியைக் கொடு. இவ்வாறு உலகில் எப்போதும் கொடுப்பவனாக நிற்க வேண்டும். பதிலுக்கு ஒன்றையும் எதிர்பார்க்கக் கூடாது, இறைவன் நமக்குக் கொடுப்பது போன்று நமது ஈகைக் குணத்தால் நாமும் கொடுப்போம்.

* தூய்மையான மனதைப் பெறுவதுடன் இறைவன் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். அவனை 
சார்ந்து நிற்க முனைவதுடன் நன்னெறியில் நிற்க வேண்டும். 


                             ஒவ்வொரு உயிரிலும் கடவுள்

*சுயநலமற்ற தன்மையே கடவுள் ஆகும். ஒருவன் செல்வந்தனாக வாழ்ந்தபோதும் சுயநலம் இல்லாதவனாக இருந்தால் அவனிடம் கடவுள் இருக்கிறார். 

* ஒரு நல்ல லட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்குங்கள். மனிதனாக பிறந்ததற்கு வாழ்ந்து சென்றபின்னும் ஏதாவது அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்.

* உங்களுடைய நரம்புகளை முறுக்கேற்றுங்கள். காலம் எல்லாம் அழுது கொண்டிருந்தது போதும். இனி அழுகை என்ற பேச்சே இருக்கக் கூடாது. சுயவலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து நில்லுங்கள்.

* தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை செய்வதும் தான் எல்லாவழிபாடுகளின் சாரமாகும். ஏழைகளிடமும் பலவீனர்களிடமும் நோயாளிகளிடமும் இறைவனைக் காண்பவனே உண்மையான வழிபாடு செய்பவன் ஆவான்.

* கடவுள் ஒவ்வொரு உயிரிலும் குடிகொண்டிருக்கிறார். இதைத் தவிர தனியாக வேறு கடவுள் ஒருவர் உலகில் இல்லை.


விவேகானந்தர் 


-

1 கருத்து: